இன்டர்செப்டர் ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இந்தியா
உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட இன்டர்செப்டர் ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. மேல்வெளியில் இருந்தபடி பிற நாடுகள் தங்களுடைய எல்லைக்குள் வான் வழியாக பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களை இடைமறித்து கேட்கப்படும். இது ராணுவ துறைக்கு பெரிதும் உதவியாக இருக்கும். தரையில் இருந்து தரை இலக்கை தாக்கும் பிரிதிவி ஏவுகணை மாதிரியை ஒத்த அளவில் தயாரிக்கப்பட்டது. ஒரிசா மாநிலம் சந்திபூர் கடல் பகுதியில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது. எ.எ.டி., என்ற பெயர் கொண்ட இந்த ஏவுகணை கடல் தீவுகளின் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டு இது நமக்கு தேவையான தகவல்களை அனுப்பி வைக்கும். இந்த ஏவுகணை கடல் பகுதியில் 70 கி.மீட்டர் தொலைவுக்குட்பட்ட பகுதிகளில் இருந்து பரிமாறப்படும் தகவல்களை இடைமறித்து கேட்கும் திறன் கொண்டது. இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மைய மூத்த அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் கொண்டு தயார் செய்யப்பட்டுள்ளது. 7 மீட்டர் நீளம் கொண்ட இது தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருக்கும். இது ஏற்கனவே 3 முறை 2006, 2007, 2009 ஆண்டுகளில் இது போன்ற ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment