Thursday, July 8, 2010

"என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர்


"நான் தூரத்தில் இருக்கிறேன் என்று நினைக்காதே. என்னை போல் இந்த பூமியில் 1,000 மகன்கள் வீரத்தாயான உனக்கு இருக்கின்றனர்' என்று கடைசியாக பேசியிருக்கிறார், நக்சல் தாக்குதலில் பலியான துணை தளபதி ஒருவர்.
சமீபத்தில், சத்திஸ்கர் மாநிலம் நாராயண்பூரில், நக்சல்கள் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மீது நடத்திய தாக்குதலின் போது 26 பேர் பலியாயினர். அவர்களில் துணை தளபதி ஜதின் குலாதி (27) என்பவரும் உண்டு. சம்பவம் நடப்பதற்கு இரு நாட்கள் முன்பு, தன் தாயார் உமா குலாதியிடம் போனில் பேசியிருக்கிறார் ஜதின். அசாம் மாநிலம் சில்சாரில் 42 நாட்கள் பயிற்சி முடித்து சத்திஸ்கருக்கு அப்போது தான் வந்திருக்கிறார். உமா குலாதி கூறியதாவது: டேராடூனில் படித்து கொண்டிருக்கும் போதே, பாதுகாப்பு படை வீரனாக வர வேண்டுமென்று அவன் ஆசைப்பட்டான். "ஒரு நாள் நான் ராணுவ வீரனாவேன். நீயும் அப்பாவும் பெருமைப்படும்படியாக செயலாற்றுவேன்' என்பான். இப்போது அவனை பற்றி பெருமைப்படுகிறோம். ஆனால் அவனை இழந்து விட்டோம். நாராயண்பூருக்கு வந்தவுடன் போனில் என்னை கூப்பிட்டான். உற்சாகமாக குரல் எழுப்பினான். நக்சலைட்களுக்கு எதிரான போரில் சேர்ந்ததற்காக மகிழ்ச்சியடைவதாக சொன்னான். அவனுக்கு பயமே கிடையாது. அவனது வீரமும், உறுதியும் தான் அவனை இந்த வேலையை தேர்ந்தெடுக்க வைத்தன. அவனது அதிகாரிகள் வீரத்துடன் போரிட்டு, நக்சலைட்டுகளுக்கு சரியான பதிலடி கொடுத்தான். இவ்வாறு உமா தெரிவித்தார்.

No comments:

Post a Comment