Thursday, August 9, 2012

ஈழத்துகாக ஆட்சி இழந்தேன் என்று ஒப்பாரி வைக்கிறார் மு..தலை க..ண்ணீர்


ஒப்பாரி வைத்து பிழைக்கும் கட்சி என்பதை பெரியார் அன்றே சொன்னார்

“கண்ணீர் துளிகள்” என்று அதை தொடர்ந்து நிருபித்து வருபவர் தான் மு.க

ஈழப்பிரச்சனையால் ஆட்சியை இழந்தேன் தற்பொழுது கூட ஒரு பேட்டியில் சொன்னார். அவரது ஆட்சி 1991ல் கலைக்கப்பட்டதையே இவ்வாறு குறிப்பிட்டார். இவர் குறிப்பிடுவது பத்மநாபா சென்னையில் வைத்து கொல்லப்பட்டார். அதுவே சட்ட ஒழுங்கு சரியில்லை என்று மத்தியில் ஆளும் அரசு முடிவு செய்து ஆட்சியை கலைத்தது என்கிறார், இதனாலேயே ஈழத்துக்காக ஆட்சியை இழந்தேன் என்கிறார். உண்மை அதுவல்ல

1977ல் நடந்த தேர்தலில் எம்.ஜி.ஆர் கம்யூனிஸ்ட் மார்கிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றார், திமுகவின் மிசாவில் செய்த தியாகங்கள் மக்களுக்கு மறந்துவிட்டது. எம்.ஜி.ஆர் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின் 1980ம் ஜனவரியில் பாராளுமன்ற தேர்தலில் கருணாநிதி காங்கிரஸுடன் கூட்டணி வைத்தார். அப்பொழுது சர்கார் கமிசன் அறிக்கைகள் வந்து அவருடைய பெயர் நாறிக்கொண்டிருந்தது, அதில் இருந்து தப்பிக்க எந்த கட்சியை தமிழகத்தில் அழித்து ஒழிக்க திமுக கட்டமைக்கப்பட்டதோ அந்த காங்கிரசுடன் கூட்டணியை அமைத்து 39 தொகுதிகளில் 37 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. மத்தியில் ஆட்சி அமைத்தவுடன் முதலில் செய்தது தமிழகத்தில் ஆட்சி கலைப்பு பிப்ரவரி மாதம் 17ம் தேதி ஆட்சி கலைக்கப்பட்டது, கருணாநிதி தான் இதன் சூத்திர தாரி.

இதே போல் தான் 1987 எம்.ஜி.ஆர் மறைவிற்கு பின் நடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மத்தியில் 1989ல் நடைபெற்ற தேர்தலில் விபி.சிங் திமுகவின் ஆதரவுடன் முரசொலிமாறன் அமைச்சராகவும் ஆட்சி அமைக்கப்பட்டது. இந்த ஜனதா கட்சி ஆட்சி 1990 நவம்பரில் சந்திரசேகர் பிரதரமாக ஆதிமுக, காங்கிரஸ் ஆதரவுடன் மாற்றி அமைக்கப்பட்டது. அதன் பிறகு 1991 ஜனவரி 31ம் தேதி இவரின் ஆட்சி ஜெயலலிதாவின் வற்புறுத்தலால் கலைக்கப்படுகிறது. இவர் எப்படி எம்.ஜி.ஆரின் ஆட்சியை சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துவிட்டது என்று சொல்லி கலைத்தாரோ அதே போல் ஜெயலலிதாவும் சந்திர சேகரை வைத்து ஆட்சியை கலைத்தார். இதில் ஆறு மாதத்திற்கு முன் நடந்த பதமநாபா கொலை என்பது ஒரு பொறுட்டே அல்ல அப்படியிருந்தால் அன்றே அட்சி கலைக்கப்பட்டிருக்க வேண்டும். மத்தியில் கூட்டணி கட்சிகளின் தேவைகளை தீர்ப்பதற்காக ஆளுபவர்கள் செய்யும் கூத்தே இது. இதனாலேயே அரசியல் சட்டம் பிரிவு 356யை முழுமையாக எதிர்ப்பதாக சொல்லுவார் கருணாநிதி ஆனால் அதை தேவைப்படும் பொழுது தனக்கு சாதகமாகவும் பயன்படுத்திக் கொள்வார்.

இந்த அரசியல் நாடகத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி இப்பொழுது ஈழத்துகாக ஆட்சி இழந்தேன் என்று ஒப்பாரி வைக்கிறார் மு..தலை க..ண்ணீர்

No comments:

Post a Comment