Saturday, December 31, 2011

Tamil Cinema in 2011

* 2011-ல் அதிக படங்கள் வெளிவந்த நாயகர் பட்டியலில் நடிகர் தனுஷ் 5 படங்களில் ‌தோன்றி முதலிடத்திலும், நடிகர் ஜீவா 4 படங்களில் நடித்து 2வது இடத்திலும் இருக்கிறார்.
* நடிகையை ‌ப‌ொறுத்தமட்டில் அஞ்சலி 5 படங்களில் நடித்து முதலிடத்தில் உள்ளார்.
* எட்டு படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் தோன்றி பிரகாஷ்ராஜ் நம்பர்-1 வில்லனாக உள்ளார்.
* சுமார் 13 படங்களில் காமெடியனாக நடித்த வகையில் சந்தானம் நம்பர்-1 காமெடியனாகவும், அவருக்கு அடுத்தபடியாக பத்து படங்களில் ‌காமெடியாக நடித்த வகையில் கஞ்சா கருப்பு 2ம் இடத்திலும் இருக்கின்றனர்.
* 2011-ல் அதிக படங்களை தயாரித்த நிறுவனம் என 4 படங்களை தயாரித்துள்ள ஏ.ஜி.எஸ்.எண்டர்டெயின்மெண்ட் பெயரெடுத்துள்ளது* தலா இரண்டு படங்களை இயக்கியதன் மூலம் முதலிடத்தில் இருக்கின்றனர் நடிகர் கம் இயக்குநர்கள் தியாகராஜனும், பிரபுதேவாவும்.
* தலா 6 படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் ஸ்ரீகாந்த் தேவா, யுவன்சங்கர் ராஜா, தமன் ஆகிய மூவரும் முன்வரிசையிலும், சுந்தர்.சி.பாபு-5 படங்களுக்கும், வித்யாசாகர், ஜி.வி.பிரகாஷ் தலா - 4 படங்களுக்கும், ஹாரிஸ், தினா, விஜய் ஆண்டனி தலா 3 படங்களுக்கும் என அடுத்தடுத்த இடங்களிலும் இடம் பிடித்துள்ளனர்..* ஏ.ஆர்.ரஹ்மான் 2011ம் ஆண்டில் எந்த ஒரு தமிழ் படத்திற்கும் இசையமைக்கவில்லை. மாறாக முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளாகி தமிழகத்தில் தடை செய்யப்பட்ட டேம்-999 ஆங்கில படத்தின் பாடல்களுக்கு ஆஸ்கர் விருதுகளை தரலாம் என ஆக்ராவில் நடந்த விழா ஒன்றில் ஏடாகூடமாக பேசி பின் வருத்தம் தெரிவித்ததோடு சரி!
* பாடலாசிரியர் நா.முத்துக்குமார் 2011ம் ஆண்டில் 37 படங்களுக்கு பாடல்கள் எழுதி முதலிடத்தை பிடித்திருக்கிறார்.
விழா கொண்டாடிய படங்கள்:-
200 நாட்கள் : கோ
100 நாட்கள் : மைனா, காவலன், சிறுத்தை, வானம், காஞ்சனா, தெய்வத்திருமகள், எங்கேயும் எப்போதும், சிங்கம்புலி, இளைஞன், விருதகிரி, லத்திகா. (இதில் சில படங்கள் 100 நாட்கள் ஓட்டப்பட்டதும் கவனிக்கத்தக்கது.)
தேசிய விருதுகள்:-
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 2011ம் ஆண்டில் ஏராளமான தேசிய விருதுகளை தமிழ் சினிமா அள்ளி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 14 ‌தேசிய விருதுகளை தமிழ் சினமா அள்ளி வந்தது. குறிப்பாக ஃபைவ் ஸ்டார் பிலிம்ஸ் தயாரித்த ஆடுகளம் படத்திற்கு 6 தேசிய விருதும், வெற்றிமாறனுக்கு சிறந்த இயக்குநருக்கான விருதும் அடங்கும். தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு 2 தேசிய விருதுகளும், மைனா படத்திற்காக தம்பி ராமையாவுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. சிறந்த நடிகர் தனுஷ், நடிகை சரண்யா, இயக்கநர் சீனு ராமசாமி, வெற்றி மாறன் ஆகியோருக்கு ஜனாதிபதி தேசிய விருது வழங்கிய அதே மேடையில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தருக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டில் கரங்களால் தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Devastating Cyclone "Thane"

A devastated shoreline and the adjacent M.G. Road in Puducherry.
Trees uprooted inside the Puducherry Assembly premises.
People wade through the uprooted branches of trees at Bharati Park in Puducherry.
Cyclone Thane has caused unprecedented damage to Puducherry. A scene at the Puducherry-Cuddalore-ECR junction.
The iconic Beach Road in Puducherry after Cyclone Thane unleashed its fury.
The traffic signal near Selva Vinayagar temple in Kurinji Nagar, Puducherry is uprooted by the cyclonic storm.
A battered lane in Puducherry town area.
Municipal workers clear uprooted trees from a road in Puducherry.
A cargo vessel, washed ashore in the sea opposite to war memorial, Chennai.
Tidal waves brought sea waters to the sands of Marina beach. Despite the rough sea, some Chennaites chose to pay a visit to the beach.
A heavily-cast sky with clouds hovering over the Tirumala hills.
A lamp post and CCTV installation uprooted at Nethaji Road junction in Cuddalore.
Huge waves lash Puducherry beach.
In picture, a man struggles with his umbrella at the Marina in Chennai

Friday, December 30, 2011

Tamil Nadu in 2011‍

'ஜெயா' சுனாமி: 2011 த‌மிழ‌க‌ ச‌ட்ட‌ப்பேர‌வைத் தேர்த‌லை, இந்தியாவே ஆவ‌லோடு எதிர்பார்த்த‌து என்று கூறினால், அது மிகையாகாது. எல்லா மாநில‌ ச‌ட்ட‌ப்பேர‌வைத் தேர்தலின் க‌ருத்துக‌ணிப்புக‌ளை ச‌ரியாக‌ கூறிய‌ ஆங்கில‌ தொலைக்காட்சி சேன‌ல்க‌ள் கூட‌ த‌மிழ‌க‌த்தில் ச‌ருக்கின‌. அந்த‌ அளவுக்கு அனைத்து கருத்துக‌ணிப்புக‌ளையும் த‌விடுபொடியாக்கி விட்டு, 'ஜெய‌லலிதா' த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ரானார். 234‍-ல் சுமார் 200 இட‌ங்க‌ளை அ.இ.அ.தி.மு.க. கூட்ட‌ணி வென்ற‌து. அதில், 150 இட‌ங்க‌ளை அ.இ.அ.தி.மு.க‌.‍வே பிடித்திருந்த‌து.தி.மு.க.‍‍ கூட்ட‌ணி படுதோல்வி அடைந்த‌து.குறிப்பாக‌ தி.மு.க. எதிர்க்க‌ட்சி அந்த‌ஸ்த்தை கூட‌ பிடிக்க‌முடியாம‌ல் போன‌து தான் அனைவ‌ரையுமே அதிர்ச்சியை ஏற்ப‌டுத்திய‌து.உள்ளாட்சித் தேர்த‌லில் கூட்ட‌ணியை உத‌றித‌ள்ளிவிட்டு, அ.இ.அ.தி.மு.க‌. மிக‌ப்பெரிய‌ வெற்றி பெற்ற‌து இன்னொரு அதிர்ச்சி.10 மாநாக‌‌ராட்சிக‌ளையும் கைப்ப‌ற்றிய‌தோடு, ப‌ல‌ உள்ளாட்சி அமைப்புக‌ளையும் கைப்ப‌ற்றிய‌து. த‌மிழ‌க‌ வ‌ர‌லாற்றில், இப்ப‌டியொரு வெற்றியை எந்த‌ க‌ட்சியும் பெற்ற‌தில்லை என்ப‌து போல் இருந்த‌து ஜெ‍ -வின் வெற்றி...
================================================
'க‌ம்பிக்குள்' க‌‌னி: தி.மு.க‌.‍த‌லைவ‌ர் மு.க‌.வின் ம‌க‌ள் க‌‌னிமொழிக்கு இந்த‌ ஆண்டு மிக‌வும் சோத‌னையான‌ ஆண்டு. 2G- ல், அவர் சிக்கி, திஹார் சிறையில் அடைக்க‌ப்ப‌ட்ட‌போது தான், இந்தியாவே அந்த‌ ஊழ‌லை மிக‌வும் ஊற்று நோக்கிய‌து. அந்த‌ ஊழ‌லை ப‌ற்றி தெரியாத‌வ‌ர்க‌ளும் கூட‌ அதை ப‌ற்றி பேசிய‌ப‌டியே இருந்த‌ன‌ர். ஆங்கில‌ தொலைக்காட்சிக‌ளுக்கு ந‌ன்றாக‌ தீனி கிடைத்த‌து. ப‌ல‌ கோர்ட்டுக‌ளில் ப‌டியேறி ஜாமீன் கிடைக்காமால், இறுதியில் கிடைத்த‌து.இப்போது க‌ட்சியில் அவ‌ருக்கு த‌ர‌ப்ப‌டும் முக்கிய‌த்துவ‌ம், மு.க‌.-வின் குடும்ப‌த்தில் பூக‌ம்ப‌ம் உண்டாகும் என்று அர‌சிய‌ல் நோக்க‌ர்க‌ள் கூறுகிறார்க‌ள்.
================================================
'காணாம‌ல் போய்மவிடுமா?' கூட‌ங்குள‌ம்: திருநெல்வேலி மாவ‌ட்ட‌ம், கூட‌ங்குள‌ம் என்ற‌ பெய‌ர் இந்த‌ வருட‌ க‌டைசியில் அகில உல‌க‌ பெய‌ரெடுத்த‌து.
அணு உலைக‌ள் வேண்டாம் என்று போராடினர் அந்த‌ ப‌குதி ம‌க்க‌ள். ப‌ல்வேறு குழுக்க‌ள், விஞ்ஞானிக‌ள் என்று எத‌ற்கும் அசைந்து கொடுக்க‌வில்லை. போதாத‌ற்கு, த‌மிழ‌க‌ முத‌ல்வரும் போராட்ட‌க்காரர்க‌ளின் பக்க‌ம் நின்ற‌தால், பிர‌த‌மருக்கும், முத‌ல்வ‌ருக்கும் இடையே நட‌ந்த‌ மோத‌லாக‌ மாறிவிட்ட‌து.அப்துல் க‌லாம் வ‌ந்து சொன்ன‌ப் பிறகும் போராட்ட‌க்கார‌ர்க‌ள் அதை ஏற்க‌வில்லை (க‌லாமின் யோச‌னையை த‌மிழ‌க‌ அரசும் ச‌ரியாக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌வில்லை). ஏற்க‌ன‌வே ப‌ல‌ ம‌ணி நேர‌ மின்வெட்டால், த‌மிழ‌க‌ம் தத்த‌ளித்துக் கொண்டிருக்கும் நேர‌த்தில், இந்த‌ போராட்ட‌ம் தேவைதானா?
================================================
'முடிவுக்கு வ‌ராத‌' முல்லைப் பெரியாறு: த‌மிழ‌க‌மும், கேர‌ள‌மும் இந்த‌ வ‌ருட‌ இறுதியில் ப‌ல்த்த‌ யுத்த‌ க‌ள‌மாக‌ மாறின‌.ஒரு அணை இந்தியாவிலுள்ள‌ இரு மாநில‌ங்க‌ளுக்கிடையே பெரிய‌ பிர‌ச்னையாக‌ மாறிய‌ பொழுது அனைவ‌ர் ம‌ன‌திலும் தோன்றிய‌ கேள்வி, 'இறையான்மை என்ப‌து இந்தியாவில் இருக்கிற‌தா?'.இரு மாநில‌ பேர‌வைக‌ளிலும் சிறப்புக் கூட்ட‌ம்,பிர‌த‌ம‌ர் இரு மாநில‌ங்க‌ளுக்கும் அறிவுரை கூறுத‌ல் என்று நாட்க‌ள் சென்ற‌ன். ம‌க்க‌ள், அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் போராட்ட‌த்தில் குதித்த‌ன‌, மீடியாக்க‌ளுக்கு ந‌ல்ல‌ தீனி கிடைத்த‌து. அதிக‌ம் பாதிக்க‌ப்ப‌ட்ட‌து, த‌மிழ‌க‌த்திலிருந்து ச‌பிரிம‌லைக்கு சென்ற‌ ஐய‌ப்ப‌ ப‌க்த‌ர்க‌ள் தான். பின்ன‌ர்,உச்ச‌ நீதிம‌ன்ற‌ம் இரு மாநில‌ங்க‌ளுக்கும் குட்டு வைத்து அமைதி காக்க‌ சொன்ன‌து (முல்லைப் பெரியாறு விஷியித்தில் பிர‌ச்னை ஏற்பட‌ உச்ச‌ நீதிம‌ன்ற‌மே கார‌ண‌ம் என்ப‌து என் கருத்து)
================================================
ஒரேய‌டியாக‌' ஜெ. ஏற்றிய‌ விலை: த‌மிழ‌க‌ அர‌சு ஒரே நாளில், பேருந்து க‌ட்ட‌ண‌ம், பால் விலை ஏற்றிய‌து. 2012‍-லிருந்து, 'மின்சார‌மே இல்லாத‌
த‌மிழ‌க‌த்தில்' மின்சார‌ விலையும் ஏறப்போகிற‌து. இதை ச‌ற்றும் எதிர்பார்க்காத‌ பொதும‌க்க‌ள், த‌மிழ‌க அர‌சை வ‌சை மாறி பொழிந்த‌ன‌ர். இன்று வ‌ரை பேருந்துக‌ளில் என்ன‌ விலை என்று பொதும‌க்க‌ளுக்கு சரியாக‌வே தெரிய‌வில்லை (LSS, Deluxe, Ultra Deluxe, M Service, Green Board, Yellow Board, Special Bus, Summer Special, Cricket Special, Exhibition Special, Ordinary Bus- என்று ப‌ல வித‌தைக‌ளில் பேருந்துக‌ள் இய‌ங்குகின்‌ற‌ன). ம‌த்திய‌ அர‌சு த‌ர‌வில்லை என்றும், முந்தைய‌ க‌ருணாநிதியின் நிர்வாக‌ சீர்கேடுமே இத‌ற்கு கார‌ண‌ம் என்று கூறினார் ஜெ. ம‌த்திய‌ அர‌சு த‌ர‌வில்‌லை என்றால், ம‌ம்தா, மாயாவ‌தி மாதிரி போராடி பெற‌வேண்டுமே த‌விர‌, இப்ப‌டி ம‌க்க‌ள் மேல் சுமையை ஏற்றிருக்க‌கூடாது. க‌ருணாநிதி ச‌ரியில‌லை என்றுதானே ம‌க்க‌ள் இவ‌ரை தேர்ந்தெடுத்த‌ன‌ர், பிற‌கும் அவ‌ரையே குறை சொல்வ‌தில் என்ன‌ அர்த்த‌ம் என்று தான் புரிய‌வில்லை.
================================================
'ப‌த‌ற‌வைத்த‌' ப‌ர‌ம‌க்குடி: ப‌ர‌ம‌க்குடியில் ஏற்ப‌ட்ட‌ ஜாதிக‌ல‌வ‌ர‌ம் மிக‌வும் க‌ண்டிக்க‌த்த‌க்க‌து, அத‌ற்கு போலீஸ் துப்பாக்கி சூடு ந‌ட‌த்திய‌து அதை விட‌ வ‌ன்முறையான செய‌ல். 7 பேர் ப‌லியான‌து, விசார‌னை க‌மிஷ‌ன் அமைத்த‌ல், உயிர் இழ‌ந்த‌வ‌ர்க‌ளின் குடும்ப‌ங்க‌ளுக்கு இழ‌ப்பீடு, உய‌ர் நீதிம‌ன்ற‌த்தில் முறையீடு, ‍CBI-க்கு விசார‌னை மாற்ற‌ம் என்று போகிற‌து இந்த‌ க‌ல‌வ‌ர‌த்தின் பாதை.
================================================
நிற்க‌ விடாம‌ல் துர‌த்தும் நில‌ அப‌க‌ரிப்பு  வ‌ழுக்குக‌ள்:  அ.இ.அ.தி.மு.க.‍ ஆட்சிக்கு வ‌ந்த‌ பிற‌கு, முத‌லில் திகில் அடைய‌வைத்த‌து, நில‌ அப‌க‌ரிப்பு வ‌ழ‌க்குக‌ள் தான். தி.மு.க‌.‍‍வின் முன்ன‌னி த‌லைவ‌ர்க‌ள் எல்லோரும் சிறையில் த‌ள்ள‌ப்ப‌ட்ட‌ன‌ர். வீர‌பாண்டி ஆறுமுக‌ம் முத‌ல் 'நாய‌க‌ன்' ரித்தீஷ் வ‌ரை எல்லோரும் சிறைக்குள் சென்ற‌ன‌ர். இப்பொழுது உச்ச‌க்க‌ட்ட‌த்தில் இருப்ப‌து ஸ்டாலின் மீதுள்ள வ‌ழ‌க்கு.ஆனால் வ‌ழ‌க்குக‌ள், அவ்வ‌ள‌வு வ‌ளுவான‌தாக‌ இல்லாத‌தால், கைது செய்ய‌ப்ப‌ட்ட‌ அனைவ‌ருமே விடுத‌லையாகின‌ர்.
================================================
'அஸ்த‌மிக்கும்' ச‌ன்: த‌மிழ‌க‌ அர‌சின் அர‌சு கேபிள் திட்ட‌த்தினால், பெரிதும் பாதிக்க‌ப்ப‌ட்ட‌து ச‌ன் டி.வி. முழும‌ம் தான். அவ‌ர்க‌ளின் ஆக்ஸிஜினையே கைவைத்ததால், அவ‌ர்க‌ள் மிக‌வும் சிர‌ம‌ம் ப‌ட்ட‌ன‌ர். எந்த‌ ம‌சோதா வ‌ர‌க்கூடாது என்று மாற‌ன் ச‌கோத‌ர‌ர்க‌ள், க‌ருணாநிதியுட‌ன் ஆளுந‌ரை ச‌ந்தித்தார்க‌ளோ, அந்த‌ ம‌சோதா இன்று வ‌ந்தேவிட்ட‌து. போதாத‌ற்கு, ஸ்பெக்ட்ர‌ம் வேறே அப்ப‌ அப்ப‌  பூச்சாண்டி காட்டுகிற‌து.மாற‌ன்‍-கள் கைது செய்ய‌ப்படுவார்க‌ள் என்றும், கைதாக‌மாட்டார்க‌ள் என்றும் விவாத‌ங்க‌ள் தொட‌ர்ந்து ந‌டைபெற்றுவ‌ருகிற‌து.
================================================
'சித‌ம்ப‌ர‌' ர‌கசிய‌ம்: உள்துறை அமைச்ச‌ரான‌ ப.சித‌ம்ப‌ரத்திற்கு இது போதாத‌ வ‌ருட‌ம். அவரையும் ஸ்பெக்ட்ர‌ம் வ‌ழ‌க்குக‌ளில் சேர்க்க‌ வேண்டும் என்ற‌ வ‌ழ‌க்கு, அவ‌ர் நாடாளும‌ன்ற‌ தேர்த‌லில் வெற்றி பெற்ற‌தே செல்லாது என்ற‌ வ‌ழக்கு, நாடாளும‌ன்றத்தில் அவ‌ரை பேச‌ விட‌மாட்டோம் என்று எதிர்க் க‌ட்சிக‌ள் கூக்குர‌ல் எழுப்பின‌.இப்பொது எல்லோரும் க‌வ‌னித்துக் கொண்டிருப்ப‌து, நீதிம‌ன்ற‌ம் தீர்ப்புக்காக் தான்.


================================================
'பிராக‌ச‌ப்ப‌டுத்திய‌' பிர‌வீன் குமார் IAS: த‌மிழ‌க‌ தேர்த‌ல் என்றாலே 'ஜ‌ன‌நாய‌க‌த்திற்கு' ப‌திலாக‌ 'ப‌ண‌நாய‌க‌ம்' தான் என்ற‌ நில‌மையை மாற்றி அமைத்த‌ அற்புத‌ ம‌னித‌ர். இவ‌ரின் ந‌ட‌வடிக்கைக‌ள் 'மினி எமெர்ஜ‌ன்சியை' நினைவுப் படுத்துவதாக‌ உள்ள‌து என்று அப்போதைய‌ முத‌ல்வ‌ர் க‌ருணாநிதி கூறிய‌திலிருந்தே அவ‌ரின் நேர்மையான‌ செய‌ல்பாடுக‌ள் ப‌ற்றி சொல்ல‌ தேவையில்லை. 'நீங்க‌ள் செய்ய‌ விரும்பும் மாற்ற‌ங்க‌ள், உங்க‌ள் கையில் தான் உள்ள‌து' என்ற‌ வாச‌க‌ங்க‌ள் ம‌க்க‌ளை பெரிதும் க‌வ‌ர்ந்த‌ன‌. முன் எப்போதும் இல்லாத‌ வ‌கையில், 77.8% த‌மிழ‌க‌ ம‌க்க‌ள், த‌ங்க‌ள் ஜ‌ன‌நாய‌க க‌ட‌மையை ஆற்றின‌ர்.தேர்த‌ல் ந‌ல்ல‌படியாக‌ ந‌ட‌ந்த‌தால், இவருக்கு மதுரையில் 'க‌ட்‍அவுட்' வைத்து அச‌த்தின‌ர் ம‌க்க‌ள்.
================================================
'திரும்பி பார்க்க‌ வைத்த‌' த‌மிழ் சினிமா: இந்த‌ வ‌ருட‌ம், த‌மிழ் சினிமாவிற்கு மிக‌வும் அதிர்ஷ்ட‌மான‌ ஆண்டு. சினிமாவின் மிக‌ உய‌ரிய‌ விருதான‌ தாதா சாகிப் பால்கே விருது, கே. பால‌ச‌ந்த‌ருக்கும், சிறந்த‌ ந‌டிக‌ராக‌ த‌னுஷ்‍ம், சிற‌ந்த‌ ந‌டிகையாக‌ ச‌ர‌ண்யாவும், சிற‌ந்த‌ துணை ந‌டிக‌ராக‌ த‌ம்பி ராமையாவும், சிற‌ந்த‌ துணை ந‌டிகையாக‌ சுகுமாரியும், சிற‌ந்த‌ ப‌ட‌மாக‌ ஆடுக‌ள‌மும், சிற‌ந்த‌ இய‌க்குன‌ராக‌ வெற்றிமாற‌னும் என்று தேசிய‌ விருதுக‌ளையே த‌மிழ் சினிமா குத்த‌கைக்கு எடுத்தாற் போலிருந்த‌து.
================================================

Cyclone Thane... Details and Some pics

--------------------------------------------------------------------------------------------------------
"Thane" is on everyone's lips in the city for the past few days. The name "Thane" was suggested by Myanmar.
The naming to tropical cyclones over the Bay of Bengal and Arabian Sea started in Sep 2004.
The Indian Meteorological Department received a list of names from 8 countries - Bangladesh, India, Maldives, Myanmar, Oman, Pakistan, Thailand and Sri Lanka.
These 8 countries are World Meteorological Organisation panel members

Earlier, only countries like USA and Japan had the practice of referring hurricanes and typhoons by names.
The next cyclonic storm would be named "Murjaan" as suggested by Oman.
The practice helped in easy identification of the cyclones.

Thursday, December 29, 2011

2011: Those who bid adieu

(Clockwise from top left) M.F. Husain, Elizabeth Taylor, Steve Jobs, Dev Anand, Wangari Maathai and Mansoor Ali Khan Pataudi were some prominent personalities whose passing away left the world shocked in 2011.
=============================================================
BHIMSEN JOSHI (January 24): The legendary Hindustani vocalist strode the Indian musical scene as a colossus for decades with his unparalleled rendition of the Kirana gharana.
ANANT PAI (February 24): Founder of the immensely popular comic series Amar Chitra Katha and Tinkle, 'Uncle Pai' enchanted generations of Indian children, bringing them closer to their roots and introducing a number of lovable characters.
ARJUN SINGH (March 4): Veteran Congress leader, he was twice union minister and Chief Minister of Madhya Pradesh three times.
ELIZABETH TAYLOR (March 23): Legendary Hollywood actor and style-icon, Liz Taylor ruled the screen for five decades, winning two Academy awards. She also stayed in the limelight offscreen with her turbulent relationships that included eight marriages.
SRI SATHYA SAI BABA (April 24): Iconic spiritual leader, his divine powers, philosophy and teaching earned him millions of followers from around the world across social and religious lines. A philanthropist, he also helped build a number of charitable, educational and health institutions.
BADAL SIRCAR (May 13): Doyen of Indian theatre, he is known for his anti-establishment and Marxist plays which he staged mostly in public spaces and street corners.
MAQBOOL FIDA HUSAIN (June 9): The iconic painter who carved a niche for Indian art on the international arena, was forced to leave India in 2006 and had accepted Qatari nationality last year. An artist non pareil, his prolific output, free soaring spirit and flamboyant life made him larger than life.
SURESH TENDULKAR (June 21): An eminent economist, he did extensive research on poverty and played a key role in deriving what has come to be known as the Tendulkar poverty line.
MANI KAUL (July 6): An eminent filmmaker, his films were a clear break from Indian cinematic conventions. His first film ‘Uski Roti’ heralded the New Wave in Indian cinema.
KARTHIGESU SIVATHAMBY (July 8): Eminent Tamil scholar, he specialised in the social and literary history of Tamils, Tamil drama and literary criticism, and authored about 70 books and 200 research papers in Tamil and English. He also played a key role in the World Classical Tamil Conference held in Coimbatore in 2010.
AMY WINEHOUSE (July 23): The celebrated British singer, whose blend of jazz, soul, rock and classic pop made her a huge hit, was found dead in her London home. The 27-year-old star led a troubled life plagued by several drug and alcohol problems.
SHAMMI KAPOOR (August 14): India’s very own Elvis Presley, the legendary Shammi Kapoor was not just Hindi cinema’s romantic and style icon, but also the embodiment of the spirit of the swinging 60s.
JEHANGIR SABAVALA (September 2): Renowned artist influenced by the styles of cubism and impressionism, he created beautiful landscapes and seascapes in a career spanning over six decades.
MANSOOR ALI KHAN PATAUDI (September 22): One of India’s finest cricket captains, the legendary ‘Tiger’ was an outstanding individual both on and off the field.
WANGARI MAATHAI (September 26): Kenya’s “tree lady”, she became the first African woman and first environmentalist to win the Nobel Peace Prize. Through the Green Belt Movement she founded, Maathai also addressed issues of peace, democracy, women's empowerment and human rights, besides environmental conservation.
STEVE JOBS (October 6): Co-founder of Apple, this digital visionary gave the world the personal computer Macintosh, the iPod, and iPad, revolutionising the way we communicate today. A true iCon of our times, he was also the man behind animation company Pixar that produced the popular movies 'Finding Nemo' and 'Toy Story'.
T.K. GOVINDA RAO (September 28): Respected musician, he made lasting contributions to the field of music as a performing artist, teacher, musicologist and author.
DENNIS RITCHIE (October 12): A pioneer in the field of computer programming, he invented the C programming language and co-created the Unix operating system, playing a pivotal role in developing the infrastructure for technologies we use even today.
BHUPEN HAZARIKA (November 5): A music legend who introduced to the rest of India and the world the mystical folk music and culture of Assam, he donned many hats as singer, composer, lyricist, litterateur, journalist and filmmaker.
HAR GOBIND KHORANA (November 9): Indian-American biochemist, he won the Nobel Prize for medicine in 1968 for unravelling the nucleotide sequence of RNA and deciphering the genetic code.
USTAD SULTAN KHAN (November 27): Sarangi maestro and Hindustani singer, he staged his first concert at the age of 11 and his soulful music played on for over six decades enthralling music lovers the world over.
INDIRA GOSWAMI (November 29): One of India’s eminent contemporary writers and Assam’s beloved 'Mamoni Raisom', she was vociferous in her demands for the empowerment of women and the downtrodden. The Jnanpith Award winner also played a key role in the peace talks between the ULFA and the Centre.
DEV ANAND (December 4): The ‘Evergreen’ star romanced Hindi films for decades, first as actor and later director, and was one of Bollywood's greatest romantic heroes.
MARIO MIRANDA (December 11): Renowned cartoonist, he drew his characters and themes mostly from his Goan background, his sketches populated with many human absurdities and humorous contradictions.
CHRISTOPHER HITCHENS (December 16): Author, essayist and polemicist, he had a remarkable journalistic career and wrote the provocative best-seller “God is Not Great”.