Thursday, April 8, 2010

சமீபத்தில் உங்களை நெகிழ வைத்த சம்பவம்?/இந்தியாவில் என்னதான் நடக்கிறது

கோர்ட் கூடுகிறது . நீதிபதி இருக்கையில் வந்து அமர்கிறார். அன்றைய குற்றவாளி அழைக்கப்படுகிறார். குற்றவாளி, கூண்டில் ஏறி நிற்கிறார். தலையத் தூக்கி குற்றவாளி-ஐ பார்க்காமலே ,
நீதிபதி : "உன் பெயர் என்ன?" .
"அய்யா பசிக்குது" என்று பதில் சொன்ன குற்றவாளி-ஐ தலைநிமர்ந்து பார்த்த நீதிபதிக்கு அதிர்ச்சி. ஆயிரம் கத்திகள் தன் இதயத்தை குத்துவதுபோல் வலிக்கிறது நீதிபதிக்கு. காரணம் கூண்டில் இருந்த குற்றவாளிக்கு வயது ஆறு . பதறிப்போன நீதிபதி தன் பையில் இருந்த பணத்தை எடுத்து, அந்த சிறுவனுக்கு சமோசா வாங்கி வரச் சொல்கிறார். விசாரணைக்காக அந்தச் சிறுவன் மூன்று கிலோமீட்டர் காவலர்களால் நடத்தியே இழுத்து வரப்பட்டிருந்ததைக் கேட்டு நீதிமன்றமே பதறியது. "இந்தச் சிறுவன் எந்தக் குற்றத்திற்காக கைது செயப்பட்டிருந்தாலும் அந்த வழக்கை டிஸ்மிஸ் செய்கிறேன் " என்று தீர்ப்பை நீதிபதி வாசித்தபோது நீதிதேவதையின் கண்களைக் கட்டியிருந்த கறுப்புத்துணி ஈரமாகியிருந்தது. உ.பி. யைச் சேர்ந்த அந்தச் சிறுவனின் தந்தைக்கும் பக்கத்து வீட்டுக்கர்ருக்கும் நடந்த சண்டையில் சிறுவனையும் குற்றவாளியாக பதிவு செய்திருக்கிறார்கள் . இந்தியாவில் என்னதான் நடக்கிறது.....
{ "குமுதம் " அரசு பதில்கள் - இருந்து எடுக்கப்பட்டவை....... "}

No comments:

Post a Comment