Sunday, December 25, 2011

கூடங்குளம் அணு மின் நிலையம்

கூடங்குளம் அணு மின் நிலையம் விரைவில் செயல்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். "அணு மின் நிலையம் செயல்படுவதற்கு முன், மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்' என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார். "அ.தி.மு.க., அரசு அமைந்ததும் மின் வெட்டு பறந்து போகும்' என்று தேர்தல் காலத்தில் மக்களுக்கு வாக்குறுதி அளித்தார். கூடங்குளம் அணு மின் நிலையமும், கல்பாக்கம் விரிவாக்கத் திட்டமும் செயல்படும்போது, மின்வெட்டு என்ற பேச்சே வராது. எனவேதான் முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றதும் இந்த இரு திட்டங்களையும் விரைவில் முடித்து செயல்படுத்த வேண்டும் என்று பிரதமரை கேட்டுக் கொண்டார். கூடங்குளம், கல்பாக்கம் திட்டங்கள் தவிர வேறு எந்த மின் உற்பத்தித் திட்டமும் இப்போது செயல்படும் நிலையில் இல்லை; காலம் கருதி காத்திருக்க வேண்டும். தற்போது தமிழகத்தில் நீர் மின் திட்டங்கள் முழு அளவில் இயங்குகின்றன. ஆனாலும், தமிழகம் கடுமையான மின் வெட்டை சந்தித்துக் கொண்டிருக்கிறது. தலைநகர் சென்னையில் வேண்டுமானால் ஒரு மணி நேர மின்வெட்டு இருக்கலாம். ஆனால், பல மாவட்டங்களில் 8 மணி நேரம் வரை மின்வெட்டு உள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மின்வெட்டால் சிறு தொழில்கள் முடங்கி வருகின்றன. அதனால் லட்சோப லட்ச தொழிலாளர்கள் வேலை இழக்கும் பரிதாப நிலை உருவாகி வருகிறது. இன்னும் மூன்று மாதங்களில் கோடை வெயில் கொளுத்தப் போகிறது. நீர் மின் நிலையங்களின் உற்பத்தியும் குறையும். அப்போது, 12 மணி நேர மின்வெட்டா? விவசாயமும், தொழில் துறையும் ஸ்தம்பித்துப் போய்விடும். கடந்த, ஆறு மாதத்தில், மின் வாரியத் தலைவராக மூன்று பேர் வந்து போயிருக்கின்றனர். தலைமைப் பொறியாளராகவும் மூன்று பேர் வந்து சென்றிருக்கின்றனர். இன்றைக்கு பதவியில் இருப்பவர்களும், என்றைக்கு தங்களை தூக்கி அடிப்பார்களோ என்ற அச்சத்தில் தான் இருக்கின்றனர். இனி, பயம் கொள்ளத் தேவையில்லை. அப்படித் தூக்கி அடித்தவர்களை, முதல்வர் ஒட்டுமொத்தமாக தூக்கி எறிந்து விட்டார். இப்போது, மின் கட்டணத்தை உயர்த்துவது என்று முடிவு செய்திருக்கின்றனர். எந்த அளவிற்கு உயர்த்துவது என்று ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். மின் தட்டுப்பாடு நீங்கிய பின்னர், கட்டணத்தை உயர்த்தினால் கூட மக்கள் ஏற்றுக்கொள்வர். எப்போது மின்சாரம் வரும், எப்போது போகும் என்று தெரியாத நிலையில், கட்டணத்தை உயர்த்துவது சரியாக இருக்குமா? பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி நிறுவனம், ஒரு யூனிட் மின்சாரம், 2 ரூபாய் 15 காசு என்று தருகிறது. கூடங்குளம் உற்பத்தி செய்யும்போது இன்னும் மலிவான விலைக்கு நமக்கு மின்சாரம் கிடைக்கும். இன்றைக்கு தனியாரிடம் என்ன விலை கொடுத்து மின்சாரம் வாங்குகிறோம் தெரியுமா? ஒரு யூனிட், 16 ரூபாய். கோடை காலங்களில் அதை, 17 ரூபாயாக உயர்த்தி விற்பனை செய்கின்றனர். இப்படி, 2,000 மெகாவாட் மின்சாரம் வாங்குவதென்றால் என்ன நடைபெறும்? மக்களுக்கு எவ்வளவு மின் கட்டணத்தை உயர்த்தினாலும், கொள்ளை விலை கொடுத்து வாங்க முடியாது. எனவே, பொதுத்துறை மின் உற்பத்தியைத் துரிதப்படுத்த வேண்டும். அந்த நோக்குடன்தான் கல்பாக்கம் அணு மின் நிலையம் உதயமானது. கூடங்குளம் மின் நிலையம் உருவாகி வருகிறது. ஆற்றில் ஒரு காலையும், கரையில் ஒரு காலையும் வைத்து நீச்சல் அடிக்க முடியாது. ஆனால், தமிழக அரசு அந்த நிலையில்தான் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்களின் அச்சத்தைப் போக்கும் வரை கூடங்குளம் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா, டில்லியை கேட்டுக் கொண்டார். கூடங்குளம் இன்று நேற்றல்ல, 10 ஆண்டுகளாக படிப்படியாக உருவாகி வருகிற நிறுவனம். அப்போதெல்லாம் மக்கள் அச்சப்பட்டதில்லை; சுற்றுப்புற கிராம மக்கள் கூடங்குளம் பணிகளுக்கு வந்து சென்றனர். கல்பாக்கம் நிலையம் கண்டு மக்கள் அச்சப்பட்டனரா, அச்சப்படுகின்றனரா? கூடங்குளம் கண்டு நேற்று வரை மக்கள் அச்சப்பட்டனரா? இல்லை. இன்று அவர்களை அச்சம் ஆட்டிப்படைக்கிறதாம். கடந்த, 10 ஆண்டுகளாக அவர்கள் எண்ணிப் பார்க்காத அச்சம், இன்று எப்படி பிறந்தது? பைபிளை கற்றுக் கொடுக்க வேண்டியவர்கள், மக்களுக்கு அச்சத்தை, பயத்தை கற்றுக் கொடுத்திருக்கின்றனர். ஆமாம்... கூடங்குளம் எதிர்ப்பு கிளர்ச்சிக்காரர்கள், தினம் ஒரு காரணம் கூறி மக்களை அச்சம் கொள்ளச் செய்திருக்கின்றனர். கூடங்குளம் செயல்பட்டால், கதிர்வீச்சு ஏற்படும் என்கின்றனர். 17 ஆண்டுகளாக செயல்படும் கல்பாக்கத்திலோ, கர்நாடகாவிலோ இதுவரை அத்தகைய ஆபத்து ஏற்பட்டதில்லை. இதுவரை இந்தியாவில் இயங்கும் எந்த அணு மின் நிலையத்திலும் கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டதில்லை. 
கூடங்குளம் செயல்பட்டால், புற்றுநோய் வரும் என்று கிளர்ச்சிக்காரர்கள் புதிய புரளியை கிளப்பினர். சென்னைக்கு அருகே செயல்படும் கல்பாக்கத்தில், இத்தனை ஆண்டுகளில் எவருக்கும் புற்றுநோய் வந்ததாகத் தகவலே இல்லை. "கொல்லாதே கொல்லாதே ஒரு சில முதலாளிகளுக்காக அப்பாவி மக்களைக் கொல்லாதே' என்று, இப்போதுதேவாலயங்களில் மக்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கின்றனர். கூடங்குளம் எந்தத் தனி நபரின் உடைமை அல்ல; அது தேசத்தின் சொத்து; நமது சொத்து. "கூடங்குளம் செயல்பட்டால், மூன்று மாவட்டங்களில் குழந்தைகளே பிறக்காது' என்பது அண்மைக்கால அவதூறுப் பிரசாரம். அப்படியானால், கல்பாக்கத்தைச் சுற்றியுள்ள மூன்று மாவட்டங்களிலும் இதுவரை குழந்தைகளே பிறந்திருக்கக் கூடாது. கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டத்தின் ஊற்றுக்கண் எங்கே இருக்கிறது என்று பார்க்க வேண்டும். கடந்த அக்டோபர் 24 - 26  தேதிகளில், திருச்சியில் தமிழக ஆயர் (பாதிரியார்கள்) பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தான் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தக் கூட்டம் தெரிவித்த கருத்துகளுக்கு, மத்திய பேச்சு வார்த்தைக் குழு விளக்கமும் அளித்து விட்டது. எனவே, கூடங்குளம் போராட்டம் என்பது, மக்கள் போராட்டம் அல்ல. திருச்சியில் கூடிய பாதிரியார் பேரவையின் முடிவை, கூடங்குளத்தைச் சுற்றியுள்ள சில மாதா கோவில்கள் செயல்படுத்துகின்றன. "இனி, புதிதாக அணு மின் நிலையங்கள் தேவையில்லை' என்று பாதிரியார்கள் கூறுவார்களானால், அதில் நியாயம் இருக்கும். ஆனால், அந்த பாதிரியார்களின் கண் முன்னே கடந்த, 10 ஆண்டுகளாக உருவாகி,  உற்பத்திக்கு தயாராக இருக்கும் கூடங்குளத்தை மூடு என்றால், அதில் என்ன நியாயம் இருக்க முடியும்? தமிழகம் எவ்வளவு பெரிய மின் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி இருக்கிறது என்பது ஆயர்களுக்குத் தெரியாதா? தமிழகத்தில் ஆளும் கட்சியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியும், சோம்பல் முறித்துக் கொண்டிருக்கிறது. கூடங்குளம், கல்பாக்கம் விரிவாக்கத் திட்டமும் உடனடியாக செயல்படவில்லையென்றால், தொழில்நிறுவனங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும். அந்த அபாயம் மக்களுக்கு தெரிகிறது. அறுபது ஆண்டுகளில் ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் மூன்றே அணு மின் நிலைய ஆபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவைகள் தந்த பாடத்தின் அடிப்படையில்தான் கூடங்குளம் நவீன பாதுகாப்புடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. "சுனாமியே வந்தாலும், கூடங்குளத்திற்கு ஆபத்து இல்லை' என்று அப்துல் கலாமிடமிருந்து, முத்துநாயகம் வரை அனைத்து விஞ்ஞானிகளும் ஒருமனதாக தெரிவித்து விட்டனர். அணு மின் நிலையங்களின் செயல்பாடுகள் பற்றி விஞ்ஞானிகள் தான் தீர்ப்பு சொல்ல முடியும்;பாதிரியார்கள் அல்ல. அண்மையில் பிரதமர் மன்மோகன் சிங் ரஷ்யா சென்றார். உடனே, அதைக் கண்டித்து கிளர்ச்சிக்காரர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். அதே மன்மோகன் சிங், மாமியார் வீட்டிற்கு போவது போல மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அமெரிக்கா சென்றார், செல்கிறார். நாட்டிற்கும், நாடாளு மன்றத்திற்கும் தெரியாமல் அமெரிக்காவோடு ரகசியமாக அணு மின் உலைகாரர்களுடன் ஒப்பந்தம் கண்டார். அதை பாதிரியார்களும் கண்டிக்கவில்லை; என்ன காரணம்?
மத்திய அரசு அனுப்பிய நிபுணர் குழுவினர், கிளர்ச்சிக்காரக் குழுவினருடன் மூன்று முறை பேச்சு வார்த்தை நடத்தினர். முதல் சுற்று சுமுகமாக முடிந்தது. இரண்டாவது சுற்றின்போது, கூடங்குளம் அணு மின் நிலைய ஆவணங்களை கிளர்ச்சிக் குழு  கேட்டது. சந்தேகம் பிறக்காதா என்ன? அத்துடன், 38 கேள்விகள் அடங்கிய பட்டியலை அளித்தது; மத்திய குழு பெற்றுக் கொண்டது. அண்மையில் மூன்றாவது சுற்று பேச்சு வார்த்தை நடந்தது. 38 கேள்விகளுக்கான பதிலை எழுத்துப்பூர்வமாகவே மத்திய குழு அளித்தது. அடுத்த இன்னும், 70க்கும் மேற்பட்ட கேள்விப் பட்டியலை அளித்தது. அத்துடன் நிற்கவில்லை; நிபுணர் குழுத் தலைவர், முத்து நாயகத்திடம் கேள்வி மேல் கேள்வி கேட்டனர். அவர் பொறுமையாக பதில் சொன்னார். ஆனால், கிளர்ச்சிக்குழு தலைவர் வெளியே வந்தார். "பதில்கள் எங்களுக்கு திருப்தி தரவில்லை' என்றார். "நாங்கள் ஒரு நிபுணர் குழு அமைத்திருக்கிறோம். அந்தக் குழுவுடன் மத்திய அரசு பேச வேண்டும்' என்றனர்.
கேட்டது. சந்தேகம் பிறக்காதா என்ன? அத்துடன், 38 கேள்விகள் அடங்கிய பட்டியலை அளித்தது; மத்திய குழு பெற்றுக் கொண்டது. அண்மையில் மூன்றாவது சுற்று பேச்சு வார்த்தை நடந்தது. 38 கேள்விகளுக்கான பதிலை எழுத்துப்பூர்வமாகவே மத்திய குழு அளித்தது. அடுத்த இன்னும், 70க்கும் மேற்பட்ட கேள்விப் பட்டியலை அளித்தது. அத்துடன் நிற்கவில்லை; நிபுணர் குழுத் தலைவர், முத்து நாயகத்திடம் கேள்வி மேல் கேள்வி கேட்டனர். அவர் பொறுமையாக பதில் சொன்னார். ஆனால், கிளர்ச்சிக்குழு தலைவர் வெளியே வந்தார். "பதில்கள் எங்களுக்கு திருப்தி தரவில்லை' என்றார். "நாங்கள் ஒரு நிபுணர் குழு அமைத்திருக்கிறோம். அந்தக் குழுவுடன் மத்திய அரசு பேச வேண்டும்' என்றனர்.

No comments:

Post a Comment