ஆறு மாதங்களுக்கு முன்னால், லோக்பால் சட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, உண்ணாவிரதம் இருந்தபோது தான் அன்னா ஹசாரே நாட்டிற்கு அறிமுகமானார். அடுத்த ஆறு மாதங்களில் அவர் அடைந்த பிரபலம் அவரே எதிர்பாராதது. நிறுவனங்கள் தங்ள் பொருட்களை விற்க, குறி வைப்பது நடுத்தர மக்களைத்தான். ஏனெனில் இந்தியாவின் மிகப்பெரிய வியாபாரச் சந்தை இந்த ந்டுத்தர மக்கள்தான். அவர்களைப் பாதிக்கும் முக்கிய விஷியமான ஊழலைக் கையில் எடுத்தது தான் அன்னா ஹசாரேவின் முதல் வெற்றி. வடகிழக்கு மாநிலங்களில் மக்கள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் அன்றாடம் அனுபவிக்கும் சித்திரவதைகள் பற்றியோ, பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமப்பில் பழங்குடி மக்கள் விரட்டப்படுவது பற்றியோ இந்திய நடுத்தர வர்க்கம் கவலைப்படுவதே இல்லை. தங்களைப் பாதிக்காத எந்த விஷயமும் அவர்களுக்கு (நமக்கு) ஒரு பொருட்டு இல்லை. ஆனால் அன்றாடம் எதிர்கொள்ள வேண்டிய லஞ்சமும் ஊழலும் அவர்களை கோபமடைய வைக்கிறது.நடுத்தர மக்களை பார்வையாளர்களாக கொண்டுள்ள ஆங்கிலத் தொலைக்காட்சிகளும் அவர்களது கோபத்தை தங்கள் வியாபாரத்திற்குப் பயன்படுத்திக் கொள்கின்றன. அதனால் தான் நாள்கணக்கில் அன்னாவின் உண்ணாவிரதத்தை நேரலையில் ஒளிப்பரப்புகின்றன தொலைக்காட்சிகள்.
அரசு கொண்டு வர இருக்கும் லோக்பால் மசோதா தற்போது நாடாளுமன்ற நிலைக்குழு முன் இருக்கிறது. அதற்கு பதில் ஜன்லோக்பால் என்கிற தாங்கள் சொல்லும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பது அன்னா ஹசாரே குழுவின் கோரிக்கை. "மசோதா என்பது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டியது. அதை புல்வெளியில் எல்லாம் யாரும் நிறைவேற்ற முடியாது" என்று கிண்டலடித்தவர் நமது மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.
ஜன்லோக்பாலை வலியுறுத்தி அன்னா ஹசாரே உண்ணாவிரதம் அறிவித்த போது, ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்தது தில்லி போலீஸ். வழக்கமாக எல்லா ஆர்ப்பாட்டங்களுக்கும் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள்தான் அது என்பதை மறைத்து, "அன்னாவுக்கு தடை" என செய்திகளை வெளியிட்டு ஊடகங்கள் மக்களை ஏமாற்றின. தடையை மீறி அன்னா குழுவினர் உண்ணாவிரதம் இருக்கவும், அவர்களை கொண்டு போய் திகாரில் அடைத்ததும் தான் விஷியம் விஸ்வரூபம் எடுத்தது. எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல அமைந்தது, காங்கிரஸ்காரர்களின் பேச்சு (குறிப்பாக, மனிஷ் திவாரி, சிதம்பரம், கபில் சிபில், திக்விஜய் சிங்) ஏற்கனவே வெவ்வேறு ஊழல்களில் எவ்வளவு சைபர்கள் போடுவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த இந்திய மக்கள் மத்திய அரசின் போக்கை பார்த்து கோபம் அடைந்தனர்.
ஜன்லோக்பால் மசோதாவில் இருப்பது என்ன?
இந்த ஜன்லோக்பால் மசோதா அமலுக்கு வந்தால் அதன்கீழ் பிரதமர், நீதிபதிகள் உட்பட யாரை வேண்டுமானாலும் விசாரிக்கலாம். இதற்கு யார் அனுமதியும் பெறத் தேவையில்லை. ஊழல் தடுப்புப் பிரிவு, CBI ஆகிய துறைகளும் லோக்பாலின் கீழ் இணைக்கப்படும். குற்றம் குறித்து ஒரு வருடத்திற்குள் விசாரணை நடத்தி, அடுத்த ஒரு வருடத்திற்குள் விசாரணை நடத்தி, அடுத்த ஒரு வருடத்திற்குள் தண்டனையும் வழங்கப்படும்.ஊழல் அதிகாரியை பதவி நீக்கம் செய்யும் உரிமையும் லோக்பால் அமைப்புக்கு உண்டு. (ஊழலில் ஊறித் திளைத்த நம் அரசியல்வாதிகள் இதற்கு பதட்டப்படாமல் என்ன செய்வார்கள்?)
ஜன்லோக்பாலில் இருக்கும் மிகப்பெரிய ஓட்டைகள்:
ஸ்பெக்ட்ரம் ஊழலில் முக்கிய குற்றம் சாட்டப்பட்ட சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் அன்னாவின் உண்ணாவிரதத்தை ஆதரிக்கிறது. ஊழல் குற்றச்சாட்டில் எடியூரப்பாவை பதவியில் இருந்து நீக்கி விட்டு, சுரங்க ஊழல் புகார் ரெட்டி சகோதரர்களை பதவியில் தொடர அனுமதிக்கும் பா.ஜ.வும் அன்னாவை ஆதரிக்கிறது. ஊழல்வாதிகளும் ஊழலை ஆதரிப்பதன் பின்புலம் என்னவாக இருக்க முடியும்?.
உதாரணமாக, ஜன்லோக்பால் ஸ்பெக்ட்ரம் ஊழலை விசாரிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். மசோதாவின் படி, குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா விசாரிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார். ஆனால் ஊழலால் பயன் அடைந்ததாகச் சொல்லப்படும், Reliance, Tata, போன்ற நிறுவனங்கள் மீது என்ன விசாரணை என்பது குறித்து லோக்பாலில் எதுவும் இல்லை.
இதில் வேடிக்கை என்னவென்றால், உண்ணாவிரதத்தை தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்ப Reliance நிறுவனம் ஸ்பான்ஸர் செய்கிறது என்பதில் இருந்தே மசோதாவின் ஓட்டையைப் புரிந்துக் கொள்ளலாம். முக்கியமாக, நாடு முழுவதும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு லோக்பால் அமைப்பு குறித்தெல்லாம் ஒரு தெளிவும் இல்லை. அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்து, நாம் ஆதரவு தெரிவித்து, மசோதா நிறைவேறினால் மறுநாளில் இருந்து நாட்டில் ஊழல் இல்லாமல் போய்விடும் என மக்கள் நம்புகிறார்கள். கருப்புப்பணத்தில் பெருமளவு பதுக்கி வைத்திருக்கும் திரைப்படத் துறையினர் (பாலிவுட், கோலிவுட், டோலிவுட், என்ற பாகுபாடெல்லாம் இதில் இல்லை)ஊழலக்கு எதிரான போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருப்பதுதான் உச்சக்கட்ட காமெடி. (திரைப்படத்தில் முதலீடு செய்யப்படும் பணம், நடிகர்களின் சம்பளம் என திரைப்படங்களே கருப்புப் பண்த்தில்தான் எடுக்கப்படுகிறது. வாங்கும் சம்பளத்திற்கு எந்த நடிகர்களும், நடிகைகளும் உண்மையான வருமான வரி கட்டியது கிடையாது)
கருப்புப் பணத்தை மாற்றுவதற்காகவே ஆசிரமம் நடத்தும் 'கார்ப்பேரேட்' சாமியார்களும் அன்னா ஹசாரேவின் போராட்டத்தை ஆதரிக்கிறார்கள்.
[ஊடகங்களில் நடைபெறும் ஊழல்கள், கார்ப்பேரேட் கம்பெனிகளில் நடைபெறும் ஊழல்கள் பற்றியெல்லாம் எந்த 'பால்'லும் வரவில்லை]
தமிழ்நாட்டில் எப்படி? தமிழ்நாட்டில் அன்னா ஹசாரே போராட்டத்திற்கு பெரிய ஆதரவு இல்லை என்பதை ஒப்புக் கொள்ளவேண்டும். தலைநகர் சென்னையில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் நடத்தி வரும் ஹசாரே ஆதரவாளர்கள் பெரும்பாலும் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள். சென்னையில் ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிய வந்த இடத்தில் அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். (RSS- போன்ற இந்துத்துவ அமைப்புகள் இதன் பின்னணியில் இருப்பதையும் காண முடிகிறது)
கல்லூரி மாணவர்கள் பங்குபெறுகிறார்கள் என்று தொலைக்காட்சிகளில் காட்டுகிறார்கள். அவர்களை பொறுத்தவரை, லோக்பால், ஜன் லோக்பால் பற்றியெல்லாம் தெரியாது. ஒரு நாள் கல்லூரிக்கு செல்லாமல் கழிந்தது.
மசோதாவில் இத்தனை சந்தேகங்கள் இருந்தாலும். அன்னாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் மக்கள் 'ஊழல்' என்கிற ஒற்றை வார்த்தை மீதான எதிர்ப்பில் இணைந்திருக்கிறார்கள். ஊழல் என்கிற வார்த்தை மீது இத்தனை விவாதங்கள் நடப்பதிலும், ஊழலுக்கு எதிரான மக்களின் கோபத்தை அரசுக்கு புரிய வைப்பதிலும் அன்னா ஹசாரே வெற்றி பெற்றிருக்கிறார்.
very correct, though Anna's efforts are commendable, we are now in a new danger of putting this personality cult over the purpose... moreover by demanding simplistically that things should be done overnight borders along being undemocratic....
ReplyDeleteThis is what probably what Dr.Ambedkar warned us against - Group Anarchy!
Though the passion they exhibit is inspiring Anna and team and also the public should understand that we cannot afford to make India an oligopoly of institutions like supreme court, parliament and lok pal!
A lok pal with PM & Judiciary outside its ambit can be welcomed. The top judges can be brought under a strong Judiciary Accountability Bill....
We should remember that we did not go the Pakistan way because in India the power did not rest in one place, any one could be checked by someone else in the system.... A lokpal which does not have this as its spirit is a threat to Indian democracy.......
My views.....
Excellent Krishna..
ReplyDeleteHere they dont know the facts at all what about the ill da
If we speak the approach of Anna Hazare is not correct means, they are calling as unpatriotic person da.. (Ex:-Arundhati Roy). Even when i wne to beach last week, nothing much da... (They not even got permission from Police to gather in beach at all da. These people are shouting about the corruption)..
Everyone is rasing slogan that "Dont get bribe.. dont get bribe" but none came forward to say that "We must not give bribe" (even the organisers)
Media is worst 'o' worst da..
They even forget to focus of 2G case, in which Kani and Raja accused PM directly...