தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா புதுவிதமாக விஸ்வரூபம் எடுத்து வருகிறார்.ஆனால் அது கடந்த காலத்து கட்அவுட் அல்ல. இன்றைய இந்திய அரசியலில் ஒரு மாநில முதல்வராக இருப்பவர் தேசிய அளவிலும் செல்வாக்கு உடையவராக இருந்தாக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். தமிழக அளவில் தனது பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வை சின்னாபின்னமாக்க பல நடவடிக்கை எடுத்து வரும் ஜெயலலிதா, தேசிய அளவிலும் தன் செல்வாக்கை உயர்த்திக் கொள்ள படிப்படியாக தயாராகி வருகிறார். இன்த நோக்கங்கள் எதுவும் அவருக்கு புதிதல்ல என்றாலும், இவற்றை அடைவதற்கான அணுகுமுறையை அவர் மாற்றிக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் இடது சாரிகள் உள்ளிட்ட மூன்று அணிகளில் ஏதேனும் ஒன்றோடு சேராமல் இருப்பது தேசிய அளவில் சாத்தியமில்லை. ஜெயலலிதா எந்த்ப் பக்கம்? ஆகஸ்ட் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தின் மழைக்காலத்தொடரின் முதல் நாட்களில் அ.இ.அ.தி.மு.க. தான் எந்த அணியில் இருக்கிறது என்பதை விட எந்த அணிக்குச் சாதகமாக இல்லை என்பதை வெளிப்படுத்தியது. ஆகஸ்ட் 4ந் தேதி விலைவுயர்வு குறித்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், சி.பி.ஐ. (CPI) தாக்கல் செய்த திருத்தத்தை ஆதரித்த வெகு சில கட்சிகளில் அ.இ.அ.தி.மு.கவும் ஒன்று. இந்த விஷியத்தில் இடதுசாரிகள், தெலுங்கு தேசம், பிஜு ஜனதா தள் ஆகியன ஓர் அணியில் இருந்தன. கூட்டத்தொடரின் முத்ல நாளில், 2ஜி விவகாரம் குறித்து பா.ஜ.கவினரோடு சேர்ந்து பிரச்னையை கிள்ப்பினார்கள் அ.இ.அ.தி.மு.கவினர். அதற்கான அஸ்திவாரத்தை ஜெ.வே முன்னதாக போட்டு வைத்திருந்தார். 2ஜி பிரச்னையில் பிரதானமாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஆ.ராசா முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங்கும், ஐ.மு.கூ. தலைவர் சோனியா காந்தியும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஜுலை 30ந் தேதி ஜெ. ஒரு அதிரடி அறிக்கையை வெளியிட்டார். மத்திய அரசுக்கு எதிராக நேரடியான் மோதலில் அ.இ.அ.தி.மு.க. இறங்கும் என்பது ஜுலை இறுதியிலேயே தெரிந்து விட்டது. இதுவரை காங்கிரஸ் தலைவர்களை தாக்காமல், விமர்சனங்களை மென்மையாக முன்வைத்து வந்த அ.இ.அ.தி.மு.க. இனி அதகளம் செய்யலாம் என்பதற்கு பச்சைக்கொடி காட்டிவிட்டார் ஜெ. என்பது தான் கூட்டத்தில் கல்ந்துகொண்ட எம்.பி.க்களுக்கு கிடைத்த செய்தி. காங்கிரசை எதிர்ப்பதில் முக்கியமான வாய்ப்புகளை ஜெ. தெளிவாகப் பயன்படுத்திக்கொண்டுவருகிறார். வகுப்பு வாரி மற்றும் இலக்கு குறித்த வன்முறைகள் தடுப்பு மசோதா 2001 ஐ எதிர்க்க காங்கிரஸ் அல்லாத முதல்வர்கள் அனைவருக்கும் அவர் கடிதம் எழுதினார். இதில் ஜெயலலிதா நேரடியாக மத்திய-மாநிலப் பிரச்னையாக இதை அணுகியிருந்ததை குறிப்பிடத்தகுந்த உத்தியாகவே கூறவேண்டும்.
ஜுன் 14, 2011ல் முதல்வரான பிறகு முதன்முறையாக தில்லிக்குச் சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்த பிறகு, பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, "ஐமுகூ 2 உடன் தமிழ்நாடு நல்ல உறவை பேணுகிறது. மத்திய அரசோடு மோதல் அணுகுமுறையைக் கடைபிடிக்க மாட்டோம்" என்றுதான் கூறினார். அது சம்பிரதாயமான வார்த்தைகள் என்பதில் சந்தேகமில்லை. காங்கிரசுக்கு எதிரான் அவரது நகர்வுகள் இதுவரை அரசுக்கு எதிரான விமர்சனங்களோடுதான் நிற்கிறன. ஆனால் அவ்வப்போது ஜெ. கோபக்கணைகள் அவரது நெடுங்கால எதிரியான உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மீது பாயத்தான் செய்கிறது. தில்லியில் பிரதமருடனான ஜுன் 14 சந்திப்புக்குப் பின் பேசியபோது கூட, 2009 நாடாளுமன்றத் தேர்தலில் ப.சிதம்பரம் மோசடி செய்து வெற்றிபெற்றார் என்று ஜெ. கூறியிருந்தார்.
ஜுன் 14 தில்லி வருகையின்போது, அவரை பா.ஜ.க.வின் மூத்த தலைவர் ரவிசங்கர், CPI தேசிய தலைவர் து.ராஜாவும், தில்லி முதல்வர் ஷீலா தீக்ஷித்தும் தனித் தனியே மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள். எல்லாக் கட்சிகளாலும் அழைக்கப் படுகிற, அதே சமயம் எல்லாக் கட்சிகளாலும் அஞ்சப்படுகிற தலைவராகவே அவர் இருந்து வருகிறார்.
No comments:
Post a Comment