Saturday, June 25, 2011

தாத்தா சொல்லைத் தட்டாதே!


தாத்தா சொல்லைத் தட்டாதே... புத்தம் புதிய திரைப்படம். உங்கள் மனத் திரையில்!உலகத் தொல்லைக் காட்சிகளில் முதல்முறையாக உங்களைத் தொல்லை செய்ய வருகிறது... காணத் தவறாதீர்கள். கண்டுதொலையுங்கள்! இல்லை... தொலைந்தீர்கள்! ஒரு கூடை நட்பு, ஒரு கூடை சிநேகம் ஒன்றாகச் சேர்ந்த அணிதானே எங்க அசத்தல் கூட்ணி பாடலைக் கேட்கும்போது ரசிகர்கள் மெய்சிலிர்த்து கைதட்டிப் பாராட்டுகிறார்கள். தில்லிக்கு ராஜான்னாலும் தாத்தா சொல்லைத் தட்டாதே! திஹார் சிறையே நிறைந்துபோனாலும் தாத்தா சொல்லைத் தட்டாதே! பாடல் வரும்போது திரையரங்கில் விசில் சத்தம் காதைப் பிளக்கிறது. வழியே இல்லாதவன்தான் வழியைத் தெரிஞ்சவன்தான் கூட்டணிக்கு சொந்தக்காரன்... விவகாரமாகி நொந்தக்காரன்... போன்ற சூப்பர் ஹிட் பாடல்களுடன் கலக்கிக் கொண்டிருக்கும் திரைப்படம்... தாத்தா சொல்லைத் தட்டாதே... தாத்தா சொல்லைத் தட்டாதே...

No comments:

Post a Comment