Monday, September 12, 2011

CBI வசம் ரூ.4.25 கோடி லஞ்சப் பணம்:


அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்ட, பறிமுதல் செய்யப்பட்ட 4.25 கோடி ரூபாய் பணம், சி.பி.ஐ., கைவசம் உள்ளது.
பல்வேறு அரசு அலுவலகங்களில் சில வேலைகளை முடித்து தருவதற்கு, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் லஞ்சம் பெறுவது சகஜமான ஒன்று. இது தொடர்பாக 2008ல் 129 வழக்குகளும், 2007 மற்றும் 2009ம் ஆண்டுகளில் தலா 107 வழக்குகளும், கடந்த ஆண்டு 87 வழக்குகளும் சி.பி.ஐ.,யால் பதிவு செய்யப்பட்டன.லஞ்சம் கேட்பதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், சி.பி.ஐ., உள்ளிட்ட அமைப்பின் அதிகாரிகள் விரைந்து சென்று கையும் களவுமாக பிடித்து, அவர்களிடமிருந்து லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
வழக்கு விசாரணை முடிந்ததும், லஞ்சம் கொடுத்தவர்களிடம் மீண்டும் இந்த பணம் ஒப்படைக்கப்படும்.இந்த வகையில் கடந்த நான்கு ஆண்டுகளாக சி.பி.ஐ., பறிமுதல் செய்த பணத்தை மீண்டும் ஒப்படைக்கவில்லை. எனவே, தற்போது சி.பி.ஐ.,யிடம் இந்த பணம் 4 கோடியே 25 லட்ச ரூபாய் அளவுக்கு சேர்ந்துள்ளது.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த தகவல் பெறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment