Friday, November 18, 2011

The reason for such steep hike in TN Govt Bus, Aavin...

ஆச்சர்யப்பட்டேன்..விலைஉயர்வை எப்படி அம்மா அவர்கள் இவ்வளவு காலம் தள்ளிப்போட்டு வந்தார்கள் என்று..! அம்மா அவர்கள் ஆட்சிபொறுப்பை ஏற்றபோதே இதை செய்திருக்கவேண்டும்..அந்த அளவுக்கு திமுகவின் நிர்வாக சீரழிவு இருந்தது..!போக்குவரத்து துறைக்கு வரவேண்டியை பணமெல்லாம் திமுகவினரின் கஜானாவுக்கு திருப்பபட்டுவிட்டது..அப்போதே பொதுமக்களின் குரல் இதுபற்றி ஒலிக்கப்பட்டது.!! மறைமுகமாய் பஸ் கட்டண உயர்வை..பஸ்ஸின் "கலருக்கு" ஏற்றபடி உயர்த்தி வசூலிக்கப்பட்ட அந்த தொகையெல்லாம் "கணக்கில்" வாராமல்..கட்சிக்கே திருப்பப்பட்டது..இதை பற்றி நான்கூட தினமலரில் புகார் வாசித்துள்ளேன்.! அப்படிப்பட்ட நிலையில் "போக்குவரத்து" துறை இயங்கியது..! அமைச்சர் நேருவுக்கு திருச்சி மாவட்டம் முழுக்க கட்டபஞ்சாயத்துக்கும்..மிரட்டி நிலங்களை பிடுங்குவதர்க்குமே நேரம் போதாது இருந்தது..மிகப்பெரிய நஷ்டத்தில் இயங்கும் இந்த துறையை மீட்டெடுக்க வேறு வழியுமில்லை..! ஒரு குடும்பத்தை சிறப்பாக நிர்வகிக்க அம்மாவை விட யாரால் முடியும்..? ஊதாரித்தனமான சுயவிளம்பர பிரியருக்கு மானாட மயிலாட என்று காலம்தள்ளிவிட்டு..மின் உற்பத்தியை உயர்த்த பாடுபட்டாரா? ஆயிரத்து இருநூறு கோடிகளுக்கு சட்டசபை கட்டிடம் தேவையா? நூறுகோடிகளுக்கு மேல் நூலகம் தேவையா? நித்தமும் ஒரு மனிதருக்கு "பாராட்டு" தேவையா? இப்படி இருந்த அந்த எதற்குமே லாயக்கில்லாத திமுகவை பதவியில் அமர்த்திய மக்களுக்கு இப்போது இந்த சுமையை திணிக்க நேர்ந்தது அம்மாவின் களங்கமில்லா மனதுக்கு எவ்வளவு கஷ்டம் என்று புரிந்தவர்களுக்கு தெரியும்..! அம்மாவின் அரசு இதுவரை தான்தோன்றித்தனமாய் ஒரு பாராட்டு விழா என்றோ..அல்லது வீண் ஜம்பமாய் பகட்டான விழா என்றோ நடத்தியதில்லை..! அதனால் அம்மா மீது புகார் வாசிக்கும் எதிர்கட்சியினர்..இதிலே அரசியல் "குளிர்" காண முயற்சிப்பதாய் நினைத்து "மூட்டவேண்டாம்" தீயை..! மக்களின் காற்று இப்போதுமட்டுமல்ல எப்போதுமே அம்மா பக்கமே வீசிகொண்டிருக்கும்..அதனால் வீண் பேச்சு தவிர்த்து உண்மை நிலையை "உணர்ந்து" அரசுக்கு ஆதரவாய் இருங்கள்..மக்களை போன்று..!! 2001 - 2006 திமுகவிற்கு மறைமுகமாய் வாக்குகளை பிரித்து உதவியை அந்த தவறான காரியத்தால் பாருங்கள் எப்படிப்பட்ட கஷ்டமான சூழலை அம்மாவின் அரசு எதிர்நோக்குகின்றது என்று..!! பதவி ஏற்ற உடனே அம்மா அவர்கள் திமுக அரசு செய்த பித்தலாட்டங்களை எலாம்.."வெள்ளை அறிக்கையாய்" மக்களுக்கு கொண்டு சென்றிருக்க வேண்டும்..! அம்மா அவர்கள் அரசியல் செய்ய விரும்புவதில்லை..! மக்கள் விரோத அரசு என்று வாய் கிழிய வழமை போன்று கத்தி பேசும் ஒருசில அரசியல் தலைகளே...நீங்கள்தான் மக்களால் "விரோதிகள்" என்று ஒதுக்கப்பட்டவர்கள் என்று உணராமல் நகைப்புக்குரிய அறிக்கைகளை விட்டு இன்னமும் கீழாய் செல்லவேண்டாம்..!! அம்மா அவர்கள் மக்களிடம் வந்துள்ளார்..ஆதரிப்பவர்களே மனிதர்கள்..! எதிர்ப்போர் ஓட்டு வியாபாரிகள்..! நாம் மனிதர்களாய் இருப்போம்..என்றென்றும்..!!

இப்போது உள்ள அணைத்து நிர்வாக சீர்கேட்டுக்கும் காரணம் திமுக தான். தமிழக அரசு கடனில் தத்தளிக்கும் போது ஏன் இலவசங்களை கொடுக்கிறீர்கள், நாங்கள் இலவசம் கேட்டோமா என்று திமுக சொம்புகள் கூறுகிறார்கள். அம்மா இலவசங்கள் கொடுக்க முழு முதல் காரணம் கருணாநிதி தான். இலவச கலாசாரத்தை அறிமுக படுத்தியவரே கருணாநிதி தான். தமிழர்களை இலவசங்களுக்கு அடிமைபடுதியதே கருணாநிதி தான். 2001 தேர்தல் அறிக்கையும், 2006 திமுக அதிமுக தேர்தல் அறிக்கையும் எடுத்து பார்த்தால் தெரியும். கடந்த சட்டமன்ற தேர்தலில் முதலில் அதிக அளவு இலவசங்கள் சேர்த்து தேர்தல் அறிக்கை விட்டது திமுக தான். ஒரு வேளை திமுக ஆட்சிக்கு வந்திருந்தாலும் லேப் டாப், grinder மிக்சி எல்லாம் கொடுத்திருப்பார். கருணாநிதி கொடுத்த இலவசங்கள், அம்மா கொடுக்கும் இலவசங்களை பாப்போம். தொலைக்காட்சி கொடுத்து, கேபிள் டிவி மூலம் குடும்ப கஜானாவை நிரப்பினார். மேலும் இந்த ஆர்டர் கொடுததர்க்காக தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து பல கோடி ரூபாய் திமுக லஞ்சம் வாங்கியது. இரண்டு ஏக்கர் நிலம் என்று அறிவித்து திமுகவினர் அட்டைய போட வழி வகுத்தார். ஒரு ரூபாய் அரிசி என்று கூறி நல்ல அரிசியை வெளி மாநிலங்களுக்கு கடத்தி கமிஷன் வாங்கினார். இது போல பல திட்டங்களில் கொள்ளையடித்தார். அம்மா தேர்தல் அறிக்கையில் கூறியதை கொடுக்கவில்லை என்றால், கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை என்று திமுக பிரசாரம் செய்வார்கள். மேலும் இந்த விலை உயர்வு என்பது ஏற்று கொள்ள கூடியது தான். 30 பைசா விலையேற்றத்தால் ஒன்றும் பாதிப்பு இல்லை. இப்போது கூவும் திமுக, மத்திய அரசு பெட்ரோல் விலை உயர்த்தினால் வாயை மூடி மவுனம் சாதிப்பது எதனால்? மத்தியில் 28 MP க்களை வைத்து கொண்டு பல முறை பெட்ரோல் விலை ஏற்றியதை கண்டித்து ராஜினாமா செய்தார்களா? இல்லை. தமிழகத்திற்கு நிதி கிடைக்காமல் முட்டு கட்டை போடுகிறார்கள். மேலும் நேரு போக்குவரத்து துறையில் செய்து விட்டு சென்ற குளறுபடிகள் ஏராளம். பல ஆயிரம் கோடி ரூபாய் ஏப்பம் விட்டு சென்றிருக்கிறார். அதனால் தான் போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குகிறது. நல்ல முறையில் திமுக நிர்வாகம் செய்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது. கருணாநிதிக்கு தெரியும், அதிமுக வந்தால் விலை ஏற்றி கெட்ட பெயர் வாங்கவேண்டும் என்றே அரசு கஜானாவை துடைத்து விட்டு சென்றார். ஒவ்வொரு முறையும் கஜானாவை ஏதாவது ஒரு விதத்தில் துடைத்துவிட்டு செல்லுவார், அம்மா வந்ததும் கெட்ட பெயர் வாங்குவார். இது தான் கருணாநிதியின் எண்ணம்.

No comments:

Post a Comment