Wednesday, September 5, 2012

நிலக்கரி ஊழல்

பாத்திரக்கடையில் யானை புகுந்தது போல நமது நாடாளுமன்றம் அலங்கோலப்படுவது ஒன்றும் புதிது அல்ல. பொதுவாக அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்ட எதிர்க்கட்சிகள் கையாளும் ஒரே ஜனநாயகமுறை நமது அரசியல்வாதிகளுக்குத் தெரிந்தது – மேல் சபையோ, கீழ்சபையோ அமளி செய்து சந்தைக்கடையாக்குவதுதான். இதைச் சாமாளிக்க முடியாத ஆளுங்கட்சி தரப்பினர் இதைவிட பெரிதாக கத்தி கலாட்டா செய்வார்கள் – எதிர்க்கட்சி ஆளுங்கட்சியாக் இருந்தபோது நடந்த பழைய கதைகளை பெரிதுபடுத்தி.
       சபாநாயகர் என்கிற “நடுநிலை தவறாத நடுவர்” ஆளுங்கட்சியின் கடைக்கண் பார்வைக்கேற்ப எதிர்க்கட்சியினரை மட்டும் அடக்குவார். சமாளிக்க முடியவில்லை என்றால் அவையை ஒத்திவைத்து தப்பிப்பார் (ஆளுங்கட்சியை தப்புவிப்பார்) 65-ஆண்டுகளில் நாம் கற்றுக்கொண்ட ஜனநாயகம் இதுதான்
       CAG அறிக்கை நிலக்கரி சுரங்க ஊழலில் அரசுக்கு நஷ்டம் சுமார் 1.86 லட்சம் கோடி ரூபாய் என்று விவரத்தோடு அறிக்கையிட்டு 2-ஜியைப் பின்னுக்குத்தள்ளிவிட்டது. டெல்லி விமான நிலையத்தில் 3000 ஏக்கர் நிலத்தை தனியார் நிறுவனத்துக்கு ஏலம் விட்டதிலும் கட்டமைப்பு வளர்ச்சிக் கட்டணம் என்ற பெயரில் அவர்களுக்கு தாரை வார்த்ததிலும் பல ஆயிரம் கோடிகள் அரசுக்கு நஷ்டமாம்.  இந்த விஷயத்தில் லாபம் பெற்றது ஜி.எம்.ஆர். (GMR) குழுமம். பல வருடங்களுக்கு முன்னால் எஞ்சினீயரிங் என்ற பெயரில் சென்னையில் சிறு தொழில் புரிந்த மல்லிகார்ஜுன ராவின் நிறுவனம்தான் GMR. இன்று டெல்லி, ஐதராபாத் உள்ளிட்ட பல விமான நிலைய நிர்வாகம் இவர் கையில். பல பவர் பிளான்டுகளும் (Power Plants), மெகா பாலங்கள், கட்டடங்களுக்கான அரசு கான்டிராக்ட் இவர் கை(பை)யில். டெல்லியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்திற்கு 99 வருட லீசில் வருட லீஸ் வாடகையாக் அரசு வசூலிப்பது வெறும் நூறு ரூபாய்!!!!
       இதே போல் அனில அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சாசன் மின் நிலைஅயத்தில் நிலக்கரியை மிக சகாய விலைக்கு அரசு கொடுத்துவருகிறது. பதிலுக்கு மின்சாரத்தை குறைந்த விலைக்கு வாங்குவதாக  அந்த நிலக்கரியில் ஒரு பகுதியை தன் வேறு மின்நிலையத்தில் பயன்படுத்தியதுடன் அதிலிருந்து அரசுக்கு அதிகவிலையில் மின்சாரம் விற்றுவருகிறதாம் ரிலையன்ஸ். இந்த வகையில் சுமார் 30000 கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டமாம். 
       இந்த மூன்று விவரங்களையும் அறிக்கையாக வெளியிட்டது CAG இதற்கப்புறம் நடந்ததுதான் உச்சக்கட்ட கிளைமாக்ஸ். CAG தன் வரம்பு மீறி செயல்பட்டார் என்று நாராயணசாமி தெரிவித்தார்.  CAGக்கு கணக்கு தெரியவில்லை என்று நிலக்கரி அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஷ்வால் கூறினார். ஏலமுறையில் நிலக்கரி சுரங்கத்தை விற்பதாக UPA அரசின் தலைவரான பிரதமரே 2004-ல் அதிகாரப்பூர்வாமாக முடிவு செய்த பிறகும் 2012 வரை அதை நடைமுறைப்படுத்தவேயில்லை. இதில் சுமார் ஐந்து ஆண்டுகள் விட்டுவிட்டு பிரதமர் மன்மோகன்சிங்கே நிலக்கரித்துறைக்கும் பொறூப்பு வகித்தார் என்பதுதான் விஷேசம்!!
       தன் அரசின் முடிவுகளி தானே தள்ளிவைத்துவிட்டு மிக மிக சகாய விலையில் அல்லது இலவசமாகவே நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதன் விளைவுதான் 1.86 லட்சம் கோடி நஷ்டம். தொழில் வள்ர்ச்சியை மனதில் வைத்து இப்படிச் செய்தார்களாம் – யாருடைய வளர்ச்சியை மனதில வைத்து என்பதுதான் புதிர். 
       இந்த மெகா மெகா ஊழலுக்காக பிரதமர் மன்மோகன்சிங் தனது பதவியயை ராஜினாமா செய்ய வேண்டும் என்று BJP  நாடாளுமன்றத்திலும் வெளியிலும் குதிக்கிறது. இது ஊழலேயில்லை, அரசுக்கு நஷ்டமே இல்லை என்று Congress கூறுகிறது. 2G, CWG ஊழல்களிலும் முதலில் இப்படிதான் சாதித்தார்கள். உச்சநீதிமன்றம் தலையிட்ட பிறகுதான் காங்கிரஸின் பிரதான கூட்டணிக்கட்சியான “CBI” விழித்துக்கொண்டு செயல்பட்டு வழக்குப் பதிவு செய்தது. CAG அறிக்கை வந்தவுடன் மத்திய அமைச்சர் ஆ. ராசாவை ராஜினாமா செய்யச்சொன்ன மத்திய அரசும் பிரதமுரும் – ஏர்செல்-மாக்சிஸ் விஷயம் வெளிவந்தவுடன் தயாநிதி மாறனையும், CWG-ல் கல்மாடியையும் விலக்ச் சொன்ன காங்கிரஸ் கட்சி, 1.86 லட்சம் கோடி நஷ்டம் என்று CAG அற்க்கை கொடுத்தபின்ணும் மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய முன்வராததை நியாயப்படுத்துவது எப்படி என்று தெரியவில்லை.
       பிரதமரின் கரங்கள் கறைபடாத கரங்கள் என்றும் இன்னும் எத்தனை நாட்களுக்குதான் பஜனைபாட்டுப் பாடுவார்கள் என்று தெரியவில்லை. இன்னொரு உச்சக்கட்ட காமெடி என்னவென்றால், எதிர்க்கட்சி ஆளும் மூன்று மாநில முதல்வர்கள் போட்டி ஏல முறையை எதிர்த்து கடிதம் எழுதியிருக்கிறார்கள் என்றும்; அதனால் அவர்களும்தான் இந்த நஷ்டத்திற்கு பொறுப்பு என்கிறது காங்கிரஸ். நஷ்டமே ஏற்படவில்லை என்று தம் செய்பவர்கள் நஷ்டத்திற்கு கூட்டணி சேர்ப்பது என்பது மக்களை முட்டாள்களாக நினைத்து ஆடும் பகிரங்க பசப்பு நாடகம்.
       சுரங்கங்கள் உதுக்கீட்டில் மாநிலங்களுக்கு நேரடி அதிகாரமே கிடையாது. அந்தந்த மாநில ஒதுக்கீடு விஷயத்தில் மத்திய அரசின் ஸ்டியரிங் கமிட்டியில் மாநிலம் ஒதுக்கீடு விஷயத்தில் சிபாரிசு செய்ய முடியும். அதை ஒப்புக்கொள்வதும், ஒதுக்குவதும், பிறருக்கு ஒதுக்கீடு செய்யும் முழு அதிகாரமும் மத்திய நிலக்கரித்துறை செயலருக்கும் துறை அமைச்சருக்கும் மட்டுமே உண்டு. இந்தப் பொறுப்பில் பிரதமரே பல வருடங்கள் இருந்து முடிவுகள் எடுத்திருக்கிறார்.
       BJP ஆண்டபோதும் பொது ஏலம் விடப்படவில்லை என்ற வாதம் உண்மைதான். பிரச்னை ஒதுக்கீடு முறையில் இல்லை – முறைகேட்டில்தான் இருக்கிறது. இதே ஒதுக்கீட்டுமுறை நியாயமாகவும் அரசுக்கு நஷ்டமில்லாத வகையிலும் அமைந்துவிட்டால் விமர்சனத்திற்கு  வேலையில்லை. BJP மாநில முதல்வர்களின் சிபாரிசுகள் நியாயமற்றதாக ஸ்டியரிங் கமிட்டி நினைத்திருந்தால் அவற்றை மத்திய அரசு ஒதுக்கியிருக்கலாமே. அதைவிட்டு முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க சாக்கு தேடுகிறது UPA. 
       நாடாளுமன்றத்தில் விவாதம் செய்யலாம் வாருங்கள் என்று காங்கிரஸ் ‘அன்புடன்’ அழைக்கிறது. போஃபர்ஸ், 2G, CWG முதலான அத்தனை ஊழல் விவகாரங்களிலும் நாடாளுமன்ற விவாதத்தின் மூலம் என்ன விளைவோ நன்மையோ ஏற்பட்டிருக்கிறது. 
    உலகின் மிகப்பெரிய ஜனநாயகம்! நாட்டு மக்களி உயிருடன் இருக்கும்போதே சாகடித்துச் சித்ரவதைச் செய்யும் பணியை சிறப்பாக செயல்படுகிறது......”Zero Loss” என்பது போல வேறு புது விளக்கங்களுடன் காங்கிரஸ் விரைவில் வரக்கூடும் என்று எதிர்பார்க்கலாம்........

No comments:

Post a Comment