Wednesday, April 27, 2011

Monday, April 25, 2011

INC and DMK - a 'crucial' relationship

If ever there were a stress test for the uneasy relationship between the Congress and the DMK, it is this.
CBI on 2G Spectrum Scam: I Chargesheet - 9 persons; II Chargesheet - 5 persons
Kanimozhi, the daughter of DMK Chief M Karunanidhi, has been named by the CBI as a co-conspirator with A Raja in the 2G scam. However, Mr Karunanidhi's wife, Dayalu Ammal, does not feature in the new chargesheet filed by the CBI in a Delhi court today. The concession, sources say, is a result of political pressure though it will formally be attributed to a lack of evidence.
Kanimozhi has been asked to appear in the Delhi court trying the 2G case on May 6. Her party is now worried about whether she will be arrested before then. Sources in the CBI say that depends entirely on whether the court orders the agency to send the young MP to jail.
In Chennai this morning (April 25, 2011), when asked about whether he was concerned about the chargesheet, Mr Karunandhi said, "I do not know about the chargesheet. If such things come out you (media) will put it and I will know about it." In 2008, A Raja, a DMK leader, was the Telecom Minister when he sold spectrum and mobile network licenses for a jaw-dropping low price to companies that were largely ineligible for either, according to government guidelines.
One of those companies - Swan Telecom - allegedly sent Mr Raja a Rs. 214-crore kickback that was routed through a maze of companies but rested finally with a TV channel in Chennai that is owned mainly by Kanimozhi and Dayalu Ammal. Together, they have 80% stake in the company. Sharad Kumar, the Managing Director of Kalaignar TV, owns the balance and has also been accused of conspiring with Mr Raja. Like Kanimozhi, Mr Kumar was interrogated earlier this year by the CBI. Both of them said that the Rs. 214-crore payment was for a sale in equity that unraveled; they claim they returned the entire amount with 30 crores in interest.
Mr Raja is in jail. So are Shahid Balwa and Vinod Goenka, both partners in DB Realty and Swan Telecom, which was later sold to Etisalat and is now called Etisalat DB.
Also chargesheeted today for abetment to bribery, are top executives of the companies that Mr Balwa allegedly used to route his kickback to Mr Raja. They include Karim Morani of Cineyug Films; Rajiv Aggarwal of Kusegaon Realty and Mr Balwa's brother, Asif, whose involved with the same company. the CBI was insistent that Dayalu Ammal would be listed in the new chargesheet.  However, weekend reports suggested that her sons - MK Alagiri and MK Stalin who are both senior DMK leaders - were furious about attempts to link her to the scam. Within the CBI, too, there was allegedly a divide over whether to involve her.  Some investigators felt that given the fact that she is in her 80s, and does not understand English, it would be hard to prove that Dayalu Ammal knew of her channel's financial transactions.
Whether voters in Tamil Nadu care about the 2G scam will be known on May 13 when the results for the state election are declared - voting was held on April 13. The DMK has fought the elections in an alliance with the Congress. And while sources say the partnership is under significant strain because of the 2G investigation, it will not collapse. The Congress, however, will have the firm upper hand as it negotiates for share of power if the alliance wins.
Sources in the DMK say the party knows that with its senior-most members linked so closely to the 2G scam, it needs any cover the Congress may be able to offer.  Convincing the CBI to ignore Dayalu Ammal could be an example of the possible benefits of staying in business with the Congress.
The first chargesheet in the 2G scam was presented a few weeks ago by the CBI - it led to some of India's senior-most executives at different telecom companies like Unitech Wireless and Reliance Telecom (of the Anil Dhirubhai Ambani Group) being arrested. Since last week, they have been in jail; their applications for bail are scheduled to be heard by the Delhi High court tomorrow (April 26, 2011)
Kalaignar TV Stake Holders:
Dayaluammal - 60%
Kanimozhi - 20%
Sarathkumar Reddy - 20%

TN related cartoons - dinamalar newspaper



Thursday, April 21, 2011

TN leaders after voting


Election Cartoons





ஏழை, பணக்காரர் என இரு இந்தியாவா? பட்டினிச் சாவு கண்டு சுப்ரீம் கோர்ட் கோபம்

நாட்டில் பட்டினிச் சாவு சம்பவங்கள் அதிகரிப்பதைக் கண்டு, கடும் கோபம் அடைந்துள்ள சுப்ரீம் கோர்ட், "ஏழை இந்தியா, பணக்காரர் இந்தியா என, இரு இந்தியாவா உள்ளது' என, மத்திய அரசுக்கு காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் குறித்த சமீபத்திய விவரங்களைத் தர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கம் என்ற அமைப்பு, நாட்டில் அடிக்கடி நிகழும் பட்டினிச் சாவுகள், பொது வினியோக முறையில் நடக்கும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து, சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.இந்த மனுவானது, நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன், ""ஊட்டச் சத்து குறைபாட்டை தீர்க்க வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதிப்பாடு கொண்டுள்ளது. பொது வினியோக முறையை முறைப்படுத்தும் நடவடிக்கைகளும் துவங்கியுள்ளன,'' என்றார்.
நீதிபதிகள் கூறியதாவது: நாட்டில் பட்டினிச் சாவுகள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருப்பது கவலை அளிப்பதாக உள்ளது. பணக்காரர்களுக்கு ஒரு இந்தியா, ஏழைகளுக்கு ஒரு இந்தியா என, இரண்டு இந்தியா இருக்க முடியாது. நாட்டு மக்களில், 36 சதவீதம் பேர், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை குறைக்க, திட்ட கமிஷன் எடுத்த நடவடிக்கை என்ன? இந்தியா சக்தி வாய்ந்த நாடு என, பறை சாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். அதேநேரத்தில், நாட்டின் பல பகுதிகளில் பட்டினிச் சாவுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஊட்டச்சத்து குறைபாடு என்பது, முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் மற்றும் இல்லாமல் செய்யப்பட வேண்டும்.பட்டினியில் ஆயிரக்கணக்கானவர்கள் செத்துக் கொண்டிருக்கும் நிலையில், நாட்டில் போதுமான அளவுக்கு உணவு தானிய கையிருப்பு இருப்பதாக கூறிக் கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது. விளைச்சல் நன்றாக உள்ளது, அரசு குடோன்கள் நிரம்பி வழிகின்றன என்பதில் நமக்கெல்லாம் மகிழ்ச்சியே. ஆனால், மக்கள் இதனால் பலன் அடையவில்லை எனில், என்ன பயன்?

வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோர் எண்ணிக்கை, 36 சதவீதத்திற்கு அதிகமாக உள்ளதாக, காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் உட்பட, பல மாநிலங்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளன. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கும், வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ளவர்களுக்கும் வினியோகிக்க அதிகளவில் உணவு தானியங்களை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன.வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோர் எண்ணிக்கையை, 1991ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், திட்ட கமிஷன் தெரிவித்துள்ளது சரியல்ல. வறுமைக் கோட்டிற்கு கீழே தற்போது எவ்வளவு பேர் உள்ளனர் என்பதை இன்னும் ஒரு வாரத்திற்குள் திட்ட கமிஷன் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

Friday, April 8, 2011

ஜன்லோக்பால் மசோதா

லோக்பால் என்றால் என்ன? அரசு அதிகாரிகள் மீது சுமத்தப்படும், ஊழல், மெத்தனம், பாரபட்சம் போன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கோர்ட் போன்ற அரசு அமைப்பு தான் லோக்பால். பொதுமக்கள், அரசு அதிகாரிகள் மீது லோக்பாலிடம் புகார் கொடுக்கலாம். அந்த புகாரை லோக்பால் விசாரித்து, நடவடிக்கை எடுக்கும். லோக்பால் உருவானால், துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஊழல் கட்டுப்படுத்தப்படும் என்ற பொது கருத்து நிலவுகிறது. லோக்பாலின் செயல்பாடுகள், அதிகாரங்கள் போன்றவற்றை நிர்ணயிக்கும் சட்டம் தான் லோக்பால் சட்டம்.

இப்போதுள்ள ஊழல் குறித்த சட்டங்கள் எவை? இந்திய தண்டனை சட்டம், 1860 மற்றும் ஊழல் தடுப்பு சட்டம், 1988 ஆகியவை, அரசு அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இவற்றின் படி நடவடிக்கை எடுக்க, போலீசோ, வேறு புலனாய்வு துறையோ, மாநில, மத்திய அரசுகளிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். அரசில் நிர்வாக துறையை பொறுத்தவரை மத்திய புலனாய்வு துறை மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு துறை ஆகிய இரண்டு மட்டுமே, ஊழல் வழக்குகளை கையாள்வதில் பிரதானமாக செயல்படுகின்றன.

லோக்பால் அமைப்பினால் என்ன லாபம்? இது முறையாக நிறுவப்பட்டால், அரசின் சட்டத்துறை மற்றும் நிர்வாகத் துறையின் கலவையாக இருக்கும். புகார்களை பெற்று விசாரணை நடத்துவதில் நிர்வாகத் துறையை போன்றும், தண்டனை கொடுப்பதில் நீதித் துறையை போன்றும் செயல்படும். மக்களின் பிரச்னை, அலைக்கழிப்பு இல்லாமல் ஒரே இடத்தில் தீர்க்கப்படும்.

இதே போல் இந்தியாவில் வேறு அரசு நிறுவனம் உள்ளதா? ஆந்திரா, அசாம், பீகார், சத்திஸ்கர், டில்லி, குஜராத், ஜார்க்கண்ட், அரியானா, இமாச்சல பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரகண்ட் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்கள், லோக் ஆயுக்தா மற்றும் உபலோக் ஆயுக்தா அமைப்புகளை உருவாக்கியுள்ளன. இவை, மாநில அளவில் லோக்பாலின் வேலைகளை, குறுகிய அளவில், அதிகாரமற்ற நிலையில் செய்து வருகின்றன. இவற்றில் பிரபலமானது, கர்நாடகாவில் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையில் இயங்கும் லோக் ஆயுக்தா. இது கர்நாடகாவில் அரசியல் பலம் படைத்த பெல்லாரி சகோதரர்களின் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டியது.

இந்த சட்டம் எப்போது அமலுக்கு வரும்? கடந்த 1968 முதல், லோக்சபாவில் எட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டு, தகுந்த காலவரைக்குள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. தற்போது நிலவும் தொடர் ஊழல் சூழலில், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில், ஊழலை தடுக்க நடவடிக்கைகள் பரிந்துரைக்க, மத்திய அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதில் லோக்பால் மசோதாவின் வடிவம் மற்றும் அதை மீண்டும் அறிமுகப்படுத்துவது பற்றி பரிந்துரைக்கப்பட்டது. லோக்பால் மசோதாவின் வடிவம் குறித்து போராடி வரும் அன்னா ஹசாரே உட்பட அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொண்டால், இந்த ஆண்டே லோக்சபாவில் நிறைவேற வாய்ப்பு உள்ளது.

அன்னா ஹசாரே உண்ணாவிரதம் ஏன்? தற்போது அரசுக்கு பரிசீலிக்கப்பட்ட லோக்பால் சட்டம் மிகவும் பலவீனமானது. அதன்படி உருவாக்கப்படும் அமைப்புக்கு, பரிந்துரை செய்யும் அதிகாரங்கள் மட்டுமே இருக்கும். இதுவரை வெவ்வேறு அரசு ஆணையங்கள் லோக்பால் குறித்து செய்த பரிந்துரைகளை சேர்த்து, சட்டத்துக்கு வலிமையூட்டும் வகையில், அன்னா ஹசாரே தலைமையில், ஒரு சமூக ஆர்வலர் குழு, மாதிரி மசோதா தயார் செய்திருந்தது. அந்த மாதிரி மசோதாவின் அடிப்படையில் புதிய லோக்பால் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று கோரி, அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருக்கின்றார்.

பரிந்துரைக்கப்பட்டுள்ள லோக்பால் மசோதாவில் உள்ள குறைகள்

* நாட்டின் பிரதமர், அமைச்சர்கள், எம்.பி.,க்கள் மீது மட்டுமே லஞ்சம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தும் உரிமை கொண்டது.

* லஞ்சம் தொடர்பான விசாரணையை துவங்கவோ, பொதுமக்களிடம் இருந்து நேரடியாக புகார்களை பெறவோ அதிகாரம் கொடுக்கப்படாது. புகார்களைப் பெறுவதற்கென நியமிக்கப்படும், எம்.பி.,க்கள் மூலமே, அவை பெறப்படலாம்.

* புகாரில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது; அமைச்சர்கள் மீதான புகார் குறித்து பிரதமரிடமோ, பிரதமர், அமைச்சர்கள் மீதான புகார் குறித்து, புகார்களை பெற நியமிக்கப்பட்டுள்ள எம்.பி.,க்களிடமோ சிபாரிசு மட்டுமே செய்ய முடியும்.

* காவல் துறைக்கான அதிகாரம், லோக்பால் அமைப்புக்கு கொடுக்கப்படாது. எனவே, எந்த புகார் மீதும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது.

* லோக்பால் அமைப்பில் தவறான புகார் தெரிவித்தது உறுதி செய்யப்பட்டால், புகார் கொடுத்தவருக்கு ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும்.

* இந்த அமைப்பை நிர்வகிக்க, ஓய்வு பெற்ற மூன்று நீதிபதிகள் அடங்கிய கமிட்டி ஒன்று உருவாக்கப்படும்.

* இவர்கள் மூவரும் இணைந்து, லோக்பால் அமைப்புக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பர். உறுப்பினர்கள் அனைவரும், அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களாக, குறிப்பாக ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்களாக இருப்பர்.

* நாட்டின் பாதுகாப்பு, ராணுவம், வெளியுறவு தொடர்பாக, பிரதமருக்கு எதிராக புகார் வந்தால், அது குறித்து விசாரிக்க பரிந்துரை செய்ய, இந்த அமைப்புக்கு அதிகாரம் கிடையாது.

* புகாரின் அடிப்படையில் விசாரணையை ஆறு மாதத்தில் இருந்து ஓராண்டிற்குள் துவக்க வேண்டும். ஆனால், எவ்வளவு மாதங்களில், ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என்பது வரையறுக்கப்படவில்லை.

* லஞ்ச அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, சிறைத் தண்டனை பெற்ற பின்னர் சம்பந்தப்பட்டவர், தவறான வழிகளில் ஈட்டிய சொத்துக்களை அனுபவிப்பதற்கு, இந்த அமைப்பின் மூலம் தடை ஏதும் விதிக்கப்படவில்லை.

அன்னா ஹசாரே வலியுறுத்தும் ஜன் லோக்பால் மாதிரி மசோதா விவரம்

* அரசியல்வாதிகள், அதிகாரிகள், நீதிபதிகள் மீதும் லஞ்சம் தொடர்பான நீதி விசாரணை நடத்த லோக்பால் கட்டுப்பட்டது. மத்திய ஊழல் கண்காணிப்பு கமிட்டி மற்றும் மத்திய அரசின் அனைத்து கண்காணிப்பு அமைப்புகளும், லோக்பால் அமைப்பிற்குள் கொண்டு வரப்படும்.

* பொது மக்களிடமிருந்து, புகார்களை நேரடியாகப் பெற்று, நடவடிக்கை எடுக்கலாம். யாரிடமும் சரிபார்க்க வேண்டிய அவசியமோ, அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.

* புலனாய்வு முடிந்ததும், வழக்கு தொடரலாம்; ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் அல்லது இரண்டையும் மேற்கொள்ளலாம்.

* லோக்பால் அமைப்புடன் சி.பி.ஐ., இணைக்கப்பட்டு விட்டால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் அதிகாரம், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் புலனாய்வு செய்தல், வழக்கு தொடர்தல் ஆகியவை மேற்கொள்ள முடியும்.

* லோக்பால் அமைப்பில் ஒரு தலைவர், 10 உறுப்பினர்கள் இடம் பெற்றிருப்பர். இவர்களில் 4 பேருக்கு மட்டுமே முன் அனுபவம் இல்லாத வக்கீல்களாக இருக்கலாம்.

* தேர்வு கமிட்டியில் சட்டம் தொடர்பான பின்னணி உடையவர்கள், தலைமை தேர்தல் கமிஷனர், மத்திய கணக்கு தணிக்கை அலுவலக தலைவர், ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல்கள், லோக்பால் அமைப்பில் இருந்து வெளியேறும் உறுப்பினர்கள் இடம் பெற வேண்டும்.

* லோக்பால் அமைப்பின் முழு அதிகாரத்தையும் பயன்படுத்த எந்த தடையும் இருக்க கூடாது.

* ஓராண்டிற்குள் புலனாய்வை முடிக்க வேண்டும். இது தொடர்பான வழக்கு விசாரணையை அடுத்த ஓராண்டிற்குள் முடிக்க வேண்டும்.

* ஊழல் நிரூபிக்கப்பட்டால், ஊழலில் தொடர்புடைய அனைவரிடமிருந்தும் இழப்பீடு பெறப்பட்டு, அரசு இழப்பைச் சரிகட்ட வேண்டும்.

பாலிவுட் நடிகர்களுக்கு நேரமிருக்கிறது: தமிழ் நடிகர்களுக்கு இல்லாதது ஏனோ?

ஹசாரேயில் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதத்திற்கு அமிர்கான் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப பிரிவினர் என, பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், தமிழ் நடிகர்களைப் பொறுத்தவரையில், சினிமா ஷூட்டிங்கிலும், அரசியல் பிரசாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழ் நடிகர்களின் இந்த நடவடிக்கைகள், தமிழக மக்களை கொதிப்படைய செய்துள்ளது.
லஞ்ச ஊழலை எதிர்க்கும் அன்னா ஹசாரேவுக்கு, நாடு முழுவதும் பலத்த ஆதரவு அலை வீசி வருகிறது. டில்லியில், ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர், தங்கள் கையில் மெழுகுவத்தி ஏந்தி, அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதுபோல், பா.ஜ., மூத்த தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான சுஷ்மா சுவராஜ், இ.கம்யூ., பரதன் உள்ளிட்ட அரசியல் கட்சியத் தலைவர்களும், ஹசாரேவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பரபரப்பாக பேசப்படும் இந்த சூழலில், அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதம் பலரையும் தட்டிஎழுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, பல்வேறு சமூக அமைப்பினரும், இதே கோரிக்கையை வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம் நடத்த முன்வந்துள்ளனர். 

Wednesday, April 6, 2011

TN Election Special - II





Attention to voters...

ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்..

குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளதுஇந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது..
இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்க்கப்படவேண்டியுள்ளது.
ஏனென்றால்குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
ஓட்டுக்கு பணம் கிடையாதுடாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).
கரண்ட் கட் கிடையாதுஇத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது.
இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்...
குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய உலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை- ரூ.50,000 கோடிகள்.(ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான்!)
ஆனால்... இன்று..
அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக கையிருப்பாக வைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள்
மீண்டும் உங்கள் நினைவிற்கு..
குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்) .
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது

-
மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.
-
இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.
-
இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
-TATA,Hyundai,Ford,Reliance,Honda
இன்னும் பிற குஜராத்தில் உள்ளன.
இந்தியாவின் No-1 மாநிலம்(தொழில்,பொருளாதாரம்,மக்களின் வாழ்க்கை
தரம்,உள்கட்டமைப்பு,வருமானம்,சட்டம்/ஒழுங்கு)


நாமும் No-1 தான் (பிச்சை எடுத்து,இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம் வாங்கி,உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்)

அடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது.
நம் மாநிலத்தின் நிலை??
அடுத்த 5 ஆண்டுகளில் கருணாநிதியின் குடும்பம் நிஜ சிங்கப்பூரை விலைக்கு வாங்கிவிடும்.
இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண தேர்தல் அல்ல..மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும்.
இது அநியாய,அராஜக ஆட்சிக்கு நாம் அளிக்கும் சம்மட்டி அடியாக இருக்க வேண்டும்.
இதில் நாம் தவறிழைத்தாலோ,அடிபணிந்தாலோ,ஏமாந்தாலோ ஒரு மிகப்பெரும் வரலாற்று பிழை செய்தவர்களாகி விடுவோம்.
உலகம் நம்மை காரி உமிழும்.