Friday, August 26, 2011

"political" Jokes...

செய்தி: நில‌ அப‌க‌ரிப்பு வ‌ழ‌க்கில் அழ‌கிரியின் ம‌க‌ன் துரைத‌யாநிதியை சிக்க‌ வைக்க‌ முயற்சி.

'தூங்கா ந‌க‌ர‌த்தில்''ம‌ங்காத்தா' விளையாட‌ ஆர‌ம்பிச்சுட்டாங்க‌ப்பா ஆளும் 'பெண் சிங்க‌ம்'.
===========================================================
"ந‌ம்ம‌ முத‌ல்வ‌ர் சிறைச்சாலைக‌ளை சீர‌மைக்க‌வும், அர‌சு ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை மேம்ப‌டுத்த‌வும் நிதி ஒதுக்குகிறார். புதிய‌ ச‌ட்ட‌ச‌பைக் க‌ட்ட‌ட‌த்தையே ந‌வீன‌ மருத்துவ‌ம‌னையா மாற்ற‌ப்போற‌தா சொல்றார்...! என்ன‌ ந‌ல்ல‌ ம‌ன்சு பார்த்தியா...?"

த‌ன‌து எதிரிக‌ளை 'ஒண்ணு ஜெயிலுக்கு அனுப்புவேன், இல்லேன்னா ஆஸ்ப‌த்திரியிலே சேர்த்திடுவேன்னு' ம‌றைமுக‌மா ப‌ய‌முறுத்த‌றார். புரிய‌லை..?
=======================================================
ச‌ம‌த்துவ‌ம் என்றால் என்ன‌ என்று வாத்தியாரிட‌ம் கேட்டான் மாண‌வ‌ன்.

வாத்தியார்: ஊழ‌லை துணிஞ்சு செஞ்ச‌வ‌ரும் திகாரில், ஊழ‌லை ஒழிக்க‌த் துணிஞ்ச‌வ‌ரும் திகாரில் என்றார்.
குழ‌ம்பிப்போனான் மாண‌வ‌ன்...
================================================

ஊழ‌லுக்கு எதிரான‌ கோப‌ம்

ஆறு மாத‌ங்க‌ளுக்கு முன்னால், லோக்பால் ச‌ட்ட‌த்தை ந‌டைமுறைப்ப‌டுத்த‌ வ‌லியுறுத்தி, உண்ணாவிர‌த‌ம் இருந்த‌போது தான் அன்னா ஹ‌சாரே நாட்டிற்கு அறிமுக‌மானார். அடுத்த‌ ஆறு மாத‌ங்க‌ளில் அவ‌ர் அடைந்த‌ பிர‌ப‌ல‌ம் அவ‌ரே எதிர்பாராத‌து. நிறுவ‌ன‌ங்க‌ள் த‌ங்ள் பொருட்க‌ளை விற்க‌, குறி வைப்ப‌து ந‌டுத்த‌ர‌ ம‌க்க‌ளைத்தான். ஏனெனில் இந்தியாவின் மிக‌ப்பெரிய‌ வியாபார‌ச் ச‌ந்தை இந்த‌ ந்டுத்த‌ர‌ ம‌க்க‌ள்தான். அவ‌ர்க‌ளைப் பாதிக்கும் முக்கிய‌ விஷிய‌மான‌ ஊழ‌லைக் கையில் எடுத்த‌து தான் அன்னா ஹசாரேவின் முத‌ல் வெற்றி. வ‌ட‌கிழ‌க்கு மாநில‌ங்க‌ளில் ம‌க்க‌ள் ராணுவ‌த்தின் க‌ட்டுப்பாட்டில் அன்றாட‌ம் அனுப‌விக்கும் சித்திர‌வ‌தைக‌ள் ப‌ற்றியோ, ப‌ன்னாட்டு நிறுவ‌னங்க‌ளின் ஆக்கிர‌ம‌ப்பில் ப‌ழ‌ங்குடி ம‌க்க‌ள் விர‌ட்ட‌ப்ப‌டுவ‌து ப‌ற்றியோ இந்திய‌ ந‌டுத்த‌ர‌ வ‌ர்க்க‌ம் க‌வ‌லைப்ப‌டுவ‌தே இல்லை. த‌ங்க‌ளைப் பாதிக்காத எந்த‌ விஷய‌மும் அவ‌ர்க‌ளுக்கு (ந‌ம‌க்கு) ஒரு பொருட்டு இல்லை. ஆனால் அன்றாட‌ம் எதிர்கொள்ள‌ வேண்டிய‌ ல‌ஞ்ச‌மும் ஊழ‌லும் அவ‌ர்க‌ளை கோப‌ம‌டைய‌ வைக்கிற‌து.நடுத்த‌ர‌ ம‌க்க‌ளை பார்வையாளர்க‌ளாக‌ கொண்டுள்ள‌ ஆங்கில‌த் தொலைக்காட்சிக‌ளும் அவ‌ர்க‌ள‌து கோப‌த்தை த‌ங்க‌ள் வியாபார‌த்திற்குப் ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்கின்ற‌ன‌. அத‌னால் தான் நாள்க‌ண‌க்கில் அன்னாவின் உண்ணாவிர‌த‌த்தை நேர‌லையில் ஒளிப்ப‌ர‌ப்புகின்ற‌ன தொலைக்காட்சிக‌ள்.
அர‌சு கொண்டு வ‌ர‌ இருக்கும் லோக்பால் ம‌சோதா த‌ற்போது நாடாளும‌ன்ற‌ நிலைக்குழு முன் இருக்கிற‌து. அத‌ற்கு ப‌தில் ஜ‌ன்லோக்பால் என்கிற‌ தாங்க‌ள் சொல்லும் ம‌சோதாவை நிறைவேற்ற‌ வேண்டும் என்ப‌து அன்னா ஹ‌சாரே குழுவின் கோரிக்கை.  "ம‌சோதா என்ப‌து நாடாளும‌ன்ற‌த்தில் நிறைவேற்ற‌ப்ப‌ட‌ வேண்டிய‌து. அதை புல்வெளியில் எல்லாம் யாரும் நிறைவேற்ற‌ முடியாது" என்று கிண்ட‌ல‌டித்த‌வ‌ர் ந‌ம‌து மாண்புமிகு ம‌த்திய‌ உள்துறை அமைச்ச‌ர் ப.சித‌ம்ப‌ர‌ம்.
ஜ‌ன்லோக்பாலை வ‌லியுறுத்தி அன்னா ஹ‌சாரே உண்ணாவிர‌த‌ம் அறிவித்த‌ போது, ஏக‌ப்ப‌ட்ட‌ க‌ட்டுப்பாடுக‌ளை விதித்த‌து தில்லி போலீஸ். வ‌ழக்க‌மாக‌ எல்லா ஆர்ப்பாட்ட‌ங்க‌ளுக்கும் விதிக்க‌ப்ப‌டும் கட்டுப்பாடுக‌ள்தான் அது என்ப‌தை ம‌றை‌த்து, "அன்னாவுக்கு த‌டை" என செய்திக‌ளை வெளியிட்டு ஊடக‌ங்க‌ள் ம‌க்க‌ளை ஏமாற்றின. த‌டையை மீறி அன்னா குழுவின‌ர் உண்ணாவிர‌த‌ம் இருக்க‌வும், அவ‌ர்களை கொண்டு போய் திகாரில் அடைத்த‌தும் தான் விஷிய‌ம் விஸ்வ‌ரூப‌ம் எடுத்த‌து. எரிகிற‌ நெருப்பில் எண்ணெயை ஊற்றுவ‌து போல‌ அமைந்தது, காங்கிர‌ஸ்கார‌ர்க‌ளின் பேச்சு (குறிப்பாக, ம‌னிஷ் திவாரி, சித‌ம்ப‌ர‌ம், க‌பில் சிபில், திக்விஜ‌ய் சிங்) ஏற்க‌ன‌வே வெவ்வேறு ஊழ‌ல்க‌ளில் எவ்வ‌ளவு சைப‌ர்க‌ள் போடுவ‌து என்று தெரியாம‌ல் த‌வித்துக் கொண்டிருந்த‌ இந்திய‌ ம‌க்க‌ள் ம‌த்திய‌ அர‌சின் போக்கை பார்த்து கோப‌ம் அடைந்த‌ன‌ர்.

ஜ‌ன்லோக்பால் ம‌சோதாவில் இருப்ப‌து என்ன‌?
இந்த‌ ஜ‌ன்லோக்பால் ம‌சோதா அம‌லுக்கு வ‌ந்தால் அத‌ன்கீழ் பிர‌த‌ம‌ர், நீதிப‌திக‌ள் உட்ப‌ட யாரை வேண்டுமானாலும் விசாரிக்க‌லாம். இத‌ற்கு யார் அனும‌தியும் பெற‌த் தேவையில்லை. ஊழ‌ல் த‌டுப்புப் பிரிவு, CBI ஆகிய‌ துறைக‌ளும் லோக்பாலின் கீழ் இணைக்க‌ப்ப‌டும். குற்ற‌ம் குறித்து ஒரு வ‌ருட‌த்திற்குள் விசார‌ணை ந‌ட‌த்தி, அடுத்த‌ ஒரு வ‌ருட‌த்திற்குள் விசார‌ணை ந‌ட‌த்தி, அடுத்த‌ ஒரு வ‌ருட‌த்திற்குள் த‌ண்ட‌னையும் வ‌ழங்க‌ப்ப‌டும்.ஊழ‌ல் அதிகாரியை ப‌த‌வி நீக்க‌ம் செய்யும் உரிமையும் லோக்பால் அமைப்புக்கு உண்டு. (ஊழ‌லில் ஊறித் திளைத்த‌ ந‌ம் அர‌சிய‌ல்வாதிக‌ள் இத‌ற்கு ப‌த‌ட்ட‌ப்ப‌டாம‌ல் என்ன‌ செய்‌வார்க‌ள்?)
ஜ‌ன்லோக்பாலில் இருக்கும் மிக‌ப்பெரிய‌ ஓட்டைக‌ள்:
ஸ்பெக்ட்ர‌ம் ஊழலில் முக்கிய‌ குற்ற‌ம் சாட்ட‌ப்ப‌ட்ட‌ ச‌ர‌த்ப‌வாரின் தேசிய‌வாத‌ காங்கிர‌ஸ் க‌ட்சியும் அன்னாவின் உண்ணாவிர‌த‌த்தை ஆத‌ரிக்கிறது. ஊழல் குற்ற‌ச்சாட்டில் எடியூர‌ப்பாவை ப‌தவியில் இருந்து நீக்கி விட்டு, சுர‌ங்க‌ ஊழ‌ல் புகார் ரெட்டி ச‌கோத‌ரர்க‌ளை ப‌த‌வியில் தொட‌ர‌ அனும‌திக்கும் பா.ஜ‌.வும் அன்னாவை ஆத‌ரிக்கிற‌து. ஊழல்வாதிக‌ளும் ஊழ‌லை ஆத‌ரிப்ப‌த‌ன் பின்புல‌ம் என்ன‌வாக‌ இருக்க‌ முடியும்?.
உதார‌ண‌மாக‌, ஜ‌ன்லோக்பால் ஸ்பெக்ட்ர‌ம் ஊழலை விசாரிக்கிற‌து என்று வைத்துக்கொள்வோம். ம‌சோதாவின் ப‌டி, குற்றம் சாட்ட‌ப்ப‌ட்ட‌ ஆ.ராசா விசாரிக்க‌ப்ப‌ட்டு சிறைக்கு அனுப்ப‌ப்ப‌டுவார். ஆனால் ஊழலால் ப‌ய‌ன் அடைந்த‌தாக‌ச் சொல்ல‌ப்ப‌டும், Reliance, Tata, போன்ற‌ நிறுவ‌ன‌ங்க‌ள் மீது என்ன‌ விசார‌ணை என்ப‌து குறித்து லோக்பாலில் எதுவும் இல்லை.

இதில் வேடிக்கை என்ன‌வென்றால், உண்ணாவிர‌த‌த்தை தொலைக்காட்சிக‌ளில் நேர‌டியாக‌ ஒளிப‌ர‌ப்ப‌ Reliance நிறுவ‌ன‌ம் ஸ்பான்ஸ‌ர் செய்கிற‌து என்ப‌தில் இருந்தே ம‌சோதாவின் ஓட்டையைப் புரிந்துக் கொள்ள‌லாம். முக்கிய‌மாக‌, நாடு முழுவ‌தும் இந்த‌ போராட்ட‌த்தில் க‌ல‌ந்து கொள்ப‌வ‌ர்க‌ளுக்கு லோக்பால் அமைப்பு குறித்தெல்லாம் ஒரு தெளிவும் இல்லை. அன்னா ஹ‌சாரே உண்ணாவிர‌த‌ம் இருந்து, நாம் ஆத‌ர‌வு தெரிவித்து, ம‌சோதா நிறைவேறினால் ம‌றுநாளில் இருந்து நாட்டில் ஊழல் இல்லாம‌ல் போய்விடும் என ம‌க்க‌ள் ந‌ம்புகிறார்க‌ள். க‌ருப்புப்ப‌ண‌த்தில் பெரும‌ள‌வு ப‌துக்கி வைத்திருக்கும் திரைப்ப‌ட‌த் துறையின‌ர் (பாலிவுட், கோலிவுட், டோலிவுட், என்ற‌ பாகுபாடெல்லாம் இதில் இல்லை)ஊழ‌ல‌க்கு எதிரான‌ போராட்ட‌த்தில் த‌ங்க‌ளை இணைத்துக் கொண்டிருப்ப‌துதான் உச்ச‌க்க‌ட்ட‌ காமெடி. (திரைப்ப‌ட‌த்தில் முத‌லீடு செய்ய‌ப்ப‌டும் ப‌ணம், ந‌டிக‌ர்க‌ளின் ச‌ம்ப‌ள‌ம் என‌ திரைப்ப‌ட‌ங்க‌ளே க‌ருப்புப் பண்த்தில்தான் எடுக்க‌ப்ப‌டுகிற‌து. வாங்கும் ச‌ம்ப‌ள‌த்திற்கு எந்த‌ ந‌டிக‌ர்க‌ளும், ந‌டிகைக‌ளும் உண்மையான வ‌ருமான வ‌ரி க‌ட்டிய‌து கிடையாது)
க‌ருப்புப் ப‌ண‌த்தை மாற்றுவ‌த‌ற்காக‌வே ஆசிர‌ம‌ம் ந‌ட‌த்தும் 'கார்ப்பேரேட்' சாமியார்க‌ளும் அன்னா ஹ‌சாரேவின் போராட்ட‌த்தை ஆதரிக்கிறார்க‌ள்.
[ஊட‌க‌ங்க‌ளில் ந‌டைபெறும் ஊழ‌ல்க‌ள், கார்ப்பேரேட் க‌ம்பெனிக‌ளில் ந‌டைபெறும் ஊழ‌ல்க‌ள் ப‌ற்றியெல்லாம் எந்த‌ 'பால்'லும் வ‌ர‌வில்லை]
 
த‌மிழ்நாட்டில் எப்ப‌டி?  த‌மிழ்நாட்டில் அன்னா ஹ‌சாரே போராட்ட‌த்திற்கு பெரிய‌ ஆத‌ர‌வு இல்லை என்ப‌தை ஒப்புக் கொள்ள‌வேண்டும். த‌லைந‌க‌ர் சென்னையில் ஆர்ப்பாட்ட‌ம், உண்ணாவிர‌த‌ம் ந‌ட‌த்தி வ‌ரும் ஹ‌சாரே ஆத‌ர‌வாள‌ர்க‌ள் பெரும்பாலும் வ‌ட‌ இந்தியாவைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள். சென்னையில் ஐ.டி. நிறுவ‌ன‌ங்க‌ளில் ப‌ணிபுரிய‌ வ‌ந்த‌ இட‌த்தில் அவ‌ர்க‌ள் போராட்ட‌த்தை முன்னெடுத்திருக்கிறார்க‌ள். (RSS- போன்ற‌ இந்துத்துவ‌ அமைப்புக‌ள் இத‌ன் பின்ன‌ணியில் இருப்ப‌தையும் காண‌ முடிகிற‌து)
க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ள் ப‌ங்குபெறுகிறார்க‌ள் என்று தொலைக்காட்சிக‌ளில் காட்டுகிறார்க‌ள். அவ‌ர்க‌ளை பொறுத்த‌வ‌ரை, லோக்பால், ஜ‌ன் லோக்பால் ப‌ற்றியெல்லாம் தெரியாது. ஒரு நாள் க‌ல்லூரிக்கு செல்லாம‌ல் க‌ழிந்தது.
 
ம‌சோதாவில் இத்த‌னை ச‌ந்தேக‌ங்க‌ள் இருந்தாலும். அன்னாவுக்கு ஆத‌ர‌வு தெரிவிக்கும் ம‌க்க‌ள் 'ஊழ‌ல்' என்கிற ஒற்றை வார்த்தை மீதான‌ எதிர்ப்பில் இணைந்திருக்கிறார்க‌ள். ஊழ‌ல் என்கிற‌ வார்த்தை மீது இத்த‌னை விவாதங்க‌ள் ந‌ட‌ப்ப‌திலும், ஊழ‌லுக்கு எதிரான‌ ம‌க்க‌ளின் கோப‌த்தை அரசுக்கு புரிய‌ வைப்ப‌திலும் அன்னா ஹ‌சாரே வெற்றி பெற்றிருக்கிறார்.

Wednesday, August 24, 2011

Media ignores Irom Sharmila but focuses on Anna Hazare

Civil rights campaigners in Manipur are upset with the mainstream Indian media for blowing up activist Anna Hazare’s antigraft fast that entered its sixth day and ignoring the over decade-long hunger strike by Irom Chanu Sharmila against rights violations by the security forces in the region. A civil rights campaigner said that there is a general sense of feeling that the people of Northeast have always been neglected, discriminated, and looked down upon by the rest of India, including the mainstream media. Anna’s fast has hogged media headlines and Irom Sharmila is fasting for nearly 11 years. Irom Sharmila (‘Iron Lady of Manipur’) began her fast on November 02, 2000 after witnessing the killing of 10 people by the Army at a bus stop near Imphal. She was arrested shortly after beginning her protest – on charges of attempted suicide. She was sent to prison hospital where she began a daily routine of being force – fed via a nasal drip. Sharmila is frequently set free by local courts, but once outside, she resumes her hunger-strike and is rearrested. She is campaigning for the repeal of the AFSPA (Armed Forces Special Powers Act) that enables security forces to shoot at sight and arrest anybody without a warrant. A local human rights association in Manipur suggested that the attitude of the Indian public is sad in the sense that something happening in the northeast is seldom recognised by the mainstream media. The whole attitude is discriminatory. AFSPA was passé din 1990 to grant security forces special powers immunity from prosecution to deal with tagging insurgencies in the Northeastern states and in Kashmir. The act is a target for local human rights groups and international campaigners, such as Amnesty International, which say the law has been an excuse for extra judicial killings. Amnesty International has campaigns vociferously against the legislation, which it sees as a stain on India’s democratic credentials and a violation of international human rights laws.

Monday, August 22, 2011

"India Against Corruption" rally in Chennai

On August 21, 2011 (Sunday), me with Loganathan, Madhu, Dr. Manigandan, Venkatesh and Karthick gone to Marina Beach for "India Against Corruption" (supported by Anna Hazare). The world's second longest beach as usual busy on Sunday. But near to the Gandhi Statue, this gathering happened. I expected  a lot to gather but was disappointed when seen the gathering. Not much when compered to other cities in India. Around 3000 to 5000 only gathered (but ToI reports that 8000 gathered). Everyone raised slogan .. Some slogan which i like the most is..."Twinkle Twinkle little star, Anna hazare super star" But some people who came to beach dont know why this protest and for what they protest too... (even those who sat too dont know what is Lokpal and Jan Lokpal, but everyone has thought taht Corruption should be go away) To my surprise, only North Indians are most in number in Chennai gathering. It was a different experience for me.


 

Thursday, August 18, 2011

Cartoons published in newspapers.கொண்டாடுவோம் சென்னை என்றொரு மாநகரத்தை...

மெட்ராஸ், சென்னை இந்த இரு பெயர்களைக் கேட்டதும் இனம்புரியாத ஒருவித ஈர்ப்பு மனதில் ஒட்டிக் கொள்கிறது. பெரும் நகருக்கே உரிய பரபரப்பு, மக்கள் அடர்த்தி, வாகனங்களின் இரைச்சல், பலதரப்பட்ட கலாசாரம் என்ற வழக்கமான அடையாளங்களையும் தாண்டி, சென்னை ஏதோ ஒரு விதத்தில் நம்மைப் பாதிக்காமல் இல்லை. ஆயிரமாண்டுகளுக்கு முந்தைய பல்லவ சாம்ராஜ்யத்தில் துவங்கி, இன்றைய உலகின் மிகச்சிறந்த மருத்துவச் சுற்றுலா நகரமாக இருப்பது வரை சென்னையின் பல்வேறு பரிணாமமும், பரிமாணமும் ரசிக்கத்தக்கவை; வியப்புக்குரியவை. பொதுவாக ஒரு விஷயத்தை அல்லது வரலாற்றை விவரிப்பது எனில், குறிப்பிட்ட செயலுக்கு முன், குறிப்பிட்ட செயலுக்குப் பின் எனப் பிரிப்பது வழக்கம். இவ்வகையில் சென்னையின் வரலாறு ஆங்கிலேயரின் வருகைக்கு முன், வருகைக்குப் பின் என இருவகையாகப் பார்க்கப்படுகிறது. ஆங்கிலேயரின் வருகைக்கு முன், ஆங்காங்கு இருந்த குடியிருப்புகளும், மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்ததுமான சம்பவங்களுமே வரலாற்றில் இடம்பெறுகின்றன. அதுவும் அதிக அளவில் இல்லை. காரணம் 1639ம் ஆண்டுக்கு முந்தைய வரலாற்றுக்கு போதிய ஆதாரங்களும், விவரங்களும் இல்லை. கிடைக்கும் ஒரு சில கல்வெட்டுகள், சங்க இலக்கியப் பாடல்கள், கர்ணபரம்பரைக் கதைகளை வைத்து ஒருவாறு யூகிக்க முடிகிறது. சென்னை ஒரு பெருநகராக வளர்ச்சி பெற்றது, ஐரோப்பியர்கள் குறிப்பாக ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னர்தான். ஆகவே, சென்னையின் வரலாற்றில் ஆங்கிலேயேர்கள் தவிர்க்க இயலாத இடம்பெறுகின்றனர். இன்னும் சொல்வதானால், சென்னையில் ஆங்கிலேயர்கள் என்பதே சென்னையின் வரலாறாகவும் ஆகி விட்டது.
சில உணர்வுப்பூர்மான நிகழ்வுகள், இந்தியாவின் முதல் மற்றும் உலகின் இரண்டாவது மாநகராட்சி, அகிம்சையின் வலிமையை உலகுக்கு உணர்த்திய காந்தி சத்தியாக்கிரக ஒலியை எழுப்பிய இடம், முதன்முதலில் மதுவிலக்கு அமலாக்கப்பட்ட இடம் என சரித்திரப் புகழ் வாய்ந்த சம்பவங்களும், நிகழ்வுகளும் சென்னையில் நடந்தேறி இருக்கின்றன.
மும்பையும், கல்கத்தாவும் ராஜதானி நகரமாக மாறுவதற்கு முன்னரே, சென்னை இந்தியத்துணைக்கண்டத்தின் ராஜதானி நகரமாக உருவெடுத்திருக்கிறது. இன்னும் இன்னும் ஏராளமான சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ள சென்னை கொண்டாடப்பட வேண்டிய நகரம்.
எனவேதான், ஆங்கிலேயர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடத்தை தாமரல வெங்கடப்ப நாயக்கரிடம் இருந்து வாங்கிய ஆக.,22ம் தேதியை சென்னை தினமாக அறிவித்து, அதைப் பலரும் கொண்டாடி வருகின்றனர். 1639 ஜூலை 22 என்று ஒருசாரர் வாதிட்டாலும், ஆக., 22ம்தேதிதான் பதிவு செய்யப்பட்டது என சில ஆவணங்கள் மூலம் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே, இன்னும் வேறு ஆதாரங்களும், சான்றுகளும் கிடைக்கும் வரை ஆக., 22 ம் தேதிதான் சென்னை தினமாகக் கொண்டாடப்படும்.
பல்வேறு தரப்பினரும் தத்தமது விருப்பப்படி குழுவாகவோ, தனியாகவோ சென்னை தின (மெட்ராஸ் டே) கொண்டாட்டத்தில் பங்கேற்கின்றனர். பிறரின் கொண்டாட்டங்களுக்கு தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றனர்; நாமும் பங்கேற்போம். சென்னை தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்க நாம் சென்னைவாசியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு பெருநகரத்தின் பெருமிதம் மிக்க வரலாற்றைப் பகிர்ந்து கொள்வோம். வாருங்கள் கொண்டாடுவோம் சென்னையை; நம் பெருமையை.

Wednesday, August 17, 2011

அதிகார மமதை!

எதிர்பார்த்தபடியே அண்ணா ஹசாரே தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கும் முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் ஏழு நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.திகார் சிறையை இப்போது சமரசம் உலாவும் இடமாகக் கருதலாம். லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி ஊழல் செய்தவர்களும் திகார் சிறையில்; ஊழலை ஒழிக்க வலுவான சட்டம் வேண்டும் என்று சொல்பவர்களும் அதே திகார் சிறையில். நன்றாகவே இருக்கிறது நமது நாடாளும் முறைமை.ஊழல் மிகப்பெரிய தடைக்கல் என்று சுதந்திர தினக் கொடியேற்று விழாவில் செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர், உண்ணாவிரதத்தால் ஊழலை ஒழித்துவிட முடியாது என்கிறார். இன்று இந்தக் கைதுக்குத் தொடர்விளக்கம் அளிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தன் பங்குக்கு, ""சட்டங்கள் மைதானத்தில் சமூக ஆர்வலர்களால் உருவாக்கப்படுவதில்லை'' என்கிறார். இரண்டுபேர் சொல்வதும் உண்மை. ஆனால்,  உண்மைகூட யாரால் சொல்லப்படுகிறது என்பதைப் பொறுத்துத்தான் உண்மையாகிறது. உதாரணத்துக்கு, இலங்கை அதிபர் ராஜபட்ச மனிதாபிமானம் பற்றியும், மனித உரிமை பற்றியும் பேசினால் எப்படி இருக்கும்?லோக்பால் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ள நிலையில் அது  தொடர்பாகப் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்கிற புதிய காரணங்களை  மத்திய அரசு சொல்கிறது. இதைக் கண்டித்துள்ள பாஜக மூத்த தலைவர் அத்வானி, ""மகளிர் மசோதாவும்தான் நாடாளுமன்றத்தில் இருக்கிறது. அது தொடர்பான போராட்டம் நடத்தக்கூடாதா?'' என்று கேட்டுள்ள எதிர்வாதத்துக்கு இதுவரை பதில் இல்லை.இந்த நாட்டின் விடுதலை, தெரு முழக்கங்களாலும், திடல்களில் நடந்த கூட்டங்களாலும், சிறைக் கூடங்களாலும், நொறுக்கப்பட்ட எலும்புகளின் ஓசையாலும், வாரக்கணக்கில் உண்ணாநோன்பு இருந்ததாலும்தான் பெறப்பட்டதே தவிர, எடுத்த எடுப்பில் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்து பெறப்பட்டதல்ல என்கிற இந்திய விடுதலை வரலாற்றை இவர்களுக்கு யாராவது பாடம் எடுத்தால் தேவலாம்.பிரதமரே தனது விடுதலை நாள் பேருரையில் ஊழலை ஒப்புக்கொள்கிறார். திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் பணம் அதிகாரிகளின் சட்டைப்பைக்குப் போகிறது என்கிறார். அம்பலமாகியுள்ள ஊழல்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்கிறார். வலுவான சட்டம் கொண்டுவர மசோதா தயார் என்கிறார். ஆனால், அந்த மசோதாவில் குறையிருக்கிறது, அதை நீக்கி வலுப்படுத்துங்கள் என்று சொன்னால், செவிமடுக்க அவரது அரசு மறுக்கிறது. அவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்று உண்ணாவிரதம் என்கிற அறவழிப் போராட்டத்தைத் தொடங்கினால், ""தில்லி போலீஸ் தன் கடமையைச் செய்யும்'' என்கிறார் பிரதமர்.இந்தக் கைது நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கண்டனம் செய்யும்; நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்படும் அளவுக்கு ரகளை நடக்கும். நாடெங்கும் ஆங்காங்கே அண்ணா ஹசாரே ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதிப்பார்கள், ஊடகங்கள் இதைப் பெரிதுபடுத்தும் என்பதெல்லாம் காங்கிரஸ் கட்சிக்குத் தெரியாதது அல்ல. அவர்கள் தெரிந்தேதான் இதையெல்லாம் செய்கிறார்கள். அவர்கள் மக்களின் நாடியைப் பிடித்துப் பார்க்கிறார்கள், அவ்வளவே. 2ஜி அலைக்கற்றை ஊழல் பற்றி எல்லோரும் கூச்சல் போட்டார்கள். ஊடகங்கள் அதைத் தவிர, வேறு எதையும் பேசவில்லை. ஆனால், இன்று என்ன ஆயிற்று? அந்த வழக்கு நீர்த்துக்கொண்டே வருகிறது. ஏர்செல் நிறுவனம் - தயாநிதி மாறன் விவகாரத்தை ஊடகங்கள் எழுதித் தீர்த்தன. ஆனால், என்ன ஆயிற்று? மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமலேயே தள்ளிப்போடப்படுகிறது. காங்கிரஸ் கட்சி நம்புகிறது. எல்லாமும் மாறும், எல்லாமும் மறக்கப்படும் என்று.சாவந்த் கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ரூ.2.2 லட்சத்தை அண்ணா ஹசாரே தன் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்குப் பயன்படுத்தினார் என்று பற்றவைத்த நெருப்பை ஊதிக் கொழுந்துவிட்டு எரியச் செய்தால், இவருக்கு யார் ஆதரவு? இந்தக் கூட்டத்தின் மொத்த பலம் என்ன? பார்த்துவிடுவோம் என்கிற ஒரே எண்ணம்தான் இத்தகைய துணிச்சலான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளக் காரணம். காங்கிரஸ் கட்சி நம்புகிறது. எல்லாமும் மாறும். எல்லாமும் மறக்கப்படும் என்று.எதிர்க்கட்சிகளைப் பற்றி காங்கிரஸýக்கு ஒரு தனி மதிப்பீடு உள்ளது. ""எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், நாம் செய்யும் இதையேதான் அவர்கள் செய்வார்கள். அதை நாம் செய்தால் காந்தியப் போராட்டத்தை காங்கிரúஸ அடக்குவதா என்று விமர்சிப்பார்கள்,  அவ்வளவுதான்'' என்று காங்கிரஸ் தலைமை நம்புகிறது. இதில் மக்களின் மனவோட்டம் என்ன என்று சோதித்துப் பார்க்கிறது. அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவாக எத்தனை போராட்டங்கள் நடைபெறப் போகின்றன, எவ்வளவுபேர் திரள்கிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான், காங்கிரஸின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும். அண்ணா ஹசாரே குழுவினரின் உள்நோக்கத்தை யாரும் சந்தேகிக்க இடமில்லை. அவர்களின் எண்ணத்தில் நேர்மை இருக்கிறது. சிந்தனையில் நல்லெண்ணம் இருக்கிறது. அதேநேரத்தில், மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசும், நாடாளுமன்றமும் இருக்கும்போது, நாங்கள் சொல்வதை நீங்கள் கேளுங்கள் என்று நடைமுறைக்கு ஒவ்வாத சில அம்சங்களை லோக்பால் சட்ட மசோதாவில் சேர்க்கச் சொல்லி அடம்பிடிப்பதில் நியாயம் இல்லைதான். அரசுத் தரப்பு கோருவதுபோல, பதவியில் இருக்கும் பிரதமரும், நீதித்துறையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டுவரப்படுவதில் பல சிக்கல்களும், ஆபத்துகளும் இருக்கிறது என்பதும் உண்மை. சில தவறுகளுக்கிடையிலும் அண்ணா ஹசாரே குழுவினரின் கோரிக்கைகளை ஆதரிக்க முடிகிறது. அரசுத்தரப்பு கூறும் வாதங்களில் சில நியாயங்கள் இருந்தாலும், அரசுத் தரப்பை நம்மால் ஆதரிக்க முடியவில்லை. காரணம், அண்ணா ஹசாரேயிடம் உண்மையும், தேசப்பற்றும், நேர்மையும் இருக்கிறது. அரசுத் தரப்பின் வாதங்களில் அதிகார மமதையும், சுயநலமும், அதர்மத்தின் வெளிப்பாடுதான் வெளிப்படுகிறது. ஊழல் ஒழிப்பைப் பற்றி மன்மோகன் சிங் அரசு பேசினால், சாத்தான் வேதம் ஓதுவதுபோல இருக்கிறதே தவிர, இதய சுத்தியுடன் ஊழலுக்குக் கடிவாளம் போடும் எண்ணம் இருப்பதாக நம்மால் நம்ப முடியவில்லை.லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்று கூச்சல் போட்டுக்கொண்டே, ரகசியமாக லஞ்சம் கொடுத்துக் காரியம் சாதித்துக் கொள்பவன்தான் இந்தியன் என்று காங்கிரஸ் முழுமனதாக நம்புகிறது. அதனால், மக்கள் அண்ணா ஹசாரேவுக்காக ஒன்று திரளமாட்டார்கள் என்று கருதுகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி ஒன்றை மறந்துவிட்டது. இந்தியச் சுதந்திர வேள்வியில் தீவிரமாகப் பங்குகொண்டவர்கள் மொத்த மக்கள்தொகையில் 2 விழுக்காட்டினர் மட்டுமே! அவர்களின் அர்ப்பணிப்பும் தியாகமும்தான் இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத் தந்தது.  சரி, இன்றைய இந்தியர்கள் எப்படிப்பட்டவர்கள்?காங்கிரஸ் கருதுவதைப்போல - பொய்முகம் அணிந்தவர்களா? இல்லை, காந்தியவாதிகள் நினைப்பதைப்போல - முகத்திரை கிழிப்பவர்களா?

Tuesday, August 16, 2011

Who is Anna Hazare (Kisan Baburao Hazare)?

He once contemplated suicide and even wrote a two-page essay on why he wanted to end his life. Anna Hazare was not driven to such a pass by circumstances. He wanted to live no more because he was frustrated with life and wanted an answer to the purpose of human existence. The story goes that one day at the New Delhi Railway Station, he chanced upon a book on Swami Vivekananda. Drawn by Vivekananda's photograph, he is quoted as saying that he read the book and found his answer - that the motive of his life lay in service to his fellow humans. Today, Anna Hazare is the face of India's fight against corruption. He has taken that fight to the corridors of power and challenged the government at the highest level. People, the common man and well-known personalities alike, are supporting him in the hundreds swelling to the thousands. For Anna Hazare, it is another battle. And he has fought quite a few, Including some as a soldier for 15 years in Indian Army. He enlisted after the 1962 Indo-China war when the government exhorted young men to join the Army. In 1978, he took voluntary retirement from the 9th Maratha Battalion and returned home to Ralegaon Siddhi, a village in Maharashtra's drought-prone Ahmadnagar. He was 39 years old.
He found farmers back home struggling for survival and their suffering would prompt him to pioneer rainwater conservation that put his little hamlet on the international map as a model village. The villagers revere him. Thakaram Raut, a school teacher in Ralegaon Siddhi says, "Thanks to Anna's agitations, we got a school, we got electricity, we got development schemes for farmers.''
Anna Hazare's fight against corruption began here. He fought first against corruption that was blocking growth in rural India. His organization - the Bhrashtachar Virodhi Jan Andolan (People's movement against Corruption). His tool of protest - hunger strikes. And his prime target - politicians. Maharashtra stalwarts like Sharad Pawar and Bal Thackeray have often called his style of agitation nothing short of "blackmail".  But his weapon is potent. In 1995-96, he forced the Sena-BJP government in Maharashtra to drop two corrupt Cabinet Ministers. In 2003, he forced the Congress-Nationalist Congress Party (NCP) state government to set up an investigation against four ministers. In April this year, four days of fasting brought thousands of people out in support of his crusade against corruption. They also made the government realise it could not be dismissive about Anna Hazare and his mass appeal.  His relationship with the UPA government continues to be uneasy. The truce of April was short-lived. An exercise to set up a joint committee made up of equal numbers of government representatives and civil society activists, including Anna Hazare came to naught when the two sides failed to agree and drafted two different Lok Pal Bills. The government has brought its version in Parliament and Team Anna is livid.  The Gandhian is soldiering on. From one battle to another in his war against corruption. He fought from the front to have Right to Information (RTI) implemented. He is now fighting for the implementation of the Jan Lokpal Bill, the anti-corruption bill drafted by his team of crusaders.
This year, more than 30 years after Anna Hazare started his crusade, as the 74-year-old plans a second hunger strike in Delhi against large-scale corruption at the national level. Nothing really has changed except the scale of his battle.
Born on: 15 June, 1937
Real name: Kisan Baburao Hazare
According to the July 2011 findings of a CNN-IBN- Hindustan Times Opinion poll, the Indian public prefers Anna Hazare to the Government of India to tackle corruption, and also see him as more trustworthy than the government. According to an Indian daily English newspaper Daily News and Analysis’s annual list of top 50 most influential people for 2011, Anna Hazare is the most influential person in Mumbai.
Honours, Awards and International Recognition
Year of Award or Honor
Name of Award or Honor
Awarding Organization
2008
Jit Gill Memorial Award
World Bank
2005
Honorary Doctorate
Gandhigram Rural University
2003
Integrity Award
1998
CARE International Award
1997
Mahaveer Award

1996
Shiromani Award

1992
1990
1989
Krishi Bhushana Award
1986
Indira Priyadarshini Vrikshamitra Award
Government of India

What is the Jan Lokpal Bill?


The Jan Lokpal Bill (Citizen's ombudsman Bill) is a draft anti-corruption bill drawn up by prominent civil society activists seeking the appointment of a Jan Lokpal, an independent body that would investigate corruption cases, complete the investigation within a year and envisages trial in the case getting over in the next one year. Drafted by Justice Santosh Hegde (former Supreme Court Judge and former Lokayukta of Karnataka), Prashant Bhushan (Supreme Court Lawyer) and Arvind Kejriwal (RTI activist), the draft Bill envisages a system where a corrupt person found guilty would go to jail within two years of the complaint being made and his ill-gotten wealth being confiscated. It also seeks power to the Jan Lokpal to prosecute politicians and bureaucrats without government permission.
Retired IPS officer Kiran Bedi and other known people like Swami Agnivesh, Sri Sri Ravi Shankar, Anna Hazare and Mallika Sarabhai are also part of the movement, called India Against Corruption. Its website describes the movement as "an expression of collective anger of people of India against corruption. We have all come together to force/request/persuade/pressurize the Government to enact the Jan Lokpal Bill. We feel that if this Bill were enacted it would create an effective deterrence against corruption."
Anna Hazare, anti-corruption crusader, went on a fast-unto-death in April, demanding that this Bill, drafted by the civil society, be adopted. Four days into his fast, the government agreed to set up a joint committee with an equal number of members from the government and civil society side to draft the Lokpal Bill together. The two sides met several times but could not agree on fundamental elements like including the PM under the purview of the Lokpal. Eventually, both sides drafted their own version of the Bill.
The government has introduced its version in Parliament in this session. Team Anna is up in arms and calls the government version the "Joke Pal Bill." Anna Hazare declared that he would begin another fast in Delhi on August 16. Hours before he was to begin his hunger strike, the Delhi Police detained and later arrested him. There are widespread protests all over the country against his arrest.        
The website of the India Against Corruption movement calls the Lokpal Bill of the government an "eyewash" and has on it a critique of that government Bill.
A look at the salient features of Jan Lokpal Bill:
1. An institution called LOKPAL at the centre and LOKAYUKTA in each state will be set up
2. Like Supreme Court and Election Commission, they will be completely independent of the governments. No minister or bureaucrat will be able to influence their investigations.
3. Cases against corrupt people will not linger on for years anymore: Investigations in any case will have to be completed in one year. Trial should be completed in next one year so that the corrupt politician, officer or judge is sent to jail within two years.
4. The loss that a corrupt person caused to the government will be recovered at the time of conviction.
5. How will it help a common citizen: If any work of any citizen is not done in prescribed time in any government office, Lokpal will impose financial penalty on guilty officers, which will be given as compensation to the complainant.
6. So, you could approach Lokpal if your ration card or passport or voter card is not being made or if police is not registering your case or any other work is not being done in prescribed time. Lokpal will have to get it done in a month's time. You could also report any case of corruption to Lokpal like ration being siphoned off, poor quality roads been constructed or panchayat funds being siphoned off. Lokpal will have to complete its investigations in a year, trial will be over in next one year and the guilty will go to jail within two years.
7. But won't the government appoint corrupt and weak people as Lokpal members? That won't be possible because its members will be selected by judges, citizens and constitutional authorities and not by politicians, through a completely transparent and participatory process.
8. What if some officer in Lokpal becomes corrupt? The entire functioning of Lokpal/ Lokayukta will be completely transparent. Any complaint against any officer of Lokpal shall be investigated and the officer dismissed within two months.
9. What will happen to existing anti-corruption agencies? CVC, departmental vigilance and anti-corruption branch of CBI will be merged into Lokpal. Lokpal will have complete powers and machinery to independently investigate and prosecute any officer, judge or politician.
10. It will be the duty of the Lokpal to provide protection to those who are being victimized for raising their voice against corruption.

Under which section Anna Hazare arrested?


Anna Hazare sent to Tihar Jail, New Delhi. He now shares same space with A Raja, Kanimozhi and Suresh Kalmadi. (what a democratic country it is?) {The person whose election victory itself  a big Q is a Union Home Minister now and he is saying that Anna Hazare is doing wrongful acts..) I wonder why the 'future PM of India' (as quoted by Congress) Mr. R. Rahul Gandhi is so silent on this issue (perhaps he too follows Dr. Manmohan Singh principle. Chak de India..)


Section 107 of the Criminal Procedure Code: Apprehension of breech of peace and tranquility of an area.
(1) When an Executive Magistrate receives information that any person is likely to commit a breach of the peace or disturb the public tranquility or to do any wrongful act that may probably occasion a breach of' the peace or disturb the public tranquility and is of opinion that there is sufficient ground for proceeding, he may in the manner hereinafter provided, require such person to show cause why he should not be ordered to execute a bond 1[with or without sureties] for keeping the peace for such period, not exceeding one year, as the Magistrate thinks fit.
(2) Proceeding under this section may be taken before any Executive Magistrate when either the place where the breach of the peace or disturbance is apprehended is within his local jurisdiction or there is within such jurisdiction a person who is likely to commit a breach of the peace or disturb the public tranquility or to do any wrongful act as aforesaid beyond such jurisdiction.

Section 151 of the Criminal Procedure Code: Arrest to prevent the commission of cognizable offences.
(1) A police officer knowing of a design to commit any cognizable offence may arrest, without orders from a magistrate and without a warrant, the person so designing, if it appears to such officer that the commission of the offence cannot be otherwise prevented.
(2) No person arrested under sub-section (1) shall be detained in custody for a period exceeding twenty-four hours from the time of his arrest unless his further detention is required or authorized under any other provisions of this Code or of any other law for the time being in force.

PM Address to the Nation on India's 65th Independence Day


Hosting the National Flag in Red Fort on the occasion of India’s 65th Independence Day, Prime Minister Dr. Manmohan Singh said that those who disagreed with the proposed legislation should not resort to hunger strikes or fast-unto-death.
On Corruption:- He also said that the corruption was a matter of serious concern to all and a big obstacle to emergence of India as a major global economic power. Dr. Singh emphasised that no government had the magic wand to eradicate the menace. Dr. Singh asserted that the government’s commitment to establish a strong institution of Lokpal to deal with corruption at higher levels, Dr. Singh announced that several legislative proposals were in the pipeline to root out bribery from various layers of the society.

On Judicial System:- Dr. Singh insisted that bringing judiciary within the ambit of the Lokpal would go against its independence. However we do need a framework in which the judiciary becomes more accountable. It is with this aim that we have introduced the Judicial Accountability Bill in Parliament which would be passed soon. If our system delivers justice in an effective manner, government officials would think twice before committing a wrong act of greed or under political pressure.
On Anna Hazare and his teams (without mentioning their names):- Dr. Singh said that there are some people who want to create disturbances in the country so that our progress gets stalled. All this can have a negative impact on us. But we will not let this happen. Dr. Singh made it clear that the Parliament alone can now decide the contours of the legislation.

On economy:- Dr. Singh refereed to the slowdown of the world economy and unrest in many Arab countries of the Middle East. Due to the global economy slowdown, some impacts will be on India too which is inevitable and India is prepared to face all the hurdles.
On terrorism:- Dr. Singh said that there could not be any slipup in vigilance in the fight against terror, and it was a long battle to be fought jointly, by the Centre, the State governments and the common man.
On inflation:- Dr. Singh said sometimes the country was confronted with a situation in which the reasons for rising prices lay outside. He shared the concerns over the inflation and listing the efforts taken by the government to rein in prices.
On regulatory bodies:- Dr. Singh said that the Union Government is considering legislation to ‘monitor the work’ of independent regulatory authorities to make them ‘more accountable without compromising their independence’ . (He added that at the moment there was no legislation to scrutinize the functioning of independent regulatory bodies). Dr. Singh, however not name any regulatory body. Some of the authorities include the TRAI, AERA (Airports Economic Regulatory Authority) {Both these are involved in 2G spectrum scam and Air India debacle). The other categories of the authorities to oversee the functioning of the government are set up under the provisions of the Constitution. They include CAG, CVC and Election Commission.

Sunday, August 14, 2011

INDEPENDENCE DAY SPECIAL - QUESTIONS

Hi, here are some of the questions related with our country, If possible answer it (hope don't use any reference na)
==========================================
Wishing U HAPPY INDEPENDCE DAY...
==========================================
(01) What is the ratio between the length and breadth our National Flag?
(02) The National Anthem "Jana-gana-mana" was composed originally in the language of
(03) The National Song "Vande Mataram" was composed originally in the language of
(04) Which is the largest state in India (by area wise)
(05) The Fundamental Rights in our Constitution is borrowed from which country's Constitution?
(06) The first State to be formed on linguistic (language)base is
(07) Who is the Chairman of the present Rajya Sabha?
(08) How many Lok Sabha Constituencies are there in India (exclude the nominated members)
(09) The head of the CAG now is (CAG - now rocking in India)
(10) The Deputy Speaker of Lok Sabha at present is

{Try to post ur answer in comments and leave ur mail id for the correct answers...}

Friday, August 12, 2011

Indian(s) in Swiss Bank list - published by Wikileaks

SWISS BANK – INDIAN LIST

Name                        Amount in Rs(Cr)   Swiss Bank Name
Karunanithi                        35000                Baloise bank Soba
Kalanidhi Maran              15000               Clariden Leu AG
MK Stalin                            10500               ABS
Raja                                       7800                  Aareal Bank AG
SS Palanimanickam         4800                 Rothschild Bank AG
Prabodh Metha                28000              LGT Bank of Liechtenstein
Chintan  Gandhi                 1956                LGT Bank of Liechtenstein
Arun metha                        2500                LGT Bank of Liechtenstein
Ramdev pasvan                 3500                UBP
Neara  radiya                   289990             UBS
 Rajeev Gandhi                 198000            UBS
Naresh Goval                   145600         Bank CA st Gallen AG
Manoj Dhupelia                 9850               LGT Bank of Liechtenstein
A Harshad Metha (D)      135800          UBS AG
Ketan parekh                     8200                Bank aek Genossenschaft
Paban Singh Ghatowar 3908                Aargauische Kantonalbank
Rendezvous Sports World 29800        AKB Private bank Zurich AG
HD kumaraswamy           14500            Bank Frey & Co.AG
CP Krishna Nair             4520               Banca Intermobiliare di Investimenti
LAlu Prasad Yadav            29800           AKB Private bank Zurich AG
Jyotiraditya  Scindia            9000          Bank EEK AG
Sarath pawar                     28000           Alternative Bank ABS
Suresh kalmadi                   5900              UBS
Chithambaram                  32000           Rothschild Bank AG
Raj Foundation                189008       LGT Bank of Liechtenstein
Uravashi Foundation      289745       LGT Bank of Liechtenstein
Ambrunova Trust             17658          LGT Bank of Liechtenstein
Arun Kochar                     15450           LGT Bank of Liechtenstein
Praboth Metha                  1480          LGT Bank of Liechtenstein

Monday, August 8, 2011

ஜெய‌ல‌லிதா: தேசிய‌க் க‌ன‌வுக‌ள்

த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ர் ஜெ.ஜெய‌ல‌லிதா புதுவித‌மாக‌ விஸ்வ‌ரூப‌ம் எடுத்து வ‌ருகிறார்.ஆனால் அது க‌ட‌ந்த கால‌த்து க‌ட்அவுட் அல்ல‌. இன்றைய‌ இந்திய‌ அர‌சிய‌லில் ஒரு மாநில‌ முத‌ல்வ‌ராக‌ இருப்ப‌வ‌ர் தேசிய‌ அள‌விலும் செல்வாக்கு உடைய‌வ‌ராக‌ இருந்தாக‌ வேண்டும் என்ப‌து கால‌த்தின் க‌ட்டாய‌ம். த‌மிழ‌க‌ அள‌வில் த‌ன‌து பிர‌தான எதிர்க்க‌ட்சியான‌ தி.மு.க‌.வை சின்னாபின்ன‌மாக்க‌ பல‌ ந‌ட‌வ‌டிக்கை எடுத்து வ‌ரும் ஜெய‌ல‌லிதா, தேசிய அள‌விலும் த‌ன் செல்வாக்கை உய‌ர்த்திக் கொள்ள‌ ப‌டிப்ப‌டியாக‌ த‌யாராகி வ‌ருகிறார். இன்த‌ நோக்க‌ங்க‌ள் எதுவும் அவ‌ருக்கு புதித‌ல்ல‌ என்றாலும், இவ‌ற்றை அடைவ‌தற்கான‌ அணுகுமுறையை அவ‌ர் மாற்றிக்கொண்டிருப்ப‌தாக‌த் தெரிகிற‌து. காங்கிர‌ஸ், பா.ஜ.க‌. ம‌ற்றும் இட‌து சாரிக‌ள் உள்ளிட்ட மூன்று அணிக‌ளில் ஏதேனும் ஒன்றோடு சேராம‌ல் இருப்ப‌து தேசிய‌ அள‌வில் சாத்திய‌மில்லை. ஜெய‌ல‌லிதா எந்த்ப் ப‌க்க‌ம்? ஆக‌ஸ்ட் முத‌ல் வார‌த்தில் நாடாளும‌ன்ற‌த்தின் ம‌ழைக்கால‌த்தொட‌ரின் முத‌ல் நாட்க‌ளில் அ.இ.அ.தி.மு.க‌. தான் எந்த‌ அணியில் இருக்கிற‌து என்ப‌தை விட‌ எந்த‌ அணிக்குச் சாத‌க‌மாக‌ இல்லை என்ப‌தை வெளிப்ப‌டுத்திய‌து. ஆக‌ஸ்ட் 4ந் தேதி விலைவுய‌ர்வு குறித்த‌ தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், சி.பி.ஐ. (CPI) தாக்க‌ல் செய்த‌ திருத்த‌த்தை ஆத‌ரித்த‌ வெகு சில‌ க‌ட்சிக‌ளில் அ.இ.அ.தி.மு.க‌வும் ஒன்று. இந்த‌ விஷிய‌த்தில் இட‌துசாரிக‌ள், தெலுங்கு தேச‌ம், பிஜு ஜ‌ன‌தா த‌ள் ஆகிய‌ன‌ ஓர் அணியில் இருந்த‌ன. கூட்ட‌த்தொட‌ரின் முத்ல‌ நாளில், 2ஜி விவ‌கார‌ம் குறித்து பா.ஜ‌.க‌வின‌ரோடு சேர்ந்து பிர‌ச்னையை கிள்ப்பினார்க‌ள் அ.இ.அ.தி.மு.க‌வின‌ர். அத‌ற்கான‌ அஸ்திவார‌த்தை ஜெ.வே முன்ன‌தாக‌ போட்டு வைத்திருந்தார். 2ஜி பிர‌ச்னையில் பிர‌தான‌மாக‌க் குற்ற‌ம் சாட்ட‌ப்ப‌ட்டிருக்கும் ஆ.ராசா முன்வைத்திருக்கும் குற்ற‌ச்சாட்டுக‌ளுக்கு பிர‌த‌ம‌ர் ம‌ன்மோக‌ன் சிங்கும், ஐ.மு.கூ. த‌லைவ‌ர் சோனியா காந்தியும் விள‌க்க‌ம் அளிக்க‌ வேண்டும் என்று ஜுலை 30ந் தேதி ஜெ. ஒரு அதிர‌டி அறிக்கையை வெளியிட்டார். ம‌த்திய‌ அர‌சுக்கு எதிராக‌ நேர‌டியான் மோத‌லில் அ.இ.அ.தி.மு.க. இறங்கும் என்ப‌து ஜுலை இறுதியிலேயே தெரிந்து விட்ட‌து. இதுவ‌ரை காங்கிர‌ஸ் த‌லைவ‌ர்க‌ளை தாக்காம‌ல், விம‌ர்ச‌னங்க‌ளை மென்மையாக‌ முன்வைத்து வ‌ந்த‌ அ.இ.அ.தி.மு.க. இனி அத‌க‌ள‌ம் செய்ய‌லாம் என்ப‌த‌ற்கு ப‌ச்சைக்கொடி காட்டிவிட்டார் ஜெ. என்ப‌து தான் கூட்ட‌த்தில் க‌ல்ந்துகொண்ட‌ எம்.பி.க்க‌ளுக்கு கிடைத்த‌ செய்தி. காங்கிரசை எதிர்ப்ப‌தில் முக்கிய‌மான‌ வாய்ப்புக‌ளை ஜெ. தெளிவாக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்திக்கொண்டுவ‌ருகிறார். வ‌குப்பு வாரி ம‌ற்றும் இல‌க்கு குறித்த‌ வ‌ன்முறைக‌ள் த‌டுப்பு ம‌சோதா 2001 ஐ எதிர்க்க‌ காங்கிர‌ஸ் அல்லாத‌ முத‌ல்வ‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் அவ‌ர் க‌டித‌ம் எழுதினார். இதில் ஜெய‌ல‌லிதா நேர‌டியாக‌ ம‌த்திய‌-மாநில‌ப் பிர‌ச்னையாக‌ இதை அணுகியிருந்த‌தை குறிப்பிட‌த்த‌குந்த‌ உத்தியாக‌வே கூற‌வேண்டும்.
ஜுன் 14, 2011ல் முத‌ல்வ‌ரான‌ பிற‌கு முத‌ன்முறையாக‌ தில்லிக்குச் சென்று பிர‌த‌ம‌ர் ம‌ன்மோக‌ன் சிங்கை அவ‌ர‌து இல்ல‌த்தில் ச‌ந்தித்த‌ பிற‌கு, ப‌த்திரிகையாள‌ர்க‌ளிட‌ம் பேசிய‌போது, "ஐமுகூ 2 உட‌ன் த‌மிழ்நாடு ந‌ல்ல‌ உற‌வை பேணுகிற‌து. ம‌த்திய‌ அர‌சோடு மோத‌ல் அணுகுமுறையைக் க‌டைபிடிக்க‌ மாட்டோம்" என்றுதான் கூறினார். அது ச‌ம்பிர‌தாய‌மான‌ வார்த்தைக‌ள் என்ப‌தில் ச‌ந்தேக‌மில்லை. காங்கிர‌சுக்கு எதிரான் அவ‌ர‌து ந‌க‌ர்வுக‌ள் இதுவ‌ரை அர‌சுக்கு எதிரான விம‌ர்ச‌ன‌ங்க‌ளோடுதான் நிற்கிற‌ன. ஆனால் அவ்வ‌ப்போது ஜெ. கோப‌க்க‌ணைக‌ள் அவ‌ர‌து நெடுங்கால‌ எதிரியான உள்துறை அமைச்ச‌ர் ப‌.சித‌ம்ப‌ர‌த்தின் மீது பாய‌த்தான் செய்கிற‌து. தில்லியில் பிர‌த‌ம‌ருடனான‌ ஜுன் 14 ச‌ந்திப்புக்குப் பின் பேசிய‌போது கூட‌, 2009 நாடாளும‌ன்ற‌த் தேர்த‌லில் ப.சித‌ம்ப‌ர‌ம் மோச‌டி செய்து வெற்றிபெற்றார் என்று ஜெ. கூறியிருந்தார்.


ஜுன் 14 தில்லி வ‌ருகையின்போது, அவ‌ரை பா.ஜ‌.க‌.வின் மூத்த‌ த‌லைவ‌ர் ர‌விச‌ங்க‌ர், CPI தேசிய‌ த‌லைவ‌ர் து.ராஜாவும், தில்லி முத‌ல்வ‌ர் ஷீலா தீக்ஷித்தும் த‌னித் த‌னியே ம‌ரியாதை நிமித்த‌ம் ச‌ந்தித்தார்க‌ள். எல்லாக் க‌ட்சிக‌ளாலும் அழைக்க‌ப் ப‌டுகிற‌, அதே ச‌ம‌ய‌ம் எல்லாக் க‌ட்சிக‌ளாலும் அஞ்ச‌ப்ப‌டுகிற‌ த‌லைவ‌ராக‌வே அவ‌ர் இருந்து வ‌ருகிறார்.