Thursday, February 6, 2014

2ஜி ட்ரிங்...ட்ரிங்......

தேதி: 13. 02. 2011
ஷரத்: சார், அந்த சினியுக் ஆட்கள் டெல்லி, மும்பையில் இருந்து பேசினார்கள். அவர்களுக்குக் கிடைத்த தகவல்படி, அநேகமாக இந்த வாரம் (அதாவது CBI அதிகாரிகளைச் சொல்கிறார்கள்!) வந்துவிடுவார்கள். இந்த தடவை கேள்விகளோடு மட்டும் வரமாட்டங்க. இயக்குநர்களை கைதுசெய்யவும் வருவார்கள். அதனால் தயாராக இருக்குமாறு சொன்னார்கள். எப்படி இவ்வளவு உறுதியாக சொல்றீங்கன்னு நான் கேட்டேன். அதற்கு அவர், எங்கள் தகவல் 100% சரி. உங்கள் தலைவரிடம் சொல்லிவிடுங்கள் என்றார்கள்.
     இது மதியம். இப்போது தலைவரிடம் சொல்ல முடியாது என்று நான் கூறினேன். சரி, அப்ப இந்த விஷயத்தை எப்படிக் கையாளுவதென்று நீங்கள் முடிவுசெய்துகொள்ளுங்கள். இதைத்தாண்டி எங்களால் எதுவும் சொல்ல முடியாது என்றார்கள்.
ஜாஃபர்: போன தடவையும் அவர்கள் இதைத்தானே சொன்னார்கள்... டி.வி. அலுவலகத்துக்கு வருவார்கள் என்று சொன்னார்கள். நினைவிருக்கிறதா?
ஷரத்: ஆமாம். இப்போதும் சொன்னார்கள். எல்லாம் தயாராக இருக்கிறது. இப்போது அவர்கள் வருவது விசாரணைக்கு அல்ல. கைதுக்கு. ஆகையால் இது குறித்து நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும். நீங்கள் உங்கள் சோர்ஸ்களில் விசாரித்துவிட்டு, இதை உறுதி செய்யுங்கள்!
ஜாஃபர்: முதலில் நாம் இதை சரிபார்க்க வேண்டும். பரிவர்த்தனை விவரங்களைத் தெரிவித்து விட்டோம். அவர் (கனிமொழி) இயக்குநர் இல்லை என்பதையும் தெரிவித்துவிட்டோம். அவர் பங்குகளை மட்டுமே வைத்துள்ளார். மற்றொரு இயக்குநர் அங்கே இல்லை. இதுபோன்ற விவரங்கள்....
ஷரத்: சார். அந்தப் பரிவர்த்தனை நடக்கையில் அவர் (கனிமொழி) அங்கே இருந்தார். அதுதான்....
ஜாஃபர்: என்ன..? என்ன..?
ஷரத்: சார், பரிவர்த்தனை நடந்தபோது அவரும் அங்கே ஒரு இயக்குநர்
ஜாஃபர்: உண்மையாகவா?
ஷரத்: ஆமாம் சார்.
ஜாஃபர்: அன்றைக்கு இல்லை என்று சொன்னீர்களே....
ஷரத்: சார், அவர் டிசம்பர் மாதத்தில் இயக்குநர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். எல்லாம் பழைய தேதிகள் சார். இப்போது உட்கார்ந்து சரிபார்த்துக்கொண்டிருக்கிறேன்.
ஜாஃபர்: இல்லை. டிசமப்ரில் ராஜினாமா. அது உள்ளே வருகிறதா என்ன?
ஷரத்: சார், பணம் 2008-ல் தானே வந்தது?
ஜாஃபர்: ஓ. இந்த டிசம்பரில்தானே அவர் ராஜினாமா செய்தார்?
ஷரத்: ஆமாம் சார். இந்த டிசம்பரோ, போன டிசம்பரோ. ஆனால் அவர் அந்தக் காலகட்டத்தில் இயக்குநராக இருந்தார். நான் ஒரு 100 பக்கங்களைப் பின்தேதியிட்டு நேற்றுதான் கையெழுத்திட்டேன். எல்லாவற்றையும் நகல் எடுத்துப் படித்துக் கொண்டிருக்கிறேன்.
ஜாஃபர்: ம்ம்ம்ம்
ஷரத்: பிரச்னை என்னவென்றால், நாம் பல விஷயங்களைக் கேள்விப்படுகிறோம். பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன். அதற்கு தகுந்தாற்போல, ஆவணங்களைத் திருத்துகிறோம். அதனால் பக்கங்கள் மாறிவிடுகின்றன.
ஜாஃபர்: ம்ம்
ஷரத்: கனி மேடம் 2007-ல் இல்லை. 2007-க்குப் பிறகு பெரியம்மா (தயாளு அம்மாள்) இருந்தார்
ஜாஃபர்: பெரியம்மா இருந்தது எனக்கு தெரியும். அவருக்கு ஆங்கிலமும் தெரியாது, தமிழும் தெரியாது என்பதால் அவர் இருந்தார்.
 ==========

தேதி: 16. 02. 2011
கனிமொழி மற்றும் ஜாஃபர் சேட் இடையே நடைபெற்றதாக ஆடியோவில் உள்ள உரையாடல். இந்த உரையாடல் நடைபெறும்போது, தமிழக மீனவர்களுக்காக இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டு கனிமொழி கைதாகியிருந்தார்.
ஜாஃபர்: மேடம். நான் அந்த அறிக்கையை அப்படியே படிக்கிறேன். சரியாக இருக்கிறதா என்று சொல்லுங்கள். நான் தலைவரிடம் சொன்னேன். அவர் சரியாக இருக்கிறது என்றார். நீங்கள் சரியாக இருக்கிறதா என்று சொல்லுங்கள்
     10.02.2011 அன்று  நான் விடுத்த அறிக்கையில் 2007-08-ம் ஆண்டில், மத்திய தொலைத்தொடர்புத் துறை ஒதுக்கிய 2ஜி அலைக்கற்றை விவகாரத்துக்கும், 2009-ம் ஆண்டில் கலைஞர் தொலைக்காட்சி மற்றும் சினியுக் நிறுவனத்துக்கும் நடந்த பணப் பரிவர்த்தனைக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்றும் சினியுக் நிறுவனத்திடம் இருந்து கடனாகப் பெறப்பட்ட 200 கோடி ரூபாய் திருப்பித் தரப்பட்டுவிட்டது என்றும், அதற்கு வட்டியாக 31 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது என்றும் இந்தப் பரிவர்த்தனைகள் அத்தனையும் வருமான வரித் துறைக்குத் தெரியப்படுத்தப்பட்டுவிட்டது என்றும் அதற்கான வரியும் முறையாக செலுத்தப்பட்டது என்றும் தெரிவித்திருந்தேன். இதற்குப் பிறகும், இந்தக் கடன் பரிவர்த்தனை குறித்து மத்திய புலனாய்வுத் துறை நீதிமன்றத்திலே குறிப்பிட்டுள்ளது. எனவே, மத்திய புலனாய்வுக்குத் துறைக்கோ, வருமான வரித்துறைக்கோ எந்த விதமான சந்தேகமும் இருக்குமானால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் கலைஞர் தொலைக்காட்சியின் கணக்குகளைச் சரிபார்த்து தங்கள் சந்தேகளைத் தீர்த்துக்கொள்ளலாம். அதற்கு எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. ஷரத்குமார், நிர்வாக இயக்குநர், கலைஞர் தொலைக்காட்சி.
கனிமொழி: நாமாக முன்வந்து தெரிவித்தது போலாகிவிடும். நல்லது.

=====================================


ஜாஃபர் சேட்டுக்கும், கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனுக்கும் இடையே நடைபெற்றதாக வெளியாகியிருக்கும் உரையாடல்.

ஜாஃபர்: ஜாஃபர்.
சண்முகநாதன்: சார் வணக்கம்.... சண்முகநாதன்.
ஜாஃபர்: சார், பேசிட்டேங்க சார். அவர் மொதல்ல 60 ரெடி பண்ணிடறேங்கறாராம்
சண்முகநாதன்: சரி
ஜாஃபர்: 60-ல்லாம் செடியா இருக்குது. அட்வர்டைஸ்மென்ட் மாதிரி குடுத்துறேங்கறாராம். அஞ்சு வருஷத்துக்கு அட்வர்டைஸ்மெண்டுக்குன்னு போட்டு குடுத்துடறேங்கறாராம். இன்னொரு இருபதுக்கு வழிபண்ணித் தர்றேன். உடனே பண்ண முடியாதுங்கறாராம். என்ன சொல்றாருன்னா, 60 கன்ஃபர்ம் ஆயிடுச்சு. நான், சரி அந்த அறுபதுக்கு மொதல்ல வொர்க் அவுட் பண்ணுங்கன்னு சொன்னேன். மீதி நாப்பதுக்கு வேற வழி வேணும்னு சொன்னேன். மொதல்ல இருபதை பேசுவோம். நான் இன்னொரு தடவை அவர்கிட்ட பேசிப் பாத்ஹ்டுட்டு சொல்றேன்னு சொல்லிட்டு, அஞ்சு வருஷத்துக்கு அட்வர்டைஸ்மென்ட் மாதிரி குடுத்துடறாருங்க சார். அதைக் கொடுத்து அறுபதை குடுத்துடுறாரு இவங்க கம்பெனிக்கு.
சண்முகநாதன்: அட்வர்டைஸ்மெண்டுனா கரெக்டா இருக்காதே...
ஜாஃபர்: நான் நேரா இன்னொரு தடவை பேசிடுறேன் சார். ஈவினிங் பேசடறென். அறுபது ஸ்ர்டி பண்ணிட்டாரு. அறுபது ரெடி சார். இன்னும் இருபது ரெடி பண்ணிடுறேன்னு சொன்னாரு சார். இன்னொண்ணு சென்னாராம். நீங்க பர்மிஷன் வாங்கி சொன்னீங்கன்னா, எனக்குத் தெரிஞ்சு இன்னொருத்தர் இருக்காரு. அவர் மூலமா இன்னொரு நாப்பது ரெடி பண்ணிடலாம்னு சொன்னாரு. அது யாருன்னு போன்ல வேணாம். நான் நேரா பாத்துட்டு ஈவினிங் சொல்றேன் சார். தேங்க்யூ சார்.

சண்முகநாதன்: தேங்க்யூ
========================================

No comments:

Post a Comment