ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் காமன்வெல்த் நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்றது. ஆஸ்திரேலியா, கனடா, இந்தியா, நியூசிலாந்து, இலங்கை உட்பட 54 நாடுகள் இதில் கலந்துக்கொண்டன. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட இலங்கை அதிபருக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. போர்க் குற்ற விசாரணைக்காக காமன்வெல்த் நாடுகளின் மனித உரிமை ஆணையத்தை நிறுவ வேண்டும் என்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அப்படி ஒரு ஆணையத்தை அமைக்க இந்தியா,இலங்கை, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன். 'காந்தி','சத்தியாகரகம்' பற்றி வாய் கிழிய பேசும் இந்தியா,தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் எதிர்த்ததை உலக நாடுகள் ஆச்சிரியமாகவும், அதிர்ச்சியாகவும் பார்த்தன.
ஆனால், ஒரு உண்மை மட்டும் தெரிகிறது. போகிற போக்கைப் பார்த்தால், சீனாவுக்கும், இந்தியாவுக்கும் மட்டும்தான் இலங்கை அதிபரால் போகமுடியும் போலிருக்கிறது.
No comments:
Post a Comment