ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் இடம்பெறும் பாத்திரங்களின் எண்ணிக்கைகளை அவ்வளவு சாதாரணமாக சொல்லிவிட முடியாது. கதை என்பார்கள், காண்டம் என்பார்கள். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கதாபாத்திரம் குபீர் குபீர் என்று கோலோச்சும். இந்த கதாபாத்திரங்கள் எல்லாம் ஏதோ சைடு ஆர்ட்டிஸ்ட்கள் போல தெரிந்தாலும், கதையை நகர்த்துவதில் இந்த கதாபாத்திரங்கள்தான் முக்கிய பங்கை ஆற்றுகின்றன. ஸ்பெக்ட்ரம் பிரச்சனையும் கூட ஒருவகையில் ராமாயணம், மகாபாரதம் போலதான். எண்ணற்ற கதாபாத்திரங்கள். கதை எங்கையோ தொடங்கி, எங்கெங்கோ சென்று எங்கெல்லாம் செல்லப் போகிறது. இந்த நவீனகால ஸ்பெக்ட்ரம் எனும் இதிகாச்த்தில் நாயகன் பாத்திரத்தில் இருப்பது ஆ. ராசா. இதிலும் பல காண்டங்கள் உள்ளன. இதில் முக்கிய காண்டம் ஒன்று உள்ளது. அந்த காண்டத்தின் பெயர் 'டேப்' காண்டம். அதில் முக்கிய கதாபாத்திரம் நீரா ராடியா. கென்யாவில் பிறந்து லண்டனில் படித்து குஜராத்திக்கு வாழ்ககைப்பட்டு, விரைவிலேயே அதை விவகாரத்து செய்துவிட்டவர்தான் இந்த ராடியா. கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுக்கு வேண்டிய கோல்மால்களை அரசாங்க மட்டத்தில், உயர் அரசியல் அதிகார வளையங்களில் செய்து முடிக்கும் பணியில் அமர்ந்தார் ராடியா. சகாரா என்ற பெரு நிறுவனம்தான் முதல் போணி. பிறகு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், கே.எல்.எம்., யு.கே. ஏர் ஆகிய பெரு நிறுவனங்களுக்கும் இவர்தான் புரோக்கர். அரசியல்வாதிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள்,மீடியாக்கள் என முப்பெரும் துறைகளிலும் முழுமூச்சாக செயல்பட்டு பல நண்பர்களை பெறுகிறார். காரியம் சாதித்து ஓஹோ என கொடிகட்டிப் பற்க்கிறார். கருணானிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் ஒரே ஆலோசகர் இருந்தால் எப்படி இருக்குமோ, அதுபோல டாட்டாவுக்கும், அம்பானிக்கும் என இருவருக்குமே இவர் ஒருவரேதான் எல்லாமும். இதுபோதாதா...பலம் பொருந்திய நபராக வளைவந்து இந்திய அரசாங்கத்தின் அதிகாரவர்கத்தின் மூலை முடுக்குகள், சந்து பொந்துகளில் எல்லாம் படு எளிதாக உள்ளே புகுந்து புறப்பட்டு வெளியே வரும் அசாத்திய ஆற்றலையும் வளர்த்துக் கொண்டார் ராடியா. பி.ஜே.பி. தலைவர்களில் ஆரம்பித்து ரத்தன் டாட்டாவால் வளர்க்கப்பட்டார் இந்த ராடியா. வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் என்ற பெயரில் ஒரு கம்பெனி ஆரம்பித்து கிட்டதட்ட 50 முக்கிய நிறுவனங்களை தனது கிளையன்ட்ஸ் ஆக வைத்திருந்தார். இத்தகைய யானை பலம் பொருந்திய பின்னணியில்தான் ஸ்பெக்ட்ரத்துக்குள்ளும் வருகிறார்.
ஸ்பெக்ட்ரம் பிரச்னை ஆரம்பத்தில் வெடித்தபோது பெரிதாக யாருக்கும் புரியவில்லை. அரசாங்கத்தின் கொள்கை முடிவை கொள்கை முடிவை வைத்து சுயலாபம் பார்த்ததாக மட்டுமே லேசாக தெரிந்தது. தவிர, ஸ்பெக்ட்ரம் பிரச்னை மிகவும் டெக் காகவே இருந்த்தால் பலருக்கும் புரியாமல் இருந்தது. ஆனால், ராடியா பேசிய டேப்புகள் மீடியாக்களில் வெளியாகியதுதான் மிக முக்கிய திருப்பம். அதன்பிறகுதான் ஸ்பெக்ட்ரத்தின் கைகள் எங்கெல்லாம் நீண்டு கிடக்கிறது என்பது பாமரனுக்கும் புரிந்தது. ராடியா ஏற்படுத்தியவை கொஞ்சனஞ்ச ஆச்சரியங்கள் அல்ல. மந்திரிசபையில் ஆ. ராசா தகவல் தொடர்பு துறைக்கு அமைச்சர் என்பதையேகூட ராடியாதான் ஊர்ஜிதம் செய்தார். யார், யாருக்கு என்ன பதவிகள்... காங்கிரஸில் என்ன நடக்கிறது...என்பதையெல்லாம் NDTV-யின் பர்க்கா தத்தும் ராடியாவும் ஆலோசித்தது... அடுத்து நீங்கள் எழுதப்போகும் அரசியல் கட்டுரையில் இன்னின்ன பாயின்டுகள் வர வேண்டுமென்று வீர் சங்விக்கு டியூஷன் நடத்தியது...என நிறைய சொல்லலாம். ராடியா சர்ச்சையில் சிக்கிய பத்திரிகையாளர்கள் பலரும் சகஜநிலைமைக்கு வந்துவிட்டனர். ராடியாவின் தாக்கம் தமிழகத்திலும் தாக்கம் ஏற்படுத்தியது. (கனிமொழியோடு பேசினார், ராஜாத்தியம்மாளோடு பேசினார், பூங்கோதை ஆலடி அருணா கூட பேசினார், 600 கோடி கொடுத்துதான் தயாநிதி மாறன் மந்திரியானார்...டாட்டா கடிதத்தை நேரில் எடுத்து வந்து கருணாநிதியை சந்தித்தது... அவர் சந்திக்கவே இல்லை என கருணாநிதி மறுத்தது...என தமிழ்னாட்டு அரசியல் களத்தையும் தொட்டுச் சென்ற வரலாறும் ராடியாவுக்கு உண்டு.
2008-2009ம் ஆண்டுகளில் இவரது தொலைபேசியை மத்திய வருமானவரித் துறையினர் டேப் செய்தனர். அப்படி செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான டேப் உரையாடல்கள்களை ஒரு இணையதளம் அம்பலப்படுத்தியபோது இந்திய அரசியலே கல்ங்கிப்போனது. இந்திய அரசாங்கத்தின் ஆணிவேரையே ஆட்டம்காண வைக்கும் அளவுக்கு அவை இருந்தன. ராடியாவோடு தான் பேசிய உரையாடல்கள் அடங்கிய டேப்பை வெளியிட்டு விடுவார்களோ என்ற பதற்றத்தில் டாட்டாவே கூட கோர்ட்டு கதவுகளை தட்டி, கொஞ்சம் அடக்கி வாசிக்க வையுங்கள் என்று கேட்டுக் கொண்டதும் நடந்தது. ஒவ்வொரு மந்திரிகள், பிரபல அரசியல் தலைவர்கள் என எல்லாரையும் தனது சுண்டுவிரலில் ராடியா வைத்திருந்தது அப்பட்டமாகவும் தெரிந்தது.
ஸ்பெக்டரத்தில் எல்லோரையும் வளைத்த CBI- இடைத் தரகர் வேலை பார்த்த ராடியாவை மட்டும் விட்டு வைத்தது. மீடியாவும் ஏன் என்று கேட்கவில்லை. தற்போது, ராடியா தனது பதவியயை ராஜினமா செய்துவிட்டார். இதன் மூலம், ஸ்பெக்டரம் என்ற நவீனகால இதிகாசத்தின், 'டேப் காண்டம்' நாயகியின் கதையில் முற்றுப்புள்ளி விழுந்துள்ளது.
No comments:
Post a Comment