About "JPC" which is rocking in our country now....
ஜே.பி.சி., என்றால் என்ன?
அரசாங்கத்தின் அலுவல்கள் மற்றும் விவகாரங்கள் அனைத்திற்கும், பார்லிமென்ட் நடைபெறும் குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வு காண்பது என்பது இயலாத காரியம். எனவே அரசாங்கத்தின் வேலைப்பளுவை குறைத்து, அனைத்து விவகாரங்களையும் பரிசீலனை செய்து, தீர்வு காணும் வகையில், மத்திய அரசு பல்வேறு கமிட்டிகளை அமைக்கிறது.இந்த கமிட்டிகள் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. ஒன்று பார்லிமென்ட் நிலைக் குழுக்கள் என்றும் மற்றொன்று தற்காலிக கூட்டுக் குழுக்கள் (எச்.ஓ.சி.,) என்றும் அழைக்கப்படுகிறது. பார்லிமெண்ட் நிலைக் குழுக்கள் ஆண்டுதோறும் அமைக்கப்படும். ஆனால், எச்.ஓ.சி., எனப்படும் தற்காலிக பார்லிமென்ட் கூட்டுக் குழுக்கள் (ஜே.பி.சி.,) தேவை ஏற்பட்டால் மட்டுமே அமைக்கப்படும்.
ஜே.பி.சி., அமைக்கப்படும் முறை :
ஜே.பி.சி., அமைப்பதற்கு பார்லிமென்டின் இரு அவைகளின் ஒப்புதலும் வேண்டும். ஒரு அவையில் ஜே.பி.சி., அமைக்க மசோதா நிறைவேற்றப்பட்டாலும், மற்றொரு அவையின் ஒப்புதலும் பெற வேண்டும். இல்லையென்றால், இரு அவைகளின் தலைவர்களும் கலந்து பேசி முடிவு எட்டப்படும். பார்லிமென்டில் கட்சிகளின் எம்.பி.,க்களின் பலத்தை அடிப்படையாக கொண்டு உறுப்பினர்கள் நியமனம் செய்யும் நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. தவிர, மூன்றில் இரு பங்கு உறுப்பினர்கள் லோக்சபாவிலும், ஒரு பங்கு உறுப்பினர்கள் ராஜ்யசபாவில் இருந்தும் 2:1 என்ற விகிதத்தில் நியமிக்கப்படுவர்.
ஜே.பி.சி.,யின் விசாரணை நடைமுறை :
ஜே.பி.சி., அமைக்கப்பட்டவுடன் அதற்கென சில விதிகள் மற்றும் நடைமுறைகள் வகுக்கப்படும். அதன்படி ஜே.பி.சி., செயல்படும். மேலும், விசாரணைக்கு தேவையான ஆலோசனைகளை நிபுணர்களிடமிருந்து பெற்று கொள்ளலாம். இதற்காக சிறப்பு ஆலோசகர்களும் நியமிக்கப்படுவர்.ஜே.பி.சி.,யின் விசாரணை மிகவும் ரகசியமாக நடைபெறும். ஆனால், விசாரணையின் தன்மைகள் குறித்து ஜே.பி.சி., தலைவர் அவ்வப்போது பத்திரிகையாளர்களுக்கு செய்திகளை வெளியிடுவார்.
கடந்த 25 ஆண்டு கால பார்லிமென்ட் வரலாற்றில், முக்கிய பிரச்னைகள் குறித்து விசாரிக்க ஜே.பி.சி.,க்கள் அமைக்கப்பட்டன. ஆனால், ஜே.பி.சி., விசாரணை அறிக்கைகளால், பிரச்னைகளுக்கு எந்த ஒரு குறிப்பிடத்தக்க தீர்வுகளும் எட்டப்படவில்லை.
(1) போபர்ஸ் ஊழல் - 1987
(2) பங்கு சந்தை ஊழல் - 1992
(3) கோலா ஊழல் - 2003
No comments:
Post a Comment