Sunday, July 24, 2011

ச‌ப்-‍னு முடிந்த‌து தி.மு.க- வின் பொதுக்குழு

"ப‌ழைய‌ திருடி க‌த‌வ‌ த‌ர‌டி"
முல்லைபெரியாறு, மாநில சுயாட்சி, தமிழ் ஆட்சிமொழி, இலங்கை விவகாரம் , சேதுசமுத்திர திட்டம், பெண்கள் இடஒதுக்கீடு, கச்சத்தீவு மீட்பு என தவறாமல் எல்லா பொதுக்குழுவிலும் இடம் பெறும் விஷயங்கள் இன்று நடந்த தி.மு.க., பொதுக்குழுவிலும் அப்படியே இடம் பிடித்தன.50 பக்கங்கள் கொண்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்படன. 
{கடந்த மத்தியமைச்சரவை மாற்றத்தில் தி.மு.க., இடம்பெறாத இந்தவேளையில் இது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும், காங்கிரஸ் உறவில் மாற்றம் இருக்கும் அளவிற்கு இரு கட்சிகள் இடையே பெரும் பிரச்னைகள் இல்லையென்றாலும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அரசு, தி.மு.க.,வுக்கு பெரிய அளவில் உதவிகள் எதுவும் செய்யவில்லை என்ற குறையும் தி.மு.க.,வில் சிலருக்கு இருப்பதால் இன்று நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் என்னவாக இருக்கும் என்ற பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று பெரிய அளவில் சொல்லப்படும் அளவிற்கு பரபரப்பான தீர்மானங்கள் எதுவும் இடம்பெறவில்லை. }
  1. சமீபத்தில் முடிந்த சட்டசபை தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பது
  2. ஓய்வின்றி உழைத்து மக்களின் நலனுக்காக பல்வேறு சாதனைகள் புரிந்து பொற்கால ஆட்சியை தந்த கருணாநிதிக்கு பாராட்டு தெரிவித்தல் 
  3. தென்மாவட்ட வளர்ச்சியை கருத்தில் கொண்டு சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தல்
  4. முல்லைபெரியாறு உரிமையை நிலைநாட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு துணையாக இருக்க வேண்டும்
  5. மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவம் தொடர்பான விஷயங்களில் அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசிடம் கோரல்
  6. 33 சத மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்ற வலியுறுத்தல்
  7. தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து கடந்தகால திட்டங்களான மேலவை, சமச்சீர்கல்வி, புதிய தலைமை செயலகம், கான்கிரீட் வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்டவைகளை ரத்து செய்த அ.தி.மு.க, வின் வெறுப்பு அரசியலுக்கு கண்டம் தெரிவித்தல்
  8. மத்திய ஆட்சிமொழி குறித்து ஆராய குழு அமைக்க வேண்டும்
  9. தமிழ் மொழி கோர்ட்டில் வழக்கில் வருவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  10. பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தல்
  11. இலங்கையில் போர்க்குற்றம் புரிந்தவர்கள் மீதான உரிய நடவடிக்கை எடுக்க இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை வலியுறுத்க்கோரல்
  12. இலங்கை‌ வாழ் தமிழர்கள் அமைதிக்கு பொது வாக்கெடுப்பு 
  13. இலங்கை தமிழ் ஈழ மக்களின் தனி உரிமைக்கு என்றும் துணை நிற்பது
  14. கச்சத்தீவு மீட்க போராடுவோம் என்ற கூறிய ஜெயலலிதா இது வரை முயற்சிக்காமல் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய சந்தர்ப்பவாத அரசியலுக்கு கண்டனம்
  15. கச்சத்தீவை மீட்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு கோரிக்கை
  16. லோக்பாலில் பிரதமரை சேர்க்க வலியுறுத்தல்
  17. தி.மு.க., வினர் மீது போடப்படும் தமிழக போலீசாரின் பொய்வழக்குகளுக்கு கண்டனம்
  18. ஸ்பெக்டரம் விவகாரத்தினால் மத்திய அமைச்சர்கள் பதவியை இழந்து நிற்கும் தயாநிதி, ராஜா குற்றமற்றவர்கள் என நிரூபிப்பர் என இந்த பொதுக்குழு நம்புகிறது. 
இது போன்று 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பபட்டுள்ளன.

கனிமொழியை ஜாமினில் விடாத சி.பி.ஐ.,க்கு கண்டனம்: இன்றைய தி.மு.க., பொதுக்குழுவில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து கூறப்பட்டிருப்பதாவது: 2ஜி. விவகாரம் தொடர்பாக பார்லி., கூட்டுக்குழு, பொதுக்கணக்குகுழு, சிவராஜ்பாட்டில் தலைமையிலான குழு ஆகியவை விசாரித்து வருகிறது. 2001 முதல் பா.ஜ., ஆட்சி காலம் முதல் இதில் பின்பற்றப்படும் கொள்கை குறித்து எதுவும் முழுமை பெறாத நிலையில் எதிர்கட்சிகள், மற்றும் சில ஏடுகள் பிரச்னை எழுப்பியதன் காரணமாக மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதி, ராஜா ஆகியோர் ராஜினாமா செய்திருக்கின்றனர். அவர்கள் கூறியது போல குற்றமற்றவர்கள் என நிரூபிப்பார்கள் என இந்த பொதுக்குழு நம்புகிறது. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ., ஒருதலைப்பட்சமாக நடந்து வருகிறது. பிரச்னைக்கு தொடர்பில்லாத கலைஞர் தொலைக்காட்சியின் வரவு செலவு கணக்கை கையிலெடுத்து இந்த நீதிக்கும், நியாயத்திற்கும் சூழ்நிலைக்கும் புறம்பாக தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார், பங்குதாரரான கனிமொழி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பணம் குறித்து வழங்கப்பட்ட காசோலை மற்றும் வருமான வரி துறையினரிடம் முறையான சமர்ப்பிப்பு ஆகியன உள்ளது. ஆனால் இவர்களை ஜாமினில் கூட விட சி.பி.ஐ.,மறுத்து வருகிறது. நீதிபதிகள், சட்டஅமைச்சர் வீரப்பமொய்லி, ஜஸ்வந்த்சிங் ஆகியோர் குற்றவாளி என தீர்ப்பு வராமல் புரியாதவர்கள் சிறையில் இருக்க வேண்டுமா என்று கேள்விகள் வந்தும் சி.பி.ஐ., மறுக்கும் செயல் உள்நோக்கம் கொண்டது, பாரபட்சமானது என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நினைத்த‌தி ஒன்று, ந‌ட‌ந்த‌து ஒன்று:
நேற்று ( சனிக்கிழமை) காலை பரபரப்புடன் கூடிய தி.மு.க., செயற்குழுவில், தேர்தல் தோல்விக்கான காரணங்கள் காரசாரமாக விவாதிக்கப்பட்டன. தேர்தல் தோல்விக்கு, கூட்டணிக் கட்சிகளே காரணம் என, பெருவாரியான உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். கூட்டணிக் கட்சிகளை குற்றம் சாட்டிய அதே அளவுக்கு, குடும்ப ஆட்சியையும் சுட்டிக் காட்டினர். "2ஜி' விவகாரத்தாலும், செயற்குழு சூடுபிடித்தது.கோவையில், தி.மு.க., செயற்குழு நேற்று மாலை துவங்கியது. தி.மு.க., தலைவர் கருணாநிதி, செயற்குழுவை துவக்கி வைத்து பேசினார். அவரைத் தொடர்ந்து, பொதுச் செயலர் அன்பழகன் பேசினார். இவர்களுக்குப் பின், செயற்குழு உறுப்பினர்கள் பேசினர். ஸ்டாலின், அழகிரி கோஷ்டிகளுக்கு இடையேயான மோதல் உச்சகட்டத்தில் இருக்கும் நிலையில், பதட்டத்துடனே செயற்குழு காணப்பட்டது. பொதுவான விஷயங்களை விட, கட்சித் தலைமையில் மாற்றம் வேண்டும் என, ஸ்டாலின் தரப்பினர் உறுதியாக உள்ளனர். தலைமை மாற்றம் ஸ்டாலினுக்கு சாதகமாக இருந்துவிடும் என்பதால், "கருணாநிதியே தலைவராகத் தொடர வேண்டும்; தொடருவார்' என, அழகிரி பகிரங் கமாக அறிவித்து விட்டார்.இதனால், தலைமை மாற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக அழகிரி கோஷ்டியினர் நினைக்கின்றனர். ஆனால், செயற்குழுவிலும், பொதுக்குழுவிலும் ஸ்டாலினுக்கு உள்ள ஆதரவைக் கொண்டு, மாற்றங்களைக் கொண்டு வந்துவிடலாம் என்ற அச்சமும் அழகிரி கோஷ்டியினருக்கு இருக்கிறது. இதனால், செயற்குழுவுக்கு முன்னதாக, கருணாநிதியை அழகிரி சந்தித்தார். அப்போது, செயற்குழு மற்றும் பொதுக்குழு தீர்மானங்கள் பற்றி அவர்கள் விவாதித்ததாகக் கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக, கோவையில் முகாமிட்டுள்ள ஸ்டாலின், இறுக்கமாகவே காணப்பட்டார்...
கோபத்தில் கூட்டத்தைப் புறக்கணித்த அழகிரி :

அடுத்த தலைமை குறித்து பரவலாக கருத்து எழுப்பப்பட்டதால் கோபமடைந்த அழகிரி, மதியம் நடந்த கூட்டத்தைப் புறக்கணித்து வெளியேறினார். கோவையில் இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் காலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அழகிரி, மதியம் நடந்த நிகழ்வில் பங்கேற்பதைத் தவிர்த்தார். முன்னதாக, திமுகவுக்கு அடுத்த தலைவர் யார் என்பது குறித்தும், அடுத்த தலைமை குறித்தும் பரவலாக எழுந்த கேள்விகளை அடுத்து, அழகிரி வருத்தப் பட்டதாகத் தெரிகிறது. மேலும், அடுத்த தலைமை குறித்து கோவை ராமநாதன் பேசியபோது, அழகிரி கோபமடைந்ததாகத் தெரிகிறது. ஸ்டாலினை அடுத்த தலைவராக நியமிக்கக் கோரி பரவலாக எழுந்த கருத்துகளை அடுத்து அழகிரி மேலும் கோபமுற்று வெளியேறினார். மதியம் உணவுக்குப் பிறகு அவர் கூட்ட அரங்குக்கு வரவில்லை. தான் தங்கியிருந்த ரெஸிடென்ஸி ஓட்டலிலேயே தங்கியிருந்தவர், மாலை 6 மணிக்குப் பிறகு மதுரை துணை மேயருடன் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
=========================================================================

ஐயா... நம்ம டிவிக்காரங்களை பாத்து செய்திய கொடுக்கச் சொல்லு... அவங்க பாட்டுக்கு பழக்க தோஷத்துல நித்தி, ரஞ்சி, எட்டி..ன்னு சொல்லிச்சொல்லி மாநாட்டில கலந்துக்கிறவங்க பேரு அப்புறம் நம்ம பேரையும் கருணா, சுடாலி, அழகுன்னு மூணு எழுத்துல சுருக்கி சொல்லிடப் போறாங்க...

No comments:

Post a Comment