Monday, January 10, 2011

"சென்னை ஓபன் டென்னிஸ் -2011"

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பயஸ்-பூபதி ஜோடி 5-வது முறையாக பட்டம் வென்றது.  இவர்கள் 6-2, 6-7, 10-7 என்ற கணக்கில் நெதர்லாந்தின் ராபின் ஹேஸி-அமெரிக்காவின் டேவிட் மார்டின் ஜோடியை வென்றது.  ÷உள்ளூர் ரசிகர்களின் ஆதரவோடு களம் கண்ட இந்திய ஜோடி, 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை வென்றது. இந்த செட்டில் பயஸ்-பூபதி நேர்த்தியான ஷாட்களை அடித்ததோடு, முன்கள ஆட்டத்தைக் கையாண்டு நெட்டுக்கு அருகிலேயே பந்தை தட்டிவிட்டு புள்ளிகளைப் பெற்றது.  ÷இரண்டாவது செட்டின் மூன்றாவது கேமில் பயஸின் சர்வீûஸ முறியடித்தது மார்ட்டின் ஜோடி. அதற்குப் பதிலடி தரும் வகையில் அடுத்த கேமில் மார்டின் ஜோடியின் சர்வீûஸ முறியடித்தது இந்திய ஜோடி. இருப்பினும் இந்த செட்டை இந்திய ஜோடி 6-7 என்ற கணக்கில் இழந்தது.  ÷இதையடுத்து டை பிரேக்கர் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் முதல் 5 கேம்களின் முடிவில் மார்ட்டின் ஜோடி 4-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.  அடுத்து நடைபெற்ற கேம், இந்திய ஜோடிக்கு திருப்புமுனையாக அமைந்தது. 6-வது கேமில் இருந்து அடுத்த 3 கேம்களையும் வென்று 4-4 என்ற கணக்கில் சமநிலைப் பெற்றது இந்திய ஜோடி.  ÷9-வது கேமில் மார்ட்டின் ஜோடி தொடர்ந்து இரு முறை நெட்டில் அடிக்கவே பயஸ்- பூபதி ஜோடி 5-4 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதன்பின்னர் நடைபெற்ற கேம்களில் மகேஸýம், பூபதியும் ஆக்ரோஷமாக ஆடினர்.  இறுதியில் இந்திய ஜோடி 10-7 என்ற கணக்கில் அந்த செட்டை வென்றது. வெற்றி உற்சாகத்தல் பயஸ் பாய்ந்து சென்று மகேஸ் பூபதியைக் கட்டிப்பிடித்து அவரது இடுப்பில் ஏறி அமர்ந்தார்.  ÷இந்த வெற்றி மூலம் சென்னை ஓபனில் இரட்டையர் பிரிவில் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பெருமையைப் பெற்றது இந்த ஜோடி. 1997, 1998, 1999, 2002 ஆகிய ஆண்டுகளில் இந்த ஜோடி சென்னை ஓபனில் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 
   வெற்றிக் கூட்டணி லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி ஜோடி இரட்டையர் பிரிவில் 1990 முதல் 2002 வரையிலான காலங்களில் ஏடிபி, டேவிஸ் கோப்பை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.  ÷1999, 2001-ம் ஆண்டுகளில் பிரெஞ்ச் ஓபனிலும், 1999-ல் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 2002-ம் ஆண்டில் இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக ஏடிபி டென்னிஸ் போட்டிகளில் சேர்ந்து விளையாடுவதில்லை என்று அறிவித்தனர்.  ÷அதன்பிறகு டேவிஸ் கோப்பை, ஆசிய கோப்பை, ஒலிம்பிக் போட்டிகளில் இணைந்து விளையாடி வந்தபோதும், ஏடிபி டென்னிஸ் போட்டிகளில் ஒன்று சேரவில்லை. இந்த ஜோடி ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றதில்லை என்ற குறை மட்டும் நீண்ட நாள்களாக இருந்து வருகிறது.  ÷இந்நிலையில் ஜனவரி 17-ம் தேதி நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய ஓபனில் இணைந்து ஆடுவதென இவர்கள் முடிவு செய்தனர். அதற்கு முன்னோட்டமாக சென்னை ஓபனில் இருவரும் களமிறங்கி, பட்டத்தையும் வென்றுள்ளனர். இருவருமே இப்போது ஓய்வுபெற வேண்டிய வயதை எட்டியுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் இந்த முறை ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வெல்ல வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 உற்சாகப்படுத்திய  ரசிகர்கள்  இறுதிப் போட்டி என்பதால் மைதானம் நிரம்பி வழிந்தது. ரசிகர்கள் அவ்வப்போது கோஷம் எழுப்பி பயஸ்-பூபதியை உற்சாகப்படுத்தினர். இதுவும் அவர்களது ஆட்டத்துக்கு கூடுதல் பலம் சேர்த்தது. டை பிரேக்கர் ஆட்டம் நடைபெற்றபோது, மைதானத்தில் இருந்த சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் எழுந்து நின்று, தேசியக் கொடியை காட்டி பயஸ்-பூபதியை உற்சாகப்படுத்தினர். இந்திய ஜோடி வெற்றிபெற்றபோது ரசிகர்களின் எழுப்பிய மகிழ்ச்சி கூச்சல் விண்ணை முட்டியது.
ஒற்றையர் பிரிவில் :




சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா சாம்பியன் பட்டம் வென்றார்.  இவர் 7-5, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் சேவியர் மலிûஸ வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
இந்த ஆட்டம் 2 மணிநேரம் 14 நிமிடங்கள் வரை நீடித்தது. சென்னை ஓபன் டென்னிஸ் பட்டத்தை வாவ்ரிங்கா இப்போது முதல்முறையாக வென்றுள்ளார். கடந்த முறை இறுதிச்சுற்று வரை முன்னேறிய வாவ்ரிங்கா, மரின் சிலிச்சிடம் தோல்வியடைந்தார்.  

No comments:

Post a Comment