Tuesday, January 25, 2011

Pongal Kolam (Rangoli) Pictures...

These are my home's Kolam (Rangoli) for Pongal festival, done by my mummy and my sister.












Friday, January 21, 2011

Tuesday, January 11, 2011

INDIA – TODAY EXCLUSIVE OPINION POLL





(01) Who can be the best Prime Minister for India?
 Rahul Gandhi – 20 %
Atal Bihari Vajpayee – 17%
Narendra Modi – 9%
Sonia Gandhi – 7%
Lal Krishna Advani – 7%
Mayawati – 6%
Nitish Kumar – 4%
(02) Who has been the best Prime Minister of India so far?
 Indira Gandhi – 31%
Atal Bihari Vajpayee – 23%
Rajiv Gandhi – 13%
Manmohan Singh – 9%
Jawaharlal Nehru – 8%

Vajpayee, long retired from active politics is still the second best Prime minister India has ever had, next only to Indira Gandhi whose emotional covenant with India still remains intact. He is also the second most suitable candidate to be the Prime Minister. His popularity remains intact despite the fluctuations in the fortunes of his party. It is more than a reflection of how he continues to be indulged by India; it is a reminder that the idea of Vajpayee has not passed its time in the Indian Right. The next Vajpayee has to be an invention. The irony is that the most popular BJP leader after Vajpayee is a force of polarization within the party as well as without.

(03) Top Five Best Chief Ministers:
Narendra Modi, Gujarat
Nitish Kumar, Bihar
Sheila Dikshit, Delhi
Mayawati, Uttar Pradesh
Shivraj S Chouhan, Madhya Pradesh
(04) Best Role Model:
APJ Abdul Kalam – 20%
Amitabh Bachchan – 13%
Anil Ambani – 7%
Sachin Tendulkar – 7%
(05) Performance of Manmohan Singh as Prime Minister:
Poor – 12%
Average – 37%
Good – 39%
Outstanding – 6%
(06) Has Manmohan Singh’s image been affected by the involvement of senior party leaders in scams?
Yes – 44%
No – 23%
Can’t Say/ Don’t Know – 33%
(07) Has Sonia Gandhi’s image been affected by the involvement of senior party leaders in scams?
Yes – 43%
No – 24%
Can’t Say/ Don’t Know – 32%
(08) How would you rate the performance of the bJP as the main Opposition Party?
Poor – 13%
Average – 35%
Good – 36%
Outstanding – 5%
(09) Will India emerge as the next superpower in education?
32% - India is in the process of becoming one
48% - Yes, it is the next superpower
4% - It will never become superpower
(10) Can an Indian win the Nobel Prize in the coming decade?
Yes – 55%
No – 12%
Can’t Say / Don’t Know – 43%
(11) Will the Indian economy become bigger than China’s in the next 10 years?
Yes – 50%
No – 24%
Can’t Say / Don’t Know – 26%
(12) Highest per capita income cities:
Chandigarh
Gurgaon
Mumbai
Delhi
Bangalore
(13) Should Youth join politics?
Yes – 73%
No – 13%
Can’t Say / Don’t Know – 24%

Other Important details that got in the survey:
  • 31% say the Congress is more concerned about the poor while 28% for BJP.
  • 47% in Chhattisgarh, one of the worst Naxal-infested states, believe that the Government will never be able to solve this problem.
  • 49% consider hosting of CWG as a success while 11% weren’t aware that India had hosted such event at all.
  • By 2020, the average age of an India will be 29 years (up from 23 years in 2001)
  • 16% of Kerala’s population will be old people in 2021, the highest proportion in the country.
  • Bihar and Haryana will be the fastest movers in terms of GDP.
  • 40% in Kerala and 58% in Tamil Nadu say their Chief Ministers are best in the country.

Monday, January 10, 2011

நரியைப் பரியாக்கும் கபில் சிபல்!




கபில் சிபல் இந்தியாவின் தலைசிறந்த வழக்குரைஞர்களில் ஒருவர். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது காங்கிரஸ் கட்சியின் பத்திரிகைத் தொடர்பாளராகச் சிறப்பாகச் செயல்பட்டுப் பாராட்டுப் பெற்றவர். இவர் மத்திய அமைச்சரவையில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரானபோது, அறிவுஜீவியும் உலக விவரங்கள் தெரிந்தவரும், ஊழல்களில் ஈடுபட அவசியமில்லாதவருமான ஒருவரைப் பிரதமர் மன்மோகன் சிங் தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டிருக்கிறார் என்று மகிழ்ச்சியாக இருந்தது.  இப்போதல்லவா தெரிகிறது, காங்கிரஸ் கட்சி கபில் சிபலை ஏன் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டிருக்கிறது என்று!  அவரைத் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக்கியபோது, அட, நம்ம ஊர் ஆண்டிமுத்து ராசாவால் ஊழல் மயமாக்கப்பட்ட தொலைத்தொடர்புத் துறையைச் சுத்தப்படுத்த ஒரு நேர்மையானவர் நியமிக்கப்பட்டிருக்கிறார், தவறுகள் நிறுத்தப்படும், தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்கிற நம்பிக்கை பிறந்தது.  இப்போதல்லவா தெரிகிறது, ராஜிநாமா செய்த ஆ. ராசாவின் இடத்தில் அமர்த்த கபில் சிபலை ஏன் பிரதமர் தேர்ந்தெடுத்தார் என்று!  திறமையான வழக்குரைஞர்களின் பணி, தனது கட்சிக்காரர்களைத் தப்ப வைப்பது. சட்டத்தை வளைத்தும் நெளித்தும், புதுப்புது விளக்கங்களையும் வியாக்கியானங்களையும் முன்வைத்து குற்றவாளியைக் குற்றமற்றவர் என்று நிரூபிப்பதுதான் என்பது தெரிந்த விஷயம். கபில் சிபல் இப்போது மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராகச் செயல்படவில்லை. ஒரு வழக்குரைஞராகவும், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை நியாயப்படுத்தும் பத்திரிகைத் தொடர்பாளராகவும்தான் அமைச்சரவையில் செயல்படுகிறார் என்பதை அவரது சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பு தெளிவாக்கி இருக்கிறது.  தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை முற்றிலும் தவறான அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இப்போது பதவி வகிக்கும் வழக்குரைஞர் கபில் சிபலின் கருத்து. அதாவது, முறையாகத் தணிக்கை செய்து அதன் அடிப்படையில் ஓர் அரசியல் சட்ட அமைப்பு தாக்கல் செய்திருக்கும் அறிக்கை முழுமையாகத் தவறானது என்கிற வாதத்தை ஓர் அமைச்சர், பத்திரிகையாளர்களை அழைத்து அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.  தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை என்பது இப்போது நாடாளுமன்றத்துக்குச் சொந்தமான ஒன்று. அதை விவாதிக்கவோ, குறைகூறவோ, நிராகரிக்கவோ நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. நாடாளுமன்றப் பொதுக்கணக்குக் குழுவின் முன் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி ஆஜராகித் தனது கருத்துகளை ஏற்கெனவே கூறிவிட்டிருக்கிறார். இந்த நிலையில், அவரது செயல்பாடுகள் பற்றியோ, அறிக்கை பற்றியோ சம்பந்தப்பட்ட அமைச்சர் பேசுவதோ, குறைகூறுவதோ அரசியல் சட்டத்தையே அவமதிக்கும் செயல் என்பதுகூடவா, மெத்தப் படித்த அமைச்சர் கபில் சிபலுக்குப் புரியாமல் போனது.  தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கைப்படி, ஆ. ராசா அமைச்சராக இருந்தபோது இரண்டாவது தலைமுறை (2ஜி) அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீட்டில் வழங்கப்பட்ட 122 உரிமங்களாலும், 35 இரட்டைத் தொழில்நுட்ப உரிமங்களாலும் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் "உத்தேச' இழப்பு ரூ. 1,76,645 கோடி. இந்த இழப்பு, கடந்த ஆண்டு நடந்த மூன்றாவது தலைமுறை அலைக்கற்றை உரிம விற்பனையின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது என்பதையும் அந்த அறிக்கை தெளிவுபடுத்தி இருக்கிறது.  முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயல்வதுபோல, அமைச்சர் கபில் சிபல் எந்த இழப்பும் ஏற்படவே இல்லை என்றும் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் தவறான அறிக்கையால் எதிர்க்கட்சிகள் மக்கள் மத்தியில் தவறான பிரசாரத்தை முடுக்கிவிட்டிருப்பதாகவும் கூறுகிறார். அதேநேரத்தில், சில நடைமுறைத் தவறுகள் நடந்திருப்பதாக ஒத்துக்கொண்டும் இருக்கிறார்.  அது என்ன நடைமுறைத் தவறு? ஒருசிலருக்கு மட்டும் முன்கூட்டியே தகவல் தந்து உரிமத்தைக் குறைந்த விலையில் பெற்று மிக அதிகமான விலைக்கு விற்று கோடி கோடியாகச் சம்பாதிக்க வாய்ப்பளித்ததுதான் அந்த நடைமுறைத் தவறு. அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த மிகப்பெரிய மோசடியே அதுதானே. அதை ஏற்றுக்கொண்ட பிறகு, இழப்பேதும் ஏற்படவில்லை என்றால் அது வழக்குரைஞரின் விதண்டாவாதமாக இருக்கிறதே தவிர, ஒரு பொறுப்பான அமைச்சரின் விளக்கமாக இல்லை.  நீதிபதி சிவராஜ் பாட்டீல் கமிட்டியின் விசாரணை நடந்துவரும் நேரத்தில் அமைச்சர் கபில் சிபல் இப்படிப் பேசவேண்டிய அவசியம் என்ன என்கிற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிச் செயலர் டி.ராஜாவின் கேள்விக்கும், இதுபோன்று அரசியல் சட்ட அமைப்பான தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியைத் குற்றப்படுத்துவதன் மூலம் நடைபெற்று வரும் பல விசாரணைகளில் அதிகாரிகள் முறையாகத் தகவல்களைத் தராமல் தடுக்க அமைச்சர் உதவுகிறார் என்கிற மார்க்சிஸ்ட் கட்சியின் கண்டனத்திலும் நியாயம் தெரிகிறது.  அமைச்சர் கபில் சிபலின் பத்திரிகை நிருபர்களிடமான பேச்சு இடதுசாரிக் கட்சிகளும், பாரதிய ஜனதா கட்சியும் கோருகிற நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கான அவசியத்தை மேலும் அதிகரிக்கிறது. கட்சித் தலைமைக்குத் தெரியாமல் கபில் சிபல் பேசியிருக்க முடியாது. அப்படியானால், காங்கிரஸ் தலைமை முறைகேடாக உரிமம் பெற்று கோடிகளில் லாபத்தை அள்ளிக் குவித்த கார்ப்பரேட் நிறுவனங்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறதா?  சில நாள்களுக்கு முன்னர்தான் இதே கபில் சிபல் - பாஜக கூட்டணியில் 1999-ல் இருந்து பின்பற்றப்பட்ட "முதலில் வந்தவருக்கே முன்னுரிமை' கொள்கையால் ரூ. 1.50 லட்சம் கோடி இழப்பு என்று கண்டுபிடித்து கூறியிருந்தார். அந்த நஷ்டம் ஆ. ராசா நடவடிக்கையில் லாபமானது என்கிறாரா அவர்? "நரி'யைப் "பரி'யாக்கிய கதையாக அல்லவா இருக்கிறது இது!

"சென்னை ஓபன் டென்னிஸ் -2011"

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பயஸ்-பூபதி ஜோடி 5-வது முறையாக பட்டம் வென்றது.  இவர்கள் 6-2, 6-7, 10-7 என்ற கணக்கில் நெதர்லாந்தின் ராபின் ஹேஸி-அமெரிக்காவின் டேவிட் மார்டின் ஜோடியை வென்றது.  ÷உள்ளூர் ரசிகர்களின் ஆதரவோடு களம் கண்ட இந்திய ஜோடி, 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை வென்றது. இந்த செட்டில் பயஸ்-பூபதி நேர்த்தியான ஷாட்களை அடித்ததோடு, முன்கள ஆட்டத்தைக் கையாண்டு நெட்டுக்கு அருகிலேயே பந்தை தட்டிவிட்டு புள்ளிகளைப் பெற்றது.  ÷இரண்டாவது செட்டின் மூன்றாவது கேமில் பயஸின் சர்வீûஸ முறியடித்தது மார்ட்டின் ஜோடி. அதற்குப் பதிலடி தரும் வகையில் அடுத்த கேமில் மார்டின் ஜோடியின் சர்வீûஸ முறியடித்தது இந்திய ஜோடி. இருப்பினும் இந்த செட்டை இந்திய ஜோடி 6-7 என்ற கணக்கில் இழந்தது.  ÷இதையடுத்து டை பிரேக்கர் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் முதல் 5 கேம்களின் முடிவில் மார்ட்டின் ஜோடி 4-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.  அடுத்து நடைபெற்ற கேம், இந்திய ஜோடிக்கு திருப்புமுனையாக அமைந்தது. 6-வது கேமில் இருந்து அடுத்த 3 கேம்களையும் வென்று 4-4 என்ற கணக்கில் சமநிலைப் பெற்றது இந்திய ஜோடி.  ÷9-வது கேமில் மார்ட்டின் ஜோடி தொடர்ந்து இரு முறை நெட்டில் அடிக்கவே பயஸ்- பூபதி ஜோடி 5-4 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதன்பின்னர் நடைபெற்ற கேம்களில் மகேஸýம், பூபதியும் ஆக்ரோஷமாக ஆடினர்.  இறுதியில் இந்திய ஜோடி 10-7 என்ற கணக்கில் அந்த செட்டை வென்றது. வெற்றி உற்சாகத்தல் பயஸ் பாய்ந்து சென்று மகேஸ் பூபதியைக் கட்டிப்பிடித்து அவரது இடுப்பில் ஏறி அமர்ந்தார்.  ÷இந்த வெற்றி மூலம் சென்னை ஓபனில் இரட்டையர் பிரிவில் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பெருமையைப் பெற்றது இந்த ஜோடி. 1997, 1998, 1999, 2002 ஆகிய ஆண்டுகளில் இந்த ஜோடி சென்னை ஓபனில் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 
   வெற்றிக் கூட்டணி லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி ஜோடி இரட்டையர் பிரிவில் 1990 முதல் 2002 வரையிலான காலங்களில் ஏடிபி, டேவிஸ் கோப்பை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.  ÷1999, 2001-ம் ஆண்டுகளில் பிரெஞ்ச் ஓபனிலும், 1999-ல் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 2002-ம் ஆண்டில் இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக ஏடிபி டென்னிஸ் போட்டிகளில் சேர்ந்து விளையாடுவதில்லை என்று அறிவித்தனர்.  ÷அதன்பிறகு டேவிஸ் கோப்பை, ஆசிய கோப்பை, ஒலிம்பிக் போட்டிகளில் இணைந்து விளையாடி வந்தபோதும், ஏடிபி டென்னிஸ் போட்டிகளில் ஒன்று சேரவில்லை. இந்த ஜோடி ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றதில்லை என்ற குறை மட்டும் நீண்ட நாள்களாக இருந்து வருகிறது.  ÷இந்நிலையில் ஜனவரி 17-ம் தேதி நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய ஓபனில் இணைந்து ஆடுவதென இவர்கள் முடிவு செய்தனர். அதற்கு முன்னோட்டமாக சென்னை ஓபனில் இருவரும் களமிறங்கி, பட்டத்தையும் வென்றுள்ளனர். இருவருமே இப்போது ஓய்வுபெற வேண்டிய வயதை எட்டியுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் இந்த முறை ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வெல்ல வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 உற்சாகப்படுத்திய  ரசிகர்கள்  இறுதிப் போட்டி என்பதால் மைதானம் நிரம்பி வழிந்தது. ரசிகர்கள் அவ்வப்போது கோஷம் எழுப்பி பயஸ்-பூபதியை உற்சாகப்படுத்தினர். இதுவும் அவர்களது ஆட்டத்துக்கு கூடுதல் பலம் சேர்த்தது. டை பிரேக்கர் ஆட்டம் நடைபெற்றபோது, மைதானத்தில் இருந்த சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் எழுந்து நின்று, தேசியக் கொடியை காட்டி பயஸ்-பூபதியை உற்சாகப்படுத்தினர். இந்திய ஜோடி வெற்றிபெற்றபோது ரசிகர்களின் எழுப்பிய மகிழ்ச்சி கூச்சல் விண்ணை முட்டியது.
ஒற்றையர் பிரிவில் :




சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா சாம்பியன் பட்டம் வென்றார்.  இவர் 7-5, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் சேவியர் மலிûஸ வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
இந்த ஆட்டம் 2 மணிநேரம் 14 நிமிடங்கள் வரை நீடித்தது. சென்னை ஓபன் டென்னிஸ் பட்டத்தை வாவ்ரிங்கா இப்போது முதல்முறையாக வென்றுள்ளார். கடந்த முறை இறுதிச்சுற்று வரை முன்னேறிய வாவ்ரிங்கா, மரின் சிலிச்சிடம் தோல்வியடைந்தார்.  

Telangana Cartoon Pictures from The Hindu Newspaper