தற்போது ஐநா மனித உரிமைக் கழகத்தில் வாக்களிக்கும் உரிமையுள்ள நாடுகள் 47:
Angola, Argentina, Austria, Benin, Botswana, Brazil, Burkina Faso, Chile, Congo, Costa Rica, Ivory Coast, Czech Republic, Ecuador, Estonia, Ethiopia, Gabon, Germany, Guatemala
India, Indonesia, Ireland, Italy, Japan, Kazakhstan, Kenya, Kuwait, Libya, Malaysia, Maldives, Mauritania, Montenegro, Pakistan, Peru, Philippines, Poland, Qatar, Republic of Korea
Republic of Moldova, Romania, Sierra Leone, Spain, Switzerland, Thailand, Uganda, United Arab Emirates, USA, Venezuela
2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ம் திகதி அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணைக்கு ஆதரவு: 24 நாடுகள் எதிர்ப்பு: 15 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாதவை: 8 நாடுகள்
ஆதரித்த நாடுகள்:
Benin,Cameroon, Libya, Mauritius, Nigeria, India, Chile, Costa Rica, Guatemala, Mexico, Peru, Uruguay, Austria, Belgium, Italy, Norway, Spain, Switzerland, USA, Czech Republic, Hungary, Poland, Moldova, Romania
எதிர்த்த நாடுகள்:
Congo (Brazzaville), Mauritania, Uganda, Bangladesh, China, Indonesia, Kuwait, Maldives, Philippines, Qatar, Saudi Arabia, Thailand, Cuba, Ecuador, Russia
வாக்களிக்காதவை:
Angola, Botswana, Burkina Faso, Djibouti, Senegal, Jordan, Kyrgyzstan, Malaysia
இலங்கைக்கு எதிராக வாக்களித்த 24 நாடுகளில் பின்வரும் 9நாடுகள் சுழற்ச்சி முறையில் தமது உறுப்புரிமையை இழந்து விட்டன:
Cameroon, Mauritius, Nigeria, Mexico, Uruguay, Belgium, Norway, Hungary.
இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த 15 நாடுகளில் பின்வரும் 5 நாடுகள் சுழற்ச்சி முறையில் தமது உறுப்புரிமையை இழந்து விட்டன:
Bangladesh, China, Saudi Arabia, Cuba, Russia,
புதிதாக இணைந்து கொண்ட நாடுகள்:
சென்ற ஆண்டு கொண்டு வந்த தீர்மானதில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளில் ஐந்து உறுப்புரிமையை இழக்க புதிதாக வந்த நாடுகளில் ஆறுக்கு மேற்பட்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும். ஆகக் கூடியது மொத்ததில் புதிதாக வந்த எட்டு நாடுகள் இலங்கைக்கு சாதகமானவை எனலாம். இலங்கையின் நிலை பலமடைந்துள்ளது.
புதிதாக வந்த நாடுகளில் ஜப்பானும், தென் கொரியாவும் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு எதிராக ஒரு போதும் வாக்களிக்க மாட்டாது எனக் கூறலாம். அவை அமெரிக்காவிற்கு சாதகமாக வாக்களிக்கும். அதிலு தென் சீனக் கடல் சீனாவிற்கு உரியது என கோத்தபாய ராஜபக்ச சொன்ன பின்னர் அவை இலங்கைக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுக்க முடியாது. மெக்சிக்கோவின் இடத்திற்கு வந்த பிரேசிலும் அமெரிக்காவிற்கு ஆதரவாகவே வாக்களிக்கும்.
ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று ஏற்கனவே அறிவித்த படியால் புதிதாக வந்த எஸ்டோனியா, ஜேர்மனி, அயர்லாந்து ஆகிய நாடுகள் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கும். ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமை கோரி நிற்கும் மொன்ரிநிக்ரோ நாடும் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும்.
புதிதாக வந்த நாடுகளில் ஏழு நாடுகள் அமெரிக்காவிற்கு நிச்சயம் வாக்களிக்கும். தமிழர் தரப்பு தகுந்த பிரச்சாரம் செய்தால் எதியோப்பியா அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும்.
இலங்கைக்கு சென்ற ஆண்டுகள் கிடைத்த வாக்குகளிலும் பார்க்க மூன்று வாக்குகள் கூடக் கிடைக்கும் வாய்ப்புண்டு. வாக்கெடுப்புக்க்கு விடப்பட்டால் அமெரிக்காவின் தீர்மானம் 25 நாடுகளின் ஆதரவுடனும் 18 நாடுகளின் எதிர்ப்புடனும் வெற்றி பெறும். இதை உணர்ந்த இந்தியா தனக்கு ஏற்படும் சங்கடங்களைத் தவிர்க்க இலங்கையை தீர்மானத்தை எதிர்க்காமல் விடும்படி கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் வக்கெடுப்பின்றி நிறைவேறும் சாத்தியம் இருக்கும் அதே வேளை இந்தியா மீண்டும் தீர்மானத்தின் கடுமையைக் குறைக்கும் அத்துடன் இலங்கைக்குத் தேவையான கால அவகாசத்தையும் பெற்றுக் கொடுக்கும். சிங்களப் பேரினவாதிகளின் கண்டனத்தில் இருந்தும் இந்தியா தப்பிக்கொள்ளும்
(Got t from my friend through a forward mail)
No comments:
Post a Comment