Friday, November 18, 2011

The reason for such steep hike in TN Govt Bus, Aavin...

ஆச்சர்யப்பட்டேன்..விலைஉயர்வை எப்படி அம்மா அவர்கள் இவ்வளவு காலம் தள்ளிப்போட்டு வந்தார்கள் என்று..! அம்மா அவர்கள் ஆட்சிபொறுப்பை ஏற்றபோதே இதை செய்திருக்கவேண்டும்..அந்த அளவுக்கு திமுகவின் நிர்வாக சீரழிவு இருந்தது..!போக்குவரத்து துறைக்கு வரவேண்டியை பணமெல்லாம் திமுகவினரின் கஜானாவுக்கு திருப்பபட்டுவிட்டது..அப்போதே பொதுமக்களின் குரல் இதுபற்றி ஒலிக்கப்பட்டது.!! மறைமுகமாய் பஸ் கட்டண உயர்வை..பஸ்ஸின் "கலருக்கு" ஏற்றபடி உயர்த்தி வசூலிக்கப்பட்ட அந்த தொகையெல்லாம் "கணக்கில்" வாராமல்..கட்சிக்கே திருப்பப்பட்டது..இதை பற்றி நான்கூட தினமலரில் புகார் வாசித்துள்ளேன்.! அப்படிப்பட்ட நிலையில் "போக்குவரத்து" துறை இயங்கியது..! அமைச்சர் நேருவுக்கு திருச்சி மாவட்டம் முழுக்க கட்டபஞ்சாயத்துக்கும்..மிரட்டி நிலங்களை பிடுங்குவதர்க்குமே நேரம் போதாது இருந்தது..மிகப்பெரிய நஷ்டத்தில் இயங்கும் இந்த துறையை மீட்டெடுக்க வேறு வழியுமில்லை..! ஒரு குடும்பத்தை சிறப்பாக நிர்வகிக்க அம்மாவை விட யாரால் முடியும்..? ஊதாரித்தனமான சுயவிளம்பர பிரியருக்கு மானாட மயிலாட என்று காலம்தள்ளிவிட்டு..மின் உற்பத்தியை உயர்த்த பாடுபட்டாரா? ஆயிரத்து இருநூறு கோடிகளுக்கு சட்டசபை கட்டிடம் தேவையா? நூறுகோடிகளுக்கு மேல் நூலகம் தேவையா? நித்தமும் ஒரு மனிதருக்கு "பாராட்டு" தேவையா? இப்படி இருந்த அந்த எதற்குமே லாயக்கில்லாத திமுகவை பதவியில் அமர்த்திய மக்களுக்கு இப்போது இந்த சுமையை திணிக்க நேர்ந்தது அம்மாவின் களங்கமில்லா மனதுக்கு எவ்வளவு கஷ்டம் என்று புரிந்தவர்களுக்கு தெரியும்..! அம்மாவின் அரசு இதுவரை தான்தோன்றித்தனமாய் ஒரு பாராட்டு விழா என்றோ..அல்லது வீண் ஜம்பமாய் பகட்டான விழா என்றோ நடத்தியதில்லை..! அதனால் அம்மா மீது புகார் வாசிக்கும் எதிர்கட்சியினர்..இதிலே அரசியல் "குளிர்" காண முயற்சிப்பதாய் நினைத்து "மூட்டவேண்டாம்" தீயை..! மக்களின் காற்று இப்போதுமட்டுமல்ல எப்போதுமே அம்மா பக்கமே வீசிகொண்டிருக்கும்..அதனால் வீண் பேச்சு தவிர்த்து உண்மை நிலையை "உணர்ந்து" அரசுக்கு ஆதரவாய் இருங்கள்..மக்களை போன்று..!! 2001 - 2006 திமுகவிற்கு மறைமுகமாய் வாக்குகளை பிரித்து உதவியை அந்த தவறான காரியத்தால் பாருங்கள் எப்படிப்பட்ட கஷ்டமான சூழலை அம்மாவின் அரசு எதிர்நோக்குகின்றது என்று..!! பதவி ஏற்ற உடனே அம்மா அவர்கள் திமுக அரசு செய்த பித்தலாட்டங்களை எலாம்.."வெள்ளை அறிக்கையாய்" மக்களுக்கு கொண்டு சென்றிருக்க வேண்டும்..! அம்மா அவர்கள் அரசியல் செய்ய விரும்புவதில்லை..! மக்கள் விரோத அரசு என்று வாய் கிழிய வழமை போன்று கத்தி பேசும் ஒருசில அரசியல் தலைகளே...நீங்கள்தான் மக்களால் "விரோதிகள்" என்று ஒதுக்கப்பட்டவர்கள் என்று உணராமல் நகைப்புக்குரிய அறிக்கைகளை விட்டு இன்னமும் கீழாய் செல்லவேண்டாம்..!! அம்மா அவர்கள் மக்களிடம் வந்துள்ளார்..ஆதரிப்பவர்களே மனிதர்கள்..! எதிர்ப்போர் ஓட்டு வியாபாரிகள்..! நாம் மனிதர்களாய் இருப்போம்..என்றென்றும்..!!

இப்போது உள்ள அணைத்து நிர்வாக சீர்கேட்டுக்கும் காரணம் திமுக தான். தமிழக அரசு கடனில் தத்தளிக்கும் போது ஏன் இலவசங்களை கொடுக்கிறீர்கள், நாங்கள் இலவசம் கேட்டோமா என்று திமுக சொம்புகள் கூறுகிறார்கள். அம்மா இலவசங்கள் கொடுக்க முழு முதல் காரணம் கருணாநிதி தான். இலவச கலாசாரத்தை அறிமுக படுத்தியவரே கருணாநிதி தான். தமிழர்களை இலவசங்களுக்கு அடிமைபடுதியதே கருணாநிதி தான். 2001 தேர்தல் அறிக்கையும், 2006 திமுக அதிமுக தேர்தல் அறிக்கையும் எடுத்து பார்த்தால் தெரியும். கடந்த சட்டமன்ற தேர்தலில் முதலில் அதிக அளவு இலவசங்கள் சேர்த்து தேர்தல் அறிக்கை விட்டது திமுக தான். ஒரு வேளை திமுக ஆட்சிக்கு வந்திருந்தாலும் லேப் டாப், grinder மிக்சி எல்லாம் கொடுத்திருப்பார். கருணாநிதி கொடுத்த இலவசங்கள், அம்மா கொடுக்கும் இலவசங்களை பாப்போம். தொலைக்காட்சி கொடுத்து, கேபிள் டிவி மூலம் குடும்ப கஜானாவை நிரப்பினார். மேலும் இந்த ஆர்டர் கொடுததர்க்காக தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து பல கோடி ரூபாய் திமுக லஞ்சம் வாங்கியது. இரண்டு ஏக்கர் நிலம் என்று அறிவித்து திமுகவினர் அட்டைய போட வழி வகுத்தார். ஒரு ரூபாய் அரிசி என்று கூறி நல்ல அரிசியை வெளி மாநிலங்களுக்கு கடத்தி கமிஷன் வாங்கினார். இது போல பல திட்டங்களில் கொள்ளையடித்தார். அம்மா தேர்தல் அறிக்கையில் கூறியதை கொடுக்கவில்லை என்றால், கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை என்று திமுக பிரசாரம் செய்வார்கள். மேலும் இந்த விலை உயர்வு என்பது ஏற்று கொள்ள கூடியது தான். 30 பைசா விலையேற்றத்தால் ஒன்றும் பாதிப்பு இல்லை. இப்போது கூவும் திமுக, மத்திய அரசு பெட்ரோல் விலை உயர்த்தினால் வாயை மூடி மவுனம் சாதிப்பது எதனால்? மத்தியில் 28 MP க்களை வைத்து கொண்டு பல முறை பெட்ரோல் விலை ஏற்றியதை கண்டித்து ராஜினாமா செய்தார்களா? இல்லை. தமிழகத்திற்கு நிதி கிடைக்காமல் முட்டு கட்டை போடுகிறார்கள். மேலும் நேரு போக்குவரத்து துறையில் செய்து விட்டு சென்ற குளறுபடிகள் ஏராளம். பல ஆயிரம் கோடி ரூபாய் ஏப்பம் விட்டு சென்றிருக்கிறார். அதனால் தான் போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குகிறது. நல்ல முறையில் திமுக நிர்வாகம் செய்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது. கருணாநிதிக்கு தெரியும், அதிமுக வந்தால் விலை ஏற்றி கெட்ட பெயர் வாங்கவேண்டும் என்றே அரசு கஜானாவை துடைத்து விட்டு சென்றார். ஒவ்வொரு முறையும் கஜானாவை ஏதாவது ஒரு விதத்தில் துடைத்துவிட்டு செல்லுவார், அம்மா வந்ததும் கெட்ட பெயர் வாங்குவார். இது தான் கருணாநிதியின் எண்ணம்.

Saturday, November 5, 2011

After Rajini era, is it Ajith style???

We all know that Rajni was a real sensation with his style and class during 90’s and of course till now. People loved his hairstyle, his dresses, his different shoes, the way he walks, he smiles e.tc. When we see the dictionary of Tamil cinema for the word style, the meaning would be Rajni. There was no one to replace him. But there is one now. The new stylish era was started by Ajith in Billa. We have to admit it. After Rajni , first time a person got applause for just walking on the screen is Ajith. Ajith’s Billa was a master piece. Though ASAL didn’t speak much in the market, Ajith was at his best in the movie. We can never forget his rich clothes, goggles and his marvelous stride. Well in Mankatha , Even the people who hate Ajith and the people who hate drinks would have enjoyed the pre-interval chess board scene. The way he holds the cigar and the wine glass was astonishing. After Rajni’s cigar smoking style, it is Ajith now. His salt and pepper hair style was the talk on the town. If the directors understand Ajith’s strength and make up real good movies, we can still expect some impeccable styles.

ரங்கநாதன் தெரு கடைகளுக்கு சீல்

சென்னை, ரங்கநாதன் தெருவில் முறையற்றதாகப் பல கடைகள் இயங்கிவருகின்றன. தெரிந்தே வரம்புகளைமீறி, அதிக மாடிகள் கொண்ட கட்டடங்களைக் கட்டுவது, போவோர் வருவோருக்கான பாதையை மறித்து பொருள்களை ஏற்றி இறக்கும் வண்டிகளைக் கொண்டுவருவது, வாகன நிறுத்தங்களைச் செய்துதராது இருப்பது, தீக்கு எதிரான பாதுகாப்பு ஏதும் இல்லாதது, நெரிசல்-தள்ளுமுள்ளு (ஸ்டாம்பீட்) பிரச்னைகளிலிருந்து மக்களைக் காக்க வழிமுறைகளைச் செய்யாதிருப்பது என்று பல முறைகேடுகள்.

அவ்வப்போது சென்னை பெருநகரக் குழுமம் சீல் வைக்கிறேன் என்பார்கள். பெட்டிகள் கைமாறியோ, கோர்ட்டுக்குப் போயோ அந்தக் கெடு நகர்த்தப்படும். இப்போது சீல் வைத்திருக்கிறார்கள் கடைகளுக்கு. 25 கடைகள் என்கிறது ரிப்போர்ட்.
அந்தக் கடைகளில் வேலை செய்வோருக்கு அடுத்த மாதம் சம்பளம் கிடைக்குமா கிடைக்காதா என்பதை முன்வைக்கிறது ஹிந்து பத்திரிகையில் ஒரு கட்டுரை. இந்தமாதிரி இரக்கத்தைத் தூண்டும் விதமாகவா, திருப்பூர் சாயப்பட்டறைக் கழிவுகள் நொய்யலில் கலப்பது தொடர்பான செய்தி எழுதப்படுகிறது? குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு வைக்கும் இடங்களில் இதேமாதிரியான இரக்கம் எடுபடுமா? ஐயோ பாவம் குழந்தைகள், இங்கு கிடைக்கும் பணம்கூட இல்லாமல் அவர்கள் பிச்சை எடுக்கத்தான் போகவேண்டியிருக்கும் என்று சொல்கிறோமா?
இப்படி எங்கெல்லாம் முறைகேடாக நிறுவனங்கள் இயங்குகின்றனவோ, அங்கெல்லாம் ஏழைகள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற முதல்வர்தான் தலையிடவேண்டும் என்ற கூப்பாடு எழுகிறது. இம்மாதிரியான அபத்தமான வேண்டுகோள்களுக்குத் தலைசாய்க்காமல், மிகவும் கடுமையுடனும் கண்டிப்புடனும் இவர்களிடம் நடந்துகொள்ளவேண்டும்.
சட்டம் என்றால் கிள்ளுக்கீரை என்று நடந்துகொள்கிறார்கள் இவர்கள். இவர்களுக்குச் சரியான பாடம் கற்பிக்கப்படவேண்டும். அப்படி நடக்குமா என்பதில் எனக்கும் பிறரைப்போலவே சந்தேகம் உள்ளது. ஏதோ சில பேட்ச் அப் நடந்து, விதவிதமான செட்டில்மெண்ட் முடிந்து, மீண்டும் பழையபடி ஜாம் ஜாம் என்று பிசினஸ் நடக்கும் என்று அனைவரும் பேசிக்கொள்கிறார்கள். இம்முறையும் அப்படியே நடந்தால் அது மிகவும் சோகமான ஒன்றாக இருக்கும்.

Thursday, November 3, 2011

முடிவுக்கு வ‌ந்த‌ 'ராடியா எபிசோட்'!

ராமாய‌ண‌ம், ம‌காபார‌த‌ம் போன்ற‌ இதிகாச‌ங்க‌ளில் இட‌ம்பெறும் பாத்திர‌ங்க‌ளின் எண்ணிக்கைக‌ளை அவ்வ‌ள‌வு சாதார‌ண‌மாக‌ சொல்லிவிட‌ முடியாது. க‌தை என்பார்க‌ள், காண்ட‌ம் என்பார்க‌ள். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு க‌தாபாத்திர‌ம் குபீர் குபீர் என்று கோலோச்சும். இந்த‌ க‌தாபாத்திர‌ங்க‌ள் எல்லாம் ஏதோ சைடு ஆர்ட்டிஸ்ட்க‌ள் போல‌ தெரிந்தாலும், க‌தையை ந‌க‌ர்த்துவ‌தில் இந்த‌ க‌தாபாத்திர‌ங்க‌ள்தான் முக்கிய‌ ப‌ங்கை ஆற்றுகின்ற‌ன‌. ஸ்பெக்ட்ர‌ம் பிர‌ச்ச‌னையும் கூட‌ ஒருவ‌கையில் ராமாய‌ண‌ம், ம‌காபார‌த‌ம் போல‌தான். எண்ண‌ற்ற‌ க‌தாபாத்திர‌ங்க‌ள். க‌தை எங்கையோ தொட‌ங்கி, எங்கெங்கோ சென்று எங்கெல்லாம் செல்ல‌ப் போகிற‌து. இந்த‌ ந‌வீன‌கால‌ ஸ்பெக்ட்ர‌ம் எனும் இதிகாச்த்தில் நாய‌க‌ன் பாத்திர‌த்தில் இருப்ப‌து ஆ. ராசா. இதிலும் ப‌ல‌ காண்ட‌ங்க‌ள் உள்ள‌ன‌. இதில் முக்கிய‌ காண்ட‌ம் ஒன்று உள்ள‌து. அந்த‌ காண்ட‌த்தின் பெய‌ர் 'டேப்' காண்ட‌ம். அதில் முக்கிய‌ க‌தாபாத்திர‌ம் நீரா ராடியா. கென்யாவில் பிற‌ந்து ல‌ண்ட‌னில் ப‌டித்து குஜ‌ராத்திக்கு வாழ்க‌கைப்ப‌ட்டு, விரைவிலேயே அதை விவ‌கார‌த்து செய்துவிட்ட‌வ‌ர்தான் இந்த‌ ராடியா. கார்ப்ப‌ரேட் நிறுவ‌ன‌ங்க‌ள் த‌ங்க‌ளுக்கு வேண்டிய‌ கோல்மால்க‌ளை அர‌சாங்க‌ ம‌ட்ட‌த்தில், உய‌ர் அர‌சிய‌ல் அதிகார‌ வ‌ளைய‌ங்க‌ளில் செய்து முடிக்கும் ப‌ணியில் அம‌ர்ந்தார் ராடியா. ச‌காரா என்ற‌ பெரு நிறுவ‌ன‌ம்தான் முத‌ல் போணி. பிற‌கு சிங்க‌ப்பூர் ஏர்லைன்ஸ், கே.எல்.எம்., யு.கே. ஏர் ஆகிய‌ பெரு நிறுவ‌ன‌ங்க‌ளுக்கும் இவ‌ர்தான் புரோக்க‌ர். அர‌சிய‌ல்வாதிக‌ள், கார்ப்ப‌ரேட் நிறுவ‌ன‌ங்க‌ள்,மீடியாக்க‌ள் என‌ முப்பெரும் துறைக‌ளிலும் முழுமூச்சாக‌ செய‌ல்ப‌ட்டு ப‌ல‌ ந‌ண்ப‌ர்க‌ளை பெறுகிறார். காரிய‌ம் சாதித்து ஓஹோ என கொடிக‌ட்டிப் ப‌ற்க்கிறார். க‌ருணானிதிக்கும், ஜெய‌ல‌லிதாவுக்கும் ஒரே ஆலோச‌க‌ர் இருந்தால் எப்ப‌டி இருக்குமோ, அதுபோல‌ டாட்டாவுக்கும், அம்பானிக்கும் என‌ இருவ‌ருக்குமே இவ‌ர் ஒருவ‌ரேதான் எல்லாமும்.  இதுபோதாதா...ப‌ல‌ம் பொருந்திய‌ ந‌ப‌ராக‌ வ‌ளைவ‌ந்து இந்திய‌ அர‌சாங்க‌த்தின் அதிகார‌வ‌ர்க‌த்தின் மூலை முடுக்குக‌ள், ச‌ந்து பொந்துக‌ளில் எல்லாம் ப‌டு எளிதாக‌ உள்ளே புகுந்து புற‌ப்ப‌ட்டு வெளியே வ‌ரும் அசாத்திய‌ ஆற்ற‌லையும் வ‌ள‌ர்த்துக் கொண்டார் ராடியா. பி.ஜே.பி. த‌லைவ‌ர்க‌ளில் ஆர‌ம்பித்து ர‌த்த‌ன் டாட்டாவால் வ‌ள‌ர்க்க‌ப்ப‌ட்டார் இந்த‌ ராடியா. வைஷ்ண‌வி க‌ம்யூனிகேஷ‌ன்ஸ் என்ற‌ பெய‌ரில் ஒரு கம்பெனி ஆர‌ம்பித்து கிட்ட‌தட்ட‌ 50 முக்கிய‌ நிறுவ‌ன‌ங்க‌ளை த‌ன‌து கிளைய‌ன்ட்ஸ் ஆக‌ வைத்திருந்தார். இத்த‌கைய‌ யானை ப‌ல‌ம் பொருந்திய‌ பின்ன‌ணியில்தான் ஸ்பெக்ட்ர‌த்துக்குள்ளும் வ‌ருகிறார்.
ஸ்பெக்ட்ர‌ம் பிர‌ச்னை ஆர‌ம்ப‌த்தில் வெடித்த‌போது பெரிதாக‌ யாருக்கும் புரிய‌வில்லை. அர‌சாங்க‌த்தின் கொள்கை முடிவை கொள்கை முடிவை வைத்து சுய‌லாப‌ம் பார்த்த‌தாக‌ ம‌ட்டுமே லேசாக‌ தெரிந்த‌து. த‌விர‌, ஸ்பெக்ட்ர‌ம் பிர‌ச்னை மிக‌வும் டெக்‍‍ காக‌வே இருந்த்தால் ப‌ல‌ருக்கும் புரியாமல் இருந்த‌து. ஆனால், ராடியா பேசிய‌ டேப்புக‌ள் மீடியாக்க‌ளில் வெளியாகிய‌துதான் மிக‌ முக்கிய‌ திருப்ப‌ம். அத‌ன்பிற‌குதான் ஸ்பெக்ட்ர‌த்தின் கைக‌ள் எங்கெல்லாம் நீண்டு கிட‌க்கிற‌து என்ப‌து பாம‌ர‌னுக்கும் புரிந்த‌து. ராடியா ஏற்ப‌டுத்திய‌வை கொஞ்ச‌ன‌ஞ்ச‌ ஆச்ச‌ரிய‌ங்க‌ள் அல்ல‌. ம‌ந்திரிச‌பையில் ஆ. ராசா த‌க‌வ‌ல் தொட‌ர்பு துறைக்கு அமைச்ச‌ர் என்ப‌தையேகூட‌ ராடியாதான் ஊர்ஜித‌ம் செய்தார். யார், யாருக்கு என்ன‌ ப‌த‌விக‌ள்... காங்கிர‌ஸில் என்ன‌ ந‌ட‌க்கிற‌து...என்ப‌தையெல்லாம் NDTV-யின் ப‌ர்க்கா த‌த்தும் ராடியாவும் ஆலோசித்த‌து... அடுத்து நீங்க‌ள் எழுத‌ப்போகும் அர‌சிய‌ல் க‌ட்டுரையில் இன்னின்ன‌ பாயின்டுக‌ள் வ‌ர‌ வேண்டுமென்று வீர் ச‌ங்விக்கு டியூஷ‌ன் ந‌ட‌த்திய‌து...என‌ நிறைய‌ சொல்ல‌லாம். ராடியா ச‌ர்ச்சையில் சிக்கிய‌ ப‌த்திரிகையாள‌ர்க‌ள் ப‌ல‌ரும் ச‌கஜ‌நிலைமைக்கு வ‌ந்துவிட்ட‌ன‌ர். ராடியாவின் தாக்க‌ம் த‌மிழ‌க‌த்திலும் தாக்க‌ம் ஏற்ப‌டுத்திய‌து. (க‌னிமொழியோடு பேசினார், ராஜாத்திய‌ம்மாளோடு பேசினார், பூங்கோதை ஆல‌டி அருணா கூட‌ பேசினார், 600 கோடி கொடுத்துதான் த‌யாநிதி மாற‌ன் ம‌ந்திரியானார்...டாட்டா க‌டித‌த்தை நேரில் எடுத்து வ‌ந்து க‌ருணாநிதியை ச‌ந்தித்த‌து... அவ‌ர் ச‌ந்திக்க‌வே இல்லை என க‌ருணாநிதி ம‌றுத்த‌து...என‌ த‌மிழ்னாட்டு அர‌சிய‌ல் க‌ள‌த்தையும் தொட்டுச் சென்ற‌ வ‌ர‌லாறும் ராடியாவுக்கு உண்டு.
2008-2009ம் ஆண்டுக‌ளில் இவ‌ர‌து தொலைபேசியை ம‌த்திய‌ வ‌ருமான‌வ‌ரித் துறையின‌ர் டேப் செய்த‌ன‌ர். அப்ப‌டி செய்ய‌ப்ப‌ட்ட‌ ஆயிர‌க்க‌ண‌க்கான‌ டேப் உரையாட‌ல்க‌ள்க‌ளை ஒரு இணைய‌த‌ள‌ம் அம்ப‌ல‌ப்ப‌டுத்திய‌போது இந்திய‌ அர‌சிய‌லே க‌ல்ங்கிப்போன‌து. இந்திய‌ அர‌சாங்க‌த்தின் ஆணிவேரையே ஆட்ட‌ம்காண‌ வைக்கும் அள‌வுக்கு அவை இருந்த‌ன‌. ராடியாவோடு தான் பேசிய‌ உரையாட‌ல்க‌ள் அட‌ங்கிய‌ டேப்பை வெளியிட்டு விடுவார்க‌ளோ என்ற‌ ப‌த‌ற்ற‌த்தில் டாட்டாவே கூட‌ கோர்ட்டு க‌த‌வுக‌ளை த‌ட்டி, கொஞ்ச‌ம் அட‌க்கி வாசிக்க‌ வையுங்க‌ள் என்று கேட்டுக் கொண்ட‌தும் ந‌ட‌ந்த‌து. ஒவ்வொரு ம‌ந்திரிக‌ள், பிர‌ப‌ல‌ அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ள் என‌ எல்லாரையும் த‌ன‌து சுண்டுவிர‌லில் ராடியா வைத்திருந்த‌து அப்ப‌ட்ட‌மாக‌வும் தெரிந்த‌து.
ஸ்பெக்ட‌ர‌த்தில் எல்லோரையும் வ‌ளைத்த‌ CBI- இடைத் த‌ர‌க‌ர் வேலை பார்த்த‌ ராடியாவை ம‌ட்டும் விட்டு வைத்த‌து. மீடியாவும் ஏன் என்று கேட்க‌வில்லை. த‌ற்போது, ராடியா த‌ன‌து ப‌த‌விய‌யை ராஜின‌மா செய்துவிட்டார். இத‌ன் மூல‌ம், ஸ்பெக்ட‌ர‌ம் என்ற‌ ந‌வீன‌கால‌ இதிகாச‌த்தின், 'டேப் காண்ட‌ம்' நாய‌கியின் க‌தையில் முற்றுப்புள்ளி விழுந்துள்ள‌து.

Wednesday, November 2, 2011

Why Karuna not peening dialogues for films now?

க‌ருணாநிதி முத‌ல‌மைச்ச‌ராக‌ இருந்த‌போது ப‌ல்வேறு ப‌ணிச் சுமைக‌ளுக்கிடையே அவ‌ர‌து திரைக்க‌தை வ‌ச‌ன‌த்தில் ப‌ல‌ ப‌ட‌ங்க‌ள் வெளிவ‌ந்து கொண்டிருந்த‌ன‌. முழு ஓய்வில் இருக்கும் இத்த‌ருண்த்தில் அவ‌ர‌து ப‌ட‌ விள‌ம்ப‌ர‌ம் ஒன்றைக்கூட‌ பார்க்க‌முடிய‌வில்லை?
     இது கேள்வி அல்ல‌; கிண்ட‌ல்! அவ‌ர் முத‌ல‌மைச்சராக் இருந்த‌போது ப‌ட‌ம் த‌யாரிக்க‌ப் ப‌ண‌ம் முத‌லீடு செய்ய‌வும்....க‌தை வ‌ச‌ன‌த்துக்கு 25 ல‌ட்ச‌ம் ஊதிய‌த்தை அவ‌ருக்குத் த‌ர‌வும் ப‌ல‌ர் முன்வ‌ந்தார்க‌ள். இப்போது யார் த‌யார்?

ஆஸ்திரேலியாவுக்கு போய் மூக்க‌டிப்ப‌ட்ட‌ இலங்கை அதிப‌ர்!!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் ந‌க‌ரில் காம‌ன்வெல்த் நாடுக‌ளின் உச்சி மாநாடு ந‌டைபெற்ற‌து. ஆஸ்திரேலியா, க‌ன‌டா, இந்தியா, நியூசிலாந்து, இல‌ங்கை உட்ப‌ட‌ 54 நாடுக‌ள் இதில் க‌ல‌ந்துக்கொண்ட‌ன‌. இந்த‌ மாநாட்டில் க‌ல‌ந்துகொண்ட‌ இல‌ங்கை அதிப‌ருக்கு கடும் க‌ண்ட‌ன‌ம் தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து. போர்க் குற்ற‌ விசார‌ணைக்காக‌ காம‌ன்வெல்த் நாடுக‌ளின் ம‌னித‌ உரிமை ஆணைய‌த்தை நிறுவ‌ வேண்டும் என்ற‌ தீர்மான‌ம் கொண்டுவ‌ர‌ப்ப‌ட்ட‌து. ஆனால், அப்ப‌டி ஒரு ஆணைய‌த்தை அமைக்க‌ இந்தியா,இல‌ங்கை, தென்னாப்பிரிக்கா ஆகிய‌ நாடுக‌ள் எதிர்ப்பு தெரிவித்த‌ன். 'காந்தி','ச‌த்தியாக‌ர‌க‌ம்' ப‌ற்றி வாய் கிழிய‌ பேசும் இந்தியா,தென்னாப்பிரிக்கா ஆகிய‌ நாடுக‌ள் எதிர்த்த‌தை உல‌க‌ நாடுக‌ள் ஆச்சிரிய‌மாக‌வும், அதிர்ச்சியாக‌வும் பார்த்த‌ன.


ஆனால், ஒரு உண்மை ம‌ட்டும் தெரிகிறது. போகிற‌ போக்கைப் பார்த்தால், சீனாவுக்கும், இந்தியாவுக்கும் ம‌ட்டும்தான் இலங்கை அதிபரால் போக‌முடியும் போலிருக்கிற‌து.