RIGHT TO EDUCATION IS NOW A FUNDAMENTAL RIGHT...
India became 135th country in the world to make Education as a compulsory for the children.............
ஒரு நாட்டில் கல்வியறிவு பெற்றவர்களின் சதவீதத்தை வைத்து, அந்த நாட்டின் வளர்ச்சியை கணக்கிட்டு விடலாம்'என, கூறுவது உண்டு. அந்த அளவுக்கு, கல்விக்கும், ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்தியாவில் மக்கள் தொகை நூறு கோடியை கடந்து விட்டாலும், கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை, திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. விழிப்புணர்வு மிக்க கேரளா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மட்டுமே, கல்வி அறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை மகிழ்ச்சி அடையக் கூடிய வகையில் உள்ளது. உ.பி., பீகார், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர் போன்ற பெரும்பாலான மாநிலங்களில், மிக குறைந்த மக்களே, படித்தவர்களாக உள்ளனர். இதனால் தான், இந்த மாநிலங்கள் பொருளாதார ரீதியாக இன்னும் வளர்ச்சியை எட்ட முடியவில்லை. இதற்கு வறுமையும் ஒரு முக்கிய காரணம். ஏழ்மை காரணமாக, பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிடும் குழந்தைகளின் எண்ணிக்கை, இந்த மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. இதனால், அந்த குழந்தைகளின் எதிர்காலம் மட்டும் அல்லாமல், நாட்டின் எதிர்காலமே கேள்விக் குறியாகிறது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாகவே, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 'கல்வி அடிப்படை உரிமை மற்றும் கட்டாயக் கல்வி சட்டம்' கடந்த நன்றி முதல் தேதியிலிருந்து அமல் படுத்தப் பட்டுள்ளது. அனைத்து நன்றி ஏகமனதான வரவேற்புக்கு இடையே அமலுக்கு வந்துள்ள இந்த சட்டத்தின் மூலம், நாட்டில் உள்ள ஆறில் இருந்து 14 வயதுக்குட்பட்ட 22 கோடி குழந்தைகளின் ஆரம்ப கல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்து வந்த பாதை:
பிரிட்டிஷ் ஆட்சி நடந்தபோது, 'தினமலர் மக்கள் அனைவருக்கும் கல்வியை அடிப்படை உரிமையாக்க வேண்டும். இதற்காக சட்டம் நிறைவேற்ற வேண்டும்'என, கோபால கிருஷ்ண கோகலே முழங்கினார். நூறு ஆண்டுகளுக்கு பின், தற்போது தான், அவரது தினமலர் நிறைவேற்றபடுளது . கடந்த 2002ல், ஆறில் இருந்து 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கல்வியை கட்டாயமாக்குவதோடு, அவர்களுக்கு இலவச கல்வி அளிக்க வேண்டும் என, சட்ட திருத்தம் செய்யப்பட்டது. கடந்த 2003ல் இது தொடர்பான அறிவிப்பு மத்திய அரசின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. மத்திய கல்வி ஆலோசனை வாரியம் கடந்த 2005ல் இது தொடர்பாக மசோதாவை தயார் செய்து, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் அளித்தது. பின்னர், இந்த மசோதா மத்திய ஆலோசனை கமிட்டிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. கடந்த 2006ல் இந்த மசோதாவை பரிசீலித்த மத்திய திட்ட கமிஷன், இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு போதிய நிதி வசதி இல்லை என, கூறி, நிராகரித்து விட்டது. பின்னர், பல்வேறு குழுக்களின் ஆலோசனையை அடுத்து, 2009ல் பார்லிமென்டில் இது தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசும், மாநில அரசுகளும் 55:45 என்ற வீதத்தில் இதற்காகும் செலவை ஏற்றுக் கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. தற்போது அனைத்து தடைகளையும் கடந்து, கடந்த முதல் தேதியில் இருந்து, இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
சட்டத்தின் பயன்கள் என்ன?
இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளதன் மூலம், கீழ்கண்ட பயன்கள் கிடைக்கும்........
சவால்:
இந்த சட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு,மத்திய, மாநில அரசுகள் சில சாவல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நாடு முழுவதும் ஆறில் இருந்து 14 வயதுக்குட்பட்ட 22 கோடி குழந்தைகள் உள்ளனர். கல்வியறிவு குறித்து, எத்தனை விழிப்புணர்வு ஏற்பட்டாலும் கூட, இவர்களில் இன்னும் 92 லட்சம் குழந்தைகள், படிப்பை பாதியிலேயே கைவிடுகின்றனர். இதற்கு முற்றுப் புள்ளி வைப்பது என்பது, அரசுக்கு சவாலான விஷயமாகவே இருக்கும். அடுத்ததாக, ஆசிரியர்கள் பிரச்னை மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது. தற்போது, மத்திய மாவட்ட கல்வி தகவல் மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 50 லட்சத்து 70 ஆயிரம் பேர். அரசு வெளியிட்டுள்ள புதிய விகிதாச்சார அறிவிப்பின்படி பார்த்தால், தற்போதே மூன்று லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. மேலும், 3.7 லட்சம் ஆசிரியர்கள், ஆண்டு தோறும் ஓய்வு பெறுகின்றனர். இதன் அடிப்படையில், அடுத்த ஐந்தாண்டுகளில் மட்டும், ஓய்வு பெற்றுச் செல்லும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டும். இதனால், தற்போதுள்ள விகிதாச்சாரப்படி பணிபுரிய போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்படும்.அடுத்த சில ஆண்டுகளில், மேலும் லட்சக்கணக்கான தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இது அத்தனை எளிதான காரியமல்ல. மேலும், ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் கல்வித் தகுதி, இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு பெரும் பின்னடைவாக இருக்கும். தற்போது பணியாற்றுவோரில், மூன்றில் ஒரு பங்கு ஆசிரியர்கள், பள்ளி இறுதி வகுப்பு வரை மட்டுமே படித்தவர்கள். இவர்களால், அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் பட்டப் படிப்பை முடிப்பது என்பது சவாலான விஷயமாகவே இருக்கும்.
அதிக நிதி தேவை:
கட்டாய கல்வி சட்டத்தின் நோக்கம் நிறைவேற வேண்டுமெனில், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு மேலும், அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியது அவசியம். நம் நாட்டில், கடந்த 2006-07ல் அனைத்து விதமான கல்விக்கான மொத்த செலவு 1.33 லட்சம் கோடியாக இருந்தது. நாட்டில் உள்ள மற்ற அனைத்து அரசு செலவினங்களை கணக் கிட்டால், கல்விக்கான செலவு 13 சதவீதம். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 3.6 சதவீதம் மட்டுமே. கட்டாயக் கல்வி சட்டத்தின் நோக்கம் நிறைவேற வேண்டுமெனில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீத நிதியையாவது, கல்விக்காக மத்திய அரசு ஒதுக்க வேண்டும்.
அரசு செய்ய வேண்டியது என்ன?
ஏழை-பணக்காரன், நகர்ப்புறம்-கிராமம் என்ற வேறுபாட்டை தகர்த்து, ஒரு மனிதனை தன்னம்பிக்கையுடன் எழுந்து நிற்க செய்யும் தகுதி கல்விக்கு மட்டுமே உண்டு. ஒவ்வொரு பெற்றோரின் மனதிலும், தங்கள் குழந்தைகள் நல்ல கல்வி கற்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. இதனால், தங்கள் குழந்தைகளை அவர்கள் பள்ளியில் சேர்த்து விடுகின்றனர். ஆனால், அந்த படிப்பை அவர்கள் தொடர்வது தான், பெரும் போராட்டமாக உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, ஒரு ஆண்டில் முதல் வகுப்பில் 13 கோடி குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர். ஆனால், இவர்களில் குறிப்பிட்ட சதவீதம் பேர், ஐந்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விடுகின்றனர். பின், எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு என, ஒவ்வொரு கால கட்டத்திலும் படிப்பை பாதியிலேயே கைவிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.இறுதியில் பிளஸ் 2 முடிக்கும்போது பார்த்தால், 18 கோடியில் துவங்கிய எண்ணிக்கை, வெறும் மூன்று கோடியாக குறைந்து விடுகிறது. இந்த அவலத்திற்கு முதலில் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். போதிய கல்வியறிவு பெறாத பெற்றோராக இருந்தால், அவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தகுதியான ஆசிரியர்கள், வீட்டுக்கு அருகிலேயே பள்ளி, போதிய போக்குவரத்து வசதி, பள்ளிகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படுவது அவசியம். இவையனைத்தையும் அரசு வெற்றிகரமாக சாதித்தால் மட்டுமே, கட்டாய கல்விச் சட்டத்தின் நோக்கம் நிறைவேறும். இருந்தாலும், பல ஆண்டு போராட்டத்துக்கு பின், இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது, வரவேற்கபட வேண்டிய விஷயம். சட்டத்துக்கு முட்டுக்கட்டை: கட்டாய கல்வி சட்டத்தை எதிர்த்து, சில பள்ளிகள் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளன. அவர்களின் மனுவில்,'கட்டாய கல்வி சட்டம், அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. தனியார் கல்வி நிறுவனங்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல்'என, தெரிவித்துள்ளன. இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபல் கூறுகையில்,'இதுபோன்ற சட்ட நடவடிக்கைகளால், கட் டாய கல்வி சட்டத்தை அமல்படுத்துவதற்கு எந்த தடையும் ஏற்படுத்த முடியாது'என்றார்.ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளை புறக்கணித்தது ஏன்? கட்டாய கல்வி சட்டத்தில் ஆறில் இருந்து 14 வயதுக்குட் பட்ட குழந்தைகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கு ஒரு தரப்பினர் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் விஷயத்தில் தான் பெரிதும் கவனம் செலுத்த வேண்டும். மனித மூளையின் செயல்பாடு குறித்து சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,'ஒவ்வொருவருக்குமே, ஒன்றில் இருந்து ஆறு வயது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வயதில் கல்வி விஷயத்தில் புறக்கணிக்கப்படும் குழந்தைகளுக்கு, எதிர்காலத்தில் கற்கும் திறன், செயல் பாடுகள், உடல் நலம் போன்றவற்றில் பாதிப்பு ஏற்படும்'என, தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கட்டாய கல்வி சட்டத்தில், ஆறு முதல் 14 வயது என, இருப்பதை, முதல் வயதில் இருந்து 14 வயது வரை என, அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.
கல்வியை அடிப்படை உரிமையாக்கியும், இலவசமாக்கியும் சட்டம் இயற்றியுள்ள நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. ஏற்கனவே 134 நாடுகள் இந்த சட்டத்தை அமல் படுத்தியுள்ளன. தற்போது இந்த வரிசையில் 135வது நாடாக இந்தியா சேர்ந்துள்ளது. கல்வி இலவசம் என, சில நாடுகள் சட்டம் இயற்றினாலும், சில நாடுகளில் இன்னும் ஆரம்ப கல்விக்காக சிறிதளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த 2005ல் உலக வங்கி நடத்திய சர்வேயின்படி, 13 நாடுகளில் மட்டுமே, ஆரம்ப கல்வி முற்றிலும் இலவசமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படடுள்ளது. சிலியில் ஆறில் இருந்து 21 வயதுக்குட் பட்டோருக்கு இலவச கல்வி அளிக்கப்படுகிறது. இதுதவிர, ஜெர்மனி, பெல்ஜியம், இத்தாலி, நார்வே உள்ளிட்ட நாடுகளில், பள்ளி படிப்பு முழுவதுமே இலவசமாக்கப் பட்டுள்ளது.
மாநிலங்கள் ஒத்துழைப்பு அவசியம்:
கட்டாய கல்வி சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், அது முழு அளவில் வெற்றி பெறுவது என்பது, மாநில அரசுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பொறுத்தே அமையும். ஆசிரியர் நியமனம், கட்டமைப்பு வசதிகள் என, அனைத்து விஷயங்களையும் மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும். இது எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு, மாநில அரசுகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாநில அரசுகள் களத்தில் இறங்கி செயல்பட வேண்டிய நேரம் இது.
.......... நன்றி தினமலர்.