Wednesday, May 12, 2010

விஸ்வநாதன் ஆனந்த் : உலக செஸ் சாம்பியன்ஷிப்

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரை, மீண்டும் கைப்பற்றி அசத்தினார் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த். பல்கேரியாவில் உள்ள சோபியா நகரில், இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், பல்கேரியாவின் வெசலின் தபலோவ் மோதும், உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. மொத்தம் 12 சுற்றுக்கள் கொண்ட இப்போட்டியின் 11 வது சுற்றின் முடிவில் ஆனந்த், தபலோவ் இருவரும் தலா 5.5 புள்ளிகள் பெற்றிருந்தனர். ஆனந்த் வெற்றி: நேற்று 12 மற்றும் கடைசி சுற்று ஆட்டம் நடந்தது. நடப்பு சாம்பியன் ஆனந்த் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியின் 56 வது நகர்த்தலில் தபலோவ் தோல்வியை ஒப்புக் கொண்டார். இதன் மூலம் 12 சுற்றுகளின் முடிவில் 6.5 புள்ளிகள் பெற்ற ஆனந்த் வெற்றி பெற்றார். இவ்வெற்றியின் மூலம் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார் ஆனந்த். கடந்த 2008 ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில், ரஷ்யாவின் விளாடிமர் கிராம்னிக்கை ஆனந்த் வீழ்த்தியிருந்தார். நான்காவது முறை: ஆனந்த் கைப்பற்றும் நான்காவது உலக சாம்பியன்ஷிப் பட்டம் இது. இதற்கு முன் கடந்த 2000, 2007 மற்றும் 2008 ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் ஆனந்த்.

No comments:

Post a Comment