Monday, January 7, 2013

Why Indian women faces sexual harassment now a lot? (in tamil)

This article was seen in facebook
But it reveals some truth about the modern 'cultured' society

பெண்கள் கற்பழிக்க படுவதற்கு காரணம் என்ன என்று நாங்கள் ஓட்டெடுப்பு நடத்தினோம்..ஓட்டளித்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் எமது நன்றிகள். அதிகபட்ச நபர்கள் பெண்கள் அணியும் அரை குறை ஆடை தான் என்று ஓட்டு அளித்து இருந்தார்கள் இன்று நாம் நிறைய இடங்களில் பார்க்கிறோம் பெண்கள் அரை குறை ஆடை அணிந்து தான் வருகிறார்கள் .பார்க்கும் ஆண்களை சபலபடவைக்க இதவும் ஒரு காரணமாகவே அமைகிறது .அதற்க்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான் உன்னுடைய வீட்டை சுற்றமாக்கு நாடு தானாகவே சுற்றமாகும்

அப்படி அரை குறை ஆடை அணிவது நம் சகோதரியாக கூட இருக்கலாம், நம் பிள்ளைகளாக கூட இருக்கலாம் . முதலில் அவர்களுக்கு வீட்டில் ஒழுக்க நெறிகளை சொல்லி கொடுத்து வளர்ப்பது நமது தலையா கடமை இருக்கிறது . வீட்டில் தந்தை அண்ணன் ,தம்பி , மற்றும் வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும் இருக்கிறார்கள் அவர்களை மீறி எந்த பெண்ணும் அரை குறை ஆடை அணிவது இல்லை முதலில் நமது வீட்டில் உள்ள பெண்களின் ஆடை கொஞ்சம் ஆபாசமாக தெரிந்தால் கண்டிப்பாக கண்டிப்பது நமது கடமை .அதை விட்டு விட்டு அவர்களை நாம் அரை குறையாக ஆடை அணியவைத்து ஷாப்பிங் மாலுக்கும் பீசிக்கும் ,படத்திற்கும் அழைத்து கொண்டு திரியும் நிறைய தாய் தந்தை இருக்கிறார்கள் அவர்களை பார்க்கும் போது தான் அரை குறை ஆடை அணியும் பெண்கள் மீது தவறு இல்லை அவர்களின் தாய் தந்தை சகோதர்கள் மீது தான் தவறு என்று தெள்ள தெளிவாக தெரிகிறது . இவர்கள் தன்னுடைய சகோதிரிகளை அரை குறை ஆடை அணியவைத்து எப்படி அழைத்து வருகிறார்கள் என்று தெரியவில்லை ?உண்மையில் சிந்திக்க வேண்டிய விசையம் தான்

நம் தமிழ் நாட்டில் இன்று தாவணி என்று சொல்லுவார்கள் அப்படி என்றால் என்ன வென்று கேட்கும் அளவிற்கு போய் கொண்டு இருக்கிறது . இன்று நிறைய சகோதரிகள் சுடிதாருக்கு துப்பட்டா அணிவதே இல்லை கேட்டால் நாகரிகம் என்று சொல்லுகிறார்கள் எப்படி வேண்டுமானாலும் வாழ்வது வாழ்க்கை அல்ல இப்படி தான் வாழ்வது என்பது தான் வாழ்க்கை .
பெண்கள் அரைகுறை ஆடை ,இறைவனின் படைப்பில் பெண்கள் ஒரு அழகான படைப்பு ,இன்றோ பெண்களின் சுதந்திரம் என்ற போர்வையில் நாகரிகம் என்ற போர்வையில் பெண்களை போதை பொருளாக கண்பிப்பது இதற்கு பெண்களின் இயக்கங்கள் மௌனம் சாதிப்பது இது தான் பெண் சுதந்திரமா??? இதுவும் ஒரு பெணிற்கு எதிரான விபசாரமே அதுவும் corporate விபச்சாரம் !
இன்று இந்தியாவில் பெண்களின் நிலை என்ன நாகரிகம் வளர வளர பெண்கள் பாலியல் கொடுமைகளும் ,கற்பழிப்புகள் அதிகமானது என்று சொன்னால் மிகை ஆகாது ! இதிலிருந்து உடை கட்டுபாடும் இது போன்ற குற்றங்களை தடுபதற்கான ஒரு வழி என்பது நிதர்சனமான உண்மை . இன்று மத்திய பிரதேசத்தில் ஒரு சட்டம் இயற்ற பட்டது பெண்களின் மீது acid உற்றினால் 3 லட்சம் அபரதாமம் ! என்ன ஒரு கடுமையான சட்டம் ,இந்த சட்டத்தை இயற்றிவர்கள் மீது தான் முதலில் acid எரிய வேண்டும்.. பெண்கள் கற்பழிக்க படுவத
ற்க்கு அரைகுறை ஆடை மட்டும் காரணமாகவும் எடுத்து கொள்ள முடியாது .

இன்று நாம் 'தொ
ல்லை'க்காட்சிகளில் நாம் குடும்பத்தோடு பார்க்க முடிகிறதா முகம் சுளிக்கும் வனமாகவே இருகிறது .தந்தை பிள்ளைகளோடு தொலை காட்சியே பார்க்க முடியவில்லை இன்று சாதாரண விளம்பரத்தில் கூட ஆபாசம்.'தொல்லை'க்காட்சியே திறந்தாலே ஆபாசமாக தான் இருக்கிறது . கிரிக்கெட் IPL விளையாட்டிலும் கூட ஆபாசம் தேவை படுகிறது .பெண்களை போதை பொருளாகவே பயன்படுத்துகிறார்கள் இதை எல்லாம் பார்த்து மக்களின் மனம் மரத்து போய் விட்டது .உடை கட்டுப்பாடு இருந்தாலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் சில காமவெறி கொண்ட கயவர்களால் நடந்து கொண்டு தான் இருக்கிறது இவர்களை தண்டிக்க எப்படி பட்ட சட்டம் இயற்றலாம் ??? கடுமையான சட்டங்கள் வராதவரை இது போன்ற அனச்சாரங்களுக்கு முடிவிற்கே வராது..

No comments:

Post a Comment