Tuesday, April 9, 2013

Chennai will host the World Chess Championship


Reigning world chess champion Viswanathan Anand will defend his title against challenger Magnus Carlsen of Norway in November in Chennai. Tamil Nadu Chief Minister Jayalalithaa informed the Assembly (April 08, 2013) that the World Championship for 2013 would be held in Anand’s hometown between November 6 and 26 and the government would allot Rs. 29 crore for the event.
Making a suo motu statement, Ms. Jayalalithaa said when the World Chess Federation president Kirsan Illyumzhinov met her in 2011, he requested her to hold the World Chess Championship in Chennai. She agreed to do so at a cost of Rs. 20 crore.
She said that, it failed to materialise as Russia made the highest bidding for the championship. Since Tamil Nadu came forward to organise the event in 2012, the World Chess Federation agreed to hold it in Chennai without bidding.
Earlier Tamil Nadu government banned Asian Athletics Meet (Scheduled to be held at Chennai) citing the reason Sri Lankan players participation will hurt the Tamil People sentiments. More recently Tamil Nadu government banned Lankan players participations in IPL matches that will happen in Chennai. Gone is Asian Athletics, coming is World Chess Championship.

Related Links:

ஒரு ஆரம்பப் பள்ளியின் அரிய புரட்சி

ஒரு ஆரம்பப் பள்ளியின் அரிய புரட்சி
----------------------------------------------------
உங்களால் நம்ப முடியுமா?
ஒரு குக்கிராமத்திலிருக்கும் துவக்கப் பள்ளிக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் வந்துபோகிறார். கல்வித்துறை உயரதிகாரிகள் வந்துபோகின்றனர். அண்ணா பல்கலைக் கழகத்தின்
துணைவேந்தர் வந்துசெல்கிறார்.
ஒரு தேசியக்கட்சியின் மாநிலச் செயலாளர்
பள்ளிக்கு வந்துசெல்கிறார்.
விஜய் தொலைக்காட்சி 2013 புத்தாண்டில்
தன் ----முகங்கள்-- நிகழ்ச்சியில்
தமிழகத்தில் தலைசிறந்த அரசுப் பள்ளி என தேர்வு செய்து அறிவிக்கின்றது.
ஆந்திராவில் துணை மாவட்ட ஆட்சியராகப் பணிபுரியும் தமிழக IAS அதிகாரி
தனது பகுதியிலும் இதேபோல் செயல்படுத்த விரும்புவதாகத் தொலைபேசுகிறார்.
பக்கத்து மாநிலங்களிலிருந்து ஒரு சுற்றுலா போல வந்துபோகின்றனர்.

…….. இங்கே எழுதப்பட்டது ஒருசில மட்டுமே..
ஏனெனில் அப்பள்ளியின் பணி ஏராளம்.

இத்தனைபேரும் விழிவிரியப் பார்க்கவும், அளவிற்கதிமாக இப்பள்ளியினை நேசிக்கவும்
என்ன காரணம்?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழகத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் ஒன்றுதான் இந்தப்பள்ளியும்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்திலிருந்து அன்னூர் செல்லும் சாலையில் 5வது கி.மீ தொலைவில் காரமடை, சிறுமுகை நான்குசாலைப் பிரிவில் சிறுமுகை செல்லும் சாலையில் சென்றால் மௌனமாய் உலகிற்கு ஒரு முன்மாதிரியாய் நிமிர்ந்து நிற்கின்றது இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப்பள்ளி.

முதலில் தன்மீதும் அடுத்து பிறர்மீதும் குற்றம் காணாத மனிதன் சர்வநிச்சயமாக முன்னேறியே தீருவான்.
தன் சமூகத்தையும் முன்னேற்றுவான். அப்படிப்பட்ட மனிதர்களாகத்தான் தெரிகின்றனர், இந்த பள்ளியில் பணியாற்றும் தலைமையாசிரியை திருமதி. சரஸ்வதி மற்றும் ஆசிரியர் திரு.ஃப்ராங்ளின் ஆகியோர்.

தங்களிடம் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஒரு உன்னதமான கல்வி அனுபவத்தை தந்துவிடவேண்டுமென வேட்கை கொண்ட ஆசிரியர் ஃப்ராங்ளின் தலைமையாசிரியை உதவியுடன் பள்ளியில் இருக்கும் இரண்டு வகுப்பறையில் ஒன்றை முதலில் புதுப்பிக்க முடிவெடுக்கிறார்.

ஆசிரியர்கள் இருவரும் தங்கள் சொந்த பணத்தில் இருந்து பெரிய தொகை ஒன்றினை அளித்து
அந்த வேள்வியைத் தொடங்குகின்றனர்.

வளரும் தலைமுறைக்காகத் தொடங்கிய வேள்வியில் அவர்களின் பங்களிப்பு, அர்ப்பணிப்பு, நோக்கம் ஆகியவற்றை உணர்ந்த, அவர்களின் செயல்பாட்டின் மேல் அன்பும் மரியாதையும் நம்பிக்கையும் கொண்ட கிராமத்தினரின் ”கிராம கல்விக்குழு”வும் கை கோர்க்க நான்கே மாதத்தில் சுமார் ரு.2.5 லட்சம் செலவில் ஒரு வகுப்பறை முற்றிலும் நவீனப்படுத்தப்படுகிறது.

2011ம் கல்வியாண்டில் பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு பேரதிசயம் ஒன்று காத்திருந்தது. அதுவரை கண்டிராத ஒரு புதுச்சூழலுக்குள் தங்களைப் புகுத்திக் கொள்கின்றனர்.

பள்ளி குறித்த செய்திகள் இணையம், வார இதழ்கள், தொலைக்காட்சி வாயிலாக உலகத்திற்கு ஓரளவு தெரியவருகின்றது.

இதனைக் கேள்விப்பட்ட கோவை மாவட்ட ஆட்சியர் எம்.கருணாகரன் அவர்கள் வருகை தந்ததோடு, இதே போன்று மாவட்டத்தில் விரிவாக்கம் செய்ய, முதற்கட்டமாக ஆனைகட்டி, பொள்ளாச்சி, தொண்டாமுத்துார் உட்பட நான்கு பள்ளிகளை சீரமைக்க உத்தரவிட்டு நிதி ஒதுக்கீடு செய்கிறார்.

பள்ளியின் ஒரு வகுப்பறையை மட்டும் செம்மைப் படுத்தியதோடு நின்றுவிடாமல், மேலும் பொதுமக்கள் நிதியோடும், ஆட்சியர் வாயிலாகவும், ”அனைவருக்கும் கல்வி திட்டம்” வாயிலாகவும் நிதி பெற்று அடுத்தடுத்த பணிகளை இராமம்பாளையம் பள்ளியில் மேற்கொள்கின்றனர்.

பணிகள்
********
.*பள்ளி சுற்றுச்சுவர் ரூ.4,50,000 செலவில் கட்டப்படுகிறது
(இதில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் ரூ.3,08,000, மீதி நன்கொடை).

*அடுத்ததாக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் ரூ. 5,00,000 நிதிபெற்று அதோடு மேலும் நிதிதிரட்டி ரூ.6,25,000 மதிப்பில் பள்ளிக்கு ஒரு கணினி ஆய்வகக் கட்டிடம் 11 கனிணிகளோடு அமைக்கப்படுகிறது.

*கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் ரூ.3,00,000 மதிப்பில் இரண்டாவது வகுப்பறை கிரானைட் தளம், குளிர்சாதனக் கருவி என அற்புதமாக வடிவமைக்கின்றனர்.

இப்போது இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி…

• 11 கனிணிகள் கொண்ட ஆய்வகத்துடன், இரண்டு வகுப்பறைகள்
• குளிர்சாதனம் பொருத்தப்பட்ட (A/c) வகுப்பறை
• டைல்ஸ் / கிரானைட் தரை
• தரமான பச்சை வண்ணப்பலகை
• வகுப்பறைக்குள் குடிநீர் குழாய்
• சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்,
• வெந்நீர், சாதா நீருக்கு என தனித்தனி குழாய்கள்
• தெர்மோகூல் கூரை
• மின்விசிறிகள்
• உயர்தர நவீன விளக்குகள்
• கூரையில் பொருத்தப்பட்ட நவீன ஒலிபெருக்கிகள்
• மாணவர்கள் எழுதிப்பழக மட்டஉயர பச்சை வண்ணப்பலகை,
• வேதியியல் உபகரணங்கள்
• கணித ஆய்வக உபகரணங்கள்
• முனைகளில் இடித்து பாதிக்கப்படாமல் மாணவ மாணவியர் அமர்ந்து படிக்க வட்டமேசைகள்
• மேசைகளின் கீழ்ப்பகுதியில் ஒருவரையொருவர் உதைக்காவண்ணம் தடுப்புகள்
• அமரும் நாற்காலிகளிலேயே புத்தகங்களை வைத்துச்செல்ல பெட்டி வசதி
• மாணவர்களின் செய்முறைத் திறமையை வெளிப்படுத்தப் பலகை
• அனைவருக்கும் தரமான சீருடை
• காலுறைகளுடன் கூடிய காலணி
• முதலுதவிப்பெட்டி
• தீயணைப்புக்கருவி
• காணொளிகளை ஒளி(லி)பரப்ப டிவிடி சாதனம்
• LCD புரஜெக்ட்டர் ………………………..

ஆகியவற்றோடு உலகத்திற்கே ஒரு முன்மாதிரி அரசுப்பள்ளியாக நிமிர்ந்து நிற்கின்றது

சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகளான பின்பும் இந்தியா முழுக்க கல்வி ஒரு கடைமையாக மட்டுமே பாவிக்கப்பட்டு வரும் சூழலில், இது எப்படி சாத்தியமானது,
இதெல்லாம் ஓர் நாளில் வந்ததா?

இதையெல்லாம் செய்ய வைத்தது
ஒற்றை மனிதனின் ஓங்கிய கனவு.
ஒரே ஒரு மனிதன், தன்சிந்தையில்
கல்வியினை கருவாக்கி தனக்குள் அடைகாத்து சரியான நேரத்தில், சரியான இடத்தில் பிரசவித்ததின் விளைவே இது.

ஆம், இது அத்தனையும் ஆசிரியர் திரு. பிராங்கிளின் அவர்களின் கனவினாலும், சரஸ்வதி டீச்சரின் ஒத்துழைப்பினாலும் மட்டுமே சாத்தியமானது.

ஒரு காலத்தில் நூறு பிள்ளைகள் படித்த அந்தப்பள்ளியில் 5ம்வகுப்பு வரை மொத்தமே வெறும் 30 பிள்ளைகள் மட்டுமே படிக்கும் நிலைக்கு சுருங்கிப்போனது.

கல்வி வியாபாரத்தில் தங்களை முதலீடு செய்ய வசதி இல்லாதவர்களின் கடைசிப்புகலிடமாக அரசுப்பள்ளிகள் மாறிப்போன காலம்தானே இது.
ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் அரசுப்பள்ளியில் ஆயிரமாயிரம் பேர்படித்து பலனடைந்த வரலாறு ஒரு முற்றுப்புள்ளியை எட்டிவிடுமோ என்ற அச்சத்தைப் போக்க
மிக அவசியத்தேவை மாற்றம் என்பதே.

இந்த கல்வியாண்டின் துவக்கத்தில் 27 மாணவர்களுடன் துவங்கிய இப்பள்ளியில்
இன்று 62 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
கடந்த இரு ஆண்டுகளில் தனியார் ஆங்கிலவழிக் கல்வி பள்ளியில் பயின்ற மாணவர்களும் இப்பள்ளியில் சேர்ந்துள்ள அதிசயமும் நிகழ்ந்துள்ளது.

காசு கொடுக்க முடியாத பிள்ளைகளுக்கு கல்வியை சரியாய் அளிக்க வேண்டும் எனும் வேட்கையில் யோசிக்க ஆரம்பித்தவர்கள், தங்கள் மனதில் தோன்றியதையெல்லாம் செதுக்கி, பட்டைதீட்டி, இன்றைக்கு தமிழகத்தின் எந்த ஒரு பள்ளியும் தரமுடியாத ஒரு தரத்தை, ஆரோக்கியத்தை, சுகாதாரமான கல்வியை செய்துகாட்டத் தொடங்கியுள்ளனர்.

ஆசிரியர்கள் இருவரும் இணைந்து கல்வித் துறையில் இப்படியும் புரட்சி செய்யமுடியும் என தங்கள் அர்ப்பணிப்புக் கொடையால் ஒரு எடுத்துக்காட்டை உலகத்திற்குப் படைத்துவிட்டனர். தான் செய்யும் பணியை உயர்வாய், உயிராய் நேசித்ததின் விளைவே இது.

மாற்றத்தை நிகழ்த்த சரியான மனிதர்களின் ஒத்துழைப்பை ஈட்டிவிட்டால் போதுமென்ற தன்னம்பிக்கையோடு தங்களை முன்னுதரணமாக நிறுத்திக்கொண்டு தொடங்கியவேள்வியில் கிட்டத்தட்ட சாதித்துவிட்டனர்.

திட்டத்திற்கு ஒத்துழைப்புக் கொடுத்த கிராமத் தலைவரிடம் எப்படி தங்களால் ஒத்துழைப்பும், நிதியும் அளிக்க முடிந்தது எனக் கேட்டால் அவரின் ஒரே வார்த்தை “ஆசிரியர்கள் மேல் தங்களுக்கிருந்த நம்பிக்கை மட்டுமே” என்பதுதான்.

வெறுமனே , சாதாரண ஆசிரியர்களாக மட்டும்
அந்தப் பள்ளியில் செயல்படாமல் குழந்தைகளை ஒரு பெற்றோர் மனோபாவத்திலிருந்து வழிநடத்திக் கற்பிக்கின்றனர். யாரையும் எதற்கும் அடித்ததில்லை. உரிமையாய் பிள்ளைகள் ஆசிரியர் ஃப்ராங்ளின் மீது ஏறி விளையாடுவதும் கூட எப்போதாவது நடப்பதுண்டாம்.

“பிள்ளைகளுக்கு கல்வியோடு சுய ஒழுக்கம், சூழல்களை எதிர்கொள்ளும் பக்குவம், நேர்த்தியாக வாழ்வது என எல்லாமே கற்றுக்கொடுக்கிறோம். இங்கிருந்து வெளியேறும் மாணவன் எவரொருவருடனும் போட்டியிடத் தயாராக இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்” என்கிறார் ஃப்ராங்ளின்.

புதுப்பிக்கப்பட்ட வகுப்பறையில் இரண்டு வருடங்களாகப் புழங்குவது ஐந்து முதல் பத்து வயதுவரை இருக்கும் பிள்ளைகளேயாயினும் இதுவரை ஒரேயொரு இடத்தில் கூட ஒரு பொட்டு அழுக்கு படவில்லை.
எப்படி சாத்தியம் இது எனக் கேட்டால்,
“மாணவனுக்கு சுவற்றில் அழுக்கு செய்தால்,அதை சுத்தம் செய்வது எவ்ளோ கடினம் என்பதையும், மீண்டும் வர்ணம் பூச ஆகும் செலவுகள் குறித்தும் எடுத்துக் கூறியிருப்பதால், ஒரு துளி அழுக்குப்படாமல் இருக்கின்றது” என்கிறார்.

பிள்ளைகளுள் படிந்திருக்கும் ஒழுக்கம், அந்த ஆசிரியர்களின், உழைப்பு, திறமை, அர்பணிப்புத்தன்மை, தியாகத்திற்கு கிடைக்கும் மாபெரும் அங்கீகாரமாகும்.

பிள்ளைகளுக்கு ஆங்கிலப் பயிற்சி, யோகா பயிற்சி, ஓவியப்பயிற்சி, விளையாட்டு பயிற்சி, தலைமைப்பண்பு பயிற்சி, செய்தித்தாள்கள் வாசிப்பு பயிற்சி என அனைத்துவிதப் பயிற்சிகளும் சிறப்பாக அளிக்கப்படுகிறது.

மாணவர்களின் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க தனித்தனி அஞ்சலகக் கணக்குகளில் சிறுசேமிப்பு. எனவும் செய்திருக்கிறார்கள்..

முன்னிரவு நேரத்தில் தொலைக்காட்சி பார்ப்பதில் குழந்தைகள் சிதைந்துவிடக்கூடாது என்பதற்காக அந்த நேரத்தில் சிறப்பு வகுப்பு நடத்தவும் அனுமதிபெற்று அதையும் திறம்படத் துவங்கியுள்ளனர்.

மாணவ - மாணவியருக்கான தனித்தனி கழிப்பறை வசதியும், விளையாட மைதான வசதியும் சிறப்பாக உள்ளது. சீருடைகள், கழுத்தணி, காலணி, அரைக்கச்சை, அடையாள அட்டை,ஆசிரியர், மாணவர் பெற்றோர் இணைப்புக்கையேடு ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது.

ஓய்வுபெறும் கட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கும் ஆசிரியை சரஸ்வதி அவர்களும், இந்தத் திட்டங்களின் பிதாமகனான ஃப்ராங்களின் அவர்களுக்கும் சமகாலச் சமுதாயத்தின்முன் உதாரணங்களாக முன்னிறுத்தப்பட வேண்டியவர்கள்.

தனக்கோ, பிறருக்கோ, சமூகத்திற்கு ஏதாவது செய்திடவேண்டும் எனும் வேட்கை எல்லோருக்குள்ளும் இருப்பது இயல்புதான்.

“சம்பளத்திற்கு உழைப்போம்” என்ற மனோபாவம் நீக்கமற படிந்து போன சமூகத்தில் தங்களை முழுதும் ஈடுபடுத்தி, எவரொருவரும் செய்திடாத அதிசயத்தை, அற்புதத்தை சப்தமில்லாமல் செய்திட்ட இந்த ஆசிரியர்கள் இந்திய அளவிலும், உலக அளவிலும் அடையாளப் படுத்தப்பட வேண்டியவர்கள். எடுத்துக்காட்டுகளாக முன்னிறுத்தப்பட வேண்டியவர்கள்.
இவர்களைச் சரிவர பாராட்டுவதும், இவர்களின் தியாகத்தை, உழைப்பை அங்கீகரிப்பதும் அரசுகளின், சமூக அமைப்புகளின், ஊடகங்களின் மிக முக்கியக் கடமை. இவர்கள் செய்த பணியை தங்கள் பகுதிக்கும் விரிவுபடுத்த வேண்டியது சக ஆசிரியர்கள், சக மனிதர்களின் தலையாயக் கடமை.

********************************************
ஓங்கிய முழக்கத்தோடு எதையோ எதிலிருந்தோ மீட்கப்போவது மட்டும்தான் புரட்சியா? அமைதியாய் மௌனமாய் நிகழ்த்துவதும் மாற்றத்தை நிகழ்த்துவதும் புரட்சிதான்!

*****************************************

இந்தக் கல்விப் புரட்சியாளர்களைக் கொண்டாடுவோம், முன்மாதிரியாக எடுத்துக்கொள்வோம்..
மனதார வாழ்த்துவோம்.

ஃப்ராங்ளின் அவர்களைத் தொடர்புகொள்ள...
***************************************
99 42 47 26 72
franklinmtp@gmail.com,
pupsramampalayam@gmail.com
http://rmpschool.blogspot.in/


தொடர்புடைய கட்டுரை
*********************
http://maaruthal.blogspot.in/2011/09/blog-post_5125.html
-0-

சுட்டி : http://maaruthal.blogspot.in/2013/04/blog-post_3.html

உடையும் காங்கிரஸ்! உதயமாகிறது த.மா.கா!

இலங்கை பிரச்சனையில் மத்திய அரசு மற்றும் காங்கிரஸ் கட்சி மீதான தமிழக மக்களின் கடும் அதிருப்தியின் விளைவாக அக்கட்சியுடனான உறவை துண்டிக்கும் நிலைக்கு திமுக போனது. தற்போது இலங்கை பிரச்ச்சனையை முன்வைத்து தமிழக காங்கிரஸ் கட்சியே இரண்டாக பிளவுபடுவதும் வாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது. 
வாசனை ஓரம்கட்டிய ராகுல் 
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றது முதலே தாம் ஓரம்கட்டப்படுகிறோம் என்ற அதிருப்தி மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனுக்கு இருந்து வருகிறது. குறிப்பாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து தமது ஆதரவாளர் யுவராஜா நீக்கப்பட்ட விவகாரத்தில் உச்சகட்ட அதிருப்திக்குப் போனார் வாசன். அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு முடிவடைய இருக்கும் தமது ராஜ்யசபா எம்.பி. சீட்டை வட மாநிலம் ஒன்றில் இருந்து பெற்றுத் தரவும் கோரியிருந்தார் வாசன். ஆனால் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பியாக வேண்டியதுதானே என்று ராகுல் கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் உதயமாகிறது என்ற செய்திகள் வெளியாகத் தொடங்கின. இதை ஒரு பேரம் பேசக் கூடிய யூகச் செய்தியாக வாசன் தரப்பு பரப்புகிறது என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போது தமிழ் மாநில காங்கிரஸ் உதயமாகும் வாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவே தெரிகிறது. 
ஈழத் தமிழர் விவகாரம் 
அண்மைக் காலமாக இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ஜிகே வாசனின் குரல் தமிழக மக்களின் குரலை எதிரொலித்து வருகிறது. காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பகிரங்கமாக கருத்து தெரிவித்து வருகிறார் வாசன். இதன் அடுத்த நிலையாக பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து ஈழத் தமிழர் பிரச்சனை, தமிழக மீனவர் நலன் போன்ற விவகாரங்கள் குறித்து சூடாகவே விவாதித்தார் என்றும் செய்திகள் வெளியாகின. காங்கிரஸ் கட்சியில் தாம் புறக்கணிக்கப்படுகிறோம் என்பதாலும் தமக்கு மீண்டும் ராஜ்யசபா சீட் எப்படியும் பெற்றாக வேண்டும் என்பதற்காகவும் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெயரில் தனிக் கட்சியை மீண்டும் தொடங்குவது என்ற முடிவுக்குப் போய் இருக்கிறார் ஜி.கே.வாசன். 
பிரணாப் முகர்ஜி அட்வைஸ் 
காங்கிரஸில் தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது தொடர்பாக ஜி.கே. வாசனின் குடும்ப நண்பராக இருக்கும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார் வாசன். பிரணாப் முகர்ஜியைப் பொறுத்தவரையில் இந்திரா காந்தி இறந்த உடனேயே பிரதமர் பதவியை விரும்பியவர். ஆனாலும் அவருக்கு அது நிறைவேறாத கனவாகவே போய்விட்டது. கடைசியில் அவரை ஜனாதிபதி பதவியில் உட்கார வைத்து அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர். தற்போது தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரத்தின் கை டெல்லியில் ஓங்கியிருப்பதுடன் அவரையே பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் முன்னிறுத்தலாம் என்ற தகவல்களும் பரவி வருகின்றன. ப.சிதம்பரத்தின் செல்வாக்கு அதிகரிப்பதை சகிக்காதவராக பிரணாப் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜி.கே.வாசன் தம்மை சந்தித்த போது தனிக் கட்சியை தொடங்குவதன் மூலம் ப.சிதம்பரத்தின் செல்வாக்கை டெல்லியில் குலைத்துவிடலாம் என்ற அடிப்படையில் விவாதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் இதைத் தொடர்ந்துதான் ஜி.கே. வாசன் குடும்பத்தினர் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்குவது... இலங்கைப் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சி மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகள் தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக இருக்கிறது என புது கட்சியின் உதயத்துக்கு காரணமாக சொல்வது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தமது அரசியல் ஆலோசகரான துக்ளக் வார இதழின் ஆசிரியர் சோவையும் வாசன் சந்தித்துப் பேசியிருக்கிறார். யார் யார்? ஜிகே வாசன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினால் ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், இளங்கோவன் ஆதரவாளர்களைத் தவிர கட்சி மேலிடம் மீது அதிருப்தியில் இருக்கும் பல காங்கிரஸ் தலைவர்களும் இணையக் கூடும். குறிப்பாக தேர்தலில் தோற்றதால் முடங்கிக் கிடக்கும் பல காங்கிரஸாரும் இணையலாம். இதேபோல் இலங்கைத் தமிழர் பிரச்சனையால் தமிழகத்தில் தலை காட்ட முடியாது என்று கருதக் கூடிய காங்கிரஸாரும் இதை சாக்காக வைத்து வெளியேறலாம். 
அதிமுகவுடன் கூட்டணி: 
ஜி.கே.வாசன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்கினால் தமது கூட்டணியில் இணைத்துக் கொள்ளவே திமுக மிகவும் விரும்பும். தேமுதிக, திமுக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவற்றுடன் களம் இறங்கினால் கணிசமாக தொகுதிகளைக் கைப்பற்றலாம் என்பது திமுகவுக்கு இயல்பாகவே எழக் கூடிய யோசனையாக இருக்கும். ஆனால் ஜிகே வாசன் தரப்பினரோ இப்போதைக்கு ஜெயிக்கிற குதிரையாக இருப்பது அதிமுகதான்... அவர்களுடன் அணி சேர்ந்தால் எப்படியும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று கருதுவதாகத் தெரிகிறது. ஆக, தமிழகத்திலும் லோக்சபா தேர்தல் வியூகங்கள் விரைவிலேயே களைகட்டப் போகிறது
!

Monday, April 8, 2013

Performance of TN MPs in Parliament


The road between Poolampatti in Salem district and the Salem Steel Plant along with the giant pipes bringing Cauvery water to the plant was laid in the 1970s. For over 40 decades, the 38-km road was in a state of neglect and completely unmotorable. Now, the Steel Ministry has agreed to relay the road in three phases after AIADMK MP S. Semmalai representing Salem constituency raised the issue in the Parliament.
Mr. Semmalai, a former MLA and Minister in the AIADMK government, has secured the second place in the list of performing MPs from Tamil Nadu by participating in 112 debates. Besides he has moved 6 private member bills and raised 466 questions in the current Lok Sabha, the 15th. Mr. Semmalai, is also the deputy leader of the AIADMK in the Lok Sabha. Salem, a second-tier city with less than 10 lakh population was brought under Jawaharlal Nehru Urban Renewal Mission (JNURRM) scheme, the credit should go to Mr. Semmalai. His attendance in the Lok Sabha is 86 per cent. Mr. Semmalai said he would stay in the House till 6 p.m. so that he could participate in the zero hour and speak on important issues raised by his leader.
But the person who has participated in maximum number of debaters, raised more questions and recorded 97 per cent attendance is Congress member S.S. Ramasubbu, representing Tirunelveli.
An assessment by the PRS Legislative Research (PRS) has adjudged him as the top performer going by his attendance and participation in debates and raising questions.
            Mr. Ramasubbu said that, the members have to read a lot and fully prepare ourself before taking part in a debate or supplement a question in Lok Sabha. Moreover, a member has to be extremely attentive. He also succeeded in getting a broad-gauge line between Tirunelveli and Tenskasi and a slew of new railway schemes for his constituency. It was Mr. Ramasubbu who drew the nation’s attention to the dengue deaths in his districts and persuaded the Centre to send a medical team to study the situation. According to him, he was also instrumental in the Centre taking efforts to link the southern grid with the north so that the excess power could be diverted to Tamil Nadu. A two-time MLA and former bank employee, he has good knowledge of finance and banks related bills and issues. Both Mr. Semmalai and Mr. Ramasubbu had spoken on education loan for students.
Another person who had performed well in the current Lok Sabha is DMK’s R. Thamaraiselvan (Dharmapuri). He has taken part in 100 debates, raised 584 questions and maintained 83 per cent attendance.



Gandhi want to disband congress party


TN Chief Minister and AIADMK supremo J Jayalalithaa had opposition members squirming in their seats and the treasury benches sniggering when she taught Congress MLAs in the state assembly a few lessons about their own party history. It was a class she took with great relish, reading out from a voluminous book, titled ‘The Collected Works of Mahatma Gandhi-Volume 90,’ published by the Union ministry of information and broadcasting in 1984.
A day after the five Congress MLAs in the assembly demanded proof for a statement made by a state minister in the assembly about a well-known fact about the party’s history that Mahatma Gandhi wanted to disband it immediately after Independence, Jayalalithaa produced the book in the House to make her point. Liberally quoting from it, she said, “Though split into two, India having attained political independence through means devised by the Indian National Congress, the Congress in its present shape and form, that is, as a propaganda vehicle and parliamentary machine, had outlived its use.”
Earlier, local administration minister K P Munusamy had mocked Congress members saying Mahatma Gandhi wanted to disband their party after the country’s Independence. This evoked loud protests from the Congress MLAs, who demanded proof for his statement. Jayalalithaa said she had kept silent during the argument as she wanted to speak with proof in hand the following day. To drive home her point that Congress members appeared ignorant about their own party’s history, the CM said late Prime Minister Indira Gandhi had written the foreword in the book. “Mahatma Gandhi himself has said in his writings that the Congress has expired,” Jayalalithaa said, taunting the red-faced Congress MLAs.
“It (the Congress) must be kept out of unhealthy competition with political parties and communal bodies. For these and other similar reasons, the AICC resolves to disband the existing Congress organisation,” Jayalalithaa said, quoting from the book. “So, this is appropriate proof that many people, who are in the Congress, are speaking without even knowing their party’s history,” she said. The chief minister also slammed the UPA government’s ‘wrong’ policies and urged the Centre to take effective measures immediately to control spiraling prices of essential commodities.

GI tags


The trademarks and geographical indication (GI) authorities awarded the unique tag to 21 products after a spurt in applications for the special status in the first three months of the year.
The six Tamil Nadu items granted the tag are Madurai malli (jasmine), Pattamadai pai (mat), Nachiarkoil kuthuvilakku (lamp), Toda embroidery, Thanjavur veena and Chettinad kottan (palmyra basketry).
Traditional items from outside the state accorded the status include Mangalagiri saris and fabrics from Andhra Pradesh, Narayanpet handloom saris and Bangalore blue grapes from Karnataka and Agra durrie (carpet), Farrukhabad prints,Lucknow zardozi (embroidery, especially with gold or silver), and shuttlewoven Banaras brocades and saris from Uttar Pradesh. Mexican alcoholic beverage tequila was also accorded the status on an application in the Chennai GI office.
Karnataka, with 32, tops the list for products granted the GI tag so far and is followed by Tamil Nadu (24), Andhra Pradesh (22) and Kerala (20).

Related links:

If there is no water in the dam...Should we urinate into it? -- Deputy CM speech


Maharashtra Deputy Chief Minister Ajit Pawar stirred up a controversy  when he said "If there is no water in the dam...Should we urinate into it?" Mr Pawar had said this in context to a two-month-long protest by a farmer, who is demanding dam water for his parched field. After much outrage, he apologised saying "These remarks were not made for drought-affected people."
Here are the reactions to Mr Pawar's comments:
Sharad Pawar, President, Nationalist Congress Party (NCP)
I duly apologise on the behalf of Deputy Chief Minister of Maharashtra for the unwanted comment that he had made.
Prabhakar Deshmukh, fasting farmer on whom Ajit Pawar made the remark
Ajit Pawar was voted in to solve the people's problems, not make such remarks. Why is water being provided to a liquor factory and not farmers?
Shaina NC, BJP leader
Instead of saying that I stand by the public he makes comments like this. This is the lowest of low in Maharashtra politics.
Shabana Azmi, actor and activist (on Twitter)
Ajit Pawar's remark has touched an all-time low in crassness. Trivialising drought in Maharashtra and audience laughing! Disgusting.
Farhan Akhtar, actor (on Twitter)
Ajit Pawar fancies himself as a stand-up comic. I think his party should take his cue, sack him and let him follow his dream.


Related links: