Pages

Wednesday, September 8, 2010

"வெனிஸ் திரைப்பட விழாவில் மணிரத்னத்திற்கு விருது"

ராவணன் படத்தினை இயக்கியதற்காக டைரக்டர் மணிரத்னத்திற்கு வெனிஸ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர் விரு வழங்கப்பட்டது. மணிரத்னம் இயக்கத்தில் ராவணன் படம் தமிழ், இந்தி, தெலுங்கில் வெளியானது. இப்படத்தின் இந்திப்பதிப்பிற்கு ராவண் என்று பெயரிட்டிருந்தார் டைரக்டர் மணிரத்னம். ராவண் படம் வெனிஸ் பட விழாவில் திரையிடப்பட்டது. அந்த விழாவில் ராவண் படத்தில் இயக்கியமைக்காக டைரக்டர் மணிரத்னத்திற்கு சிறந்த இயக்குனருக்கான குளோரி விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் மணிரத்னம் அவரது மனைவி சுஹாசினி, நடிகர் விக்ரம் ஆகியோர் கலந்து கொண்டனர். விருது பெற்ற மகிழ்ச்சியை ரசிகர்களிடம் வெளிப்படுத்திய மணிரத்னம், இந்த விருது இந்திய சினிமாவுக்கான அங்கீகாரம், என்று பெருமையுடன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment