பாகிஸ்தானுக்கு 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வழங்க இந்தியா முன்வந்திருப்பதாகச் செய்தி வெளியாகியிருக்கிறது. சியோலில் நடந்த அணுசக்திப் பாதுகாப்பு உச்சி மாநாட்டின்போது பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸô கிலானியிடம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இந்தியாவின் முடிவு குறித்துத் தெரிவித்தாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் இந்த உதவியை பாகிஸ்தான் ஏற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. பாகிஸ்தானின் எரிசக்தித் தட்டுப்பாட்டைச் சமாளிப்பதற்கு இது உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவிலிருந்து பஞ்சாப் மாநிலம் வழியாக பாகிஸ்தானுக்கு மின்சாரம் வழங்கப்படும் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
No comments:
Post a Comment