Saturday, December 31, 2011

Tamil Cinema in 2011

* 2011-ல் அதிக படங்கள் வெளிவந்த நாயகர் பட்டியலில் நடிகர் தனுஷ் 5 படங்களில் ‌தோன்றி முதலிடத்திலும், நடிகர் ஜீவா 4 படங்களில் நடித்து 2வது இடத்திலும் இருக்கிறார்.
* நடிகையை ‌ப‌ொறுத்தமட்டில் அஞ்சலி 5 படங்களில் நடித்து முதலிடத்தில் உள்ளார்.
* எட்டு படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் தோன்றி பிரகாஷ்ராஜ் நம்பர்-1 வில்லனாக உள்ளார்.
* சுமார் 13 படங்களில் காமெடியனாக நடித்த வகையில் சந்தானம் நம்பர்-1 காமெடியனாகவும், அவருக்கு அடுத்தபடியாக பத்து படங்களில் ‌காமெடியாக நடித்த வகையில் கஞ்சா கருப்பு 2ம் இடத்திலும் இருக்கின்றனர்.
* 2011-ல் அதிக படங்களை தயாரித்த நிறுவனம் என 4 படங்களை தயாரித்துள்ள ஏ.ஜி.எஸ்.எண்டர்டெயின்மெண்ட் பெயரெடுத்துள்ளது* தலா இரண்டு படங்களை இயக்கியதன் மூலம் முதலிடத்தில் இருக்கின்றனர் நடிகர் கம் இயக்குநர்கள் தியாகராஜனும், பிரபுதேவாவும்.
* தலா 6 படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் ஸ்ரீகாந்த் தேவா, யுவன்சங்கர் ராஜா, தமன் ஆகிய மூவரும் முன்வரிசையிலும், சுந்தர்.சி.பாபு-5 படங்களுக்கும், வித்யாசாகர், ஜி.வி.பிரகாஷ் தலா - 4 படங்களுக்கும், ஹாரிஸ், தினா, விஜய் ஆண்டனி தலா 3 படங்களுக்கும் என அடுத்தடுத்த இடங்களிலும் இடம் பிடித்துள்ளனர்..* ஏ.ஆர்.ரஹ்மான் 2011ம் ஆண்டில் எந்த ஒரு தமிழ் படத்திற்கும் இசையமைக்கவில்லை. மாறாக முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளாகி தமிழகத்தில் தடை செய்யப்பட்ட டேம்-999 ஆங்கில படத்தின் பாடல்களுக்கு ஆஸ்கர் விருதுகளை தரலாம் என ஆக்ராவில் நடந்த விழா ஒன்றில் ஏடாகூடமாக பேசி பின் வருத்தம் தெரிவித்ததோடு சரி!
* பாடலாசிரியர் நா.முத்துக்குமார் 2011ம் ஆண்டில் 37 படங்களுக்கு பாடல்கள் எழுதி முதலிடத்தை பிடித்திருக்கிறார்.
விழா கொண்டாடிய படங்கள்:-
200 நாட்கள் : கோ
100 நாட்கள் : மைனா, காவலன், சிறுத்தை, வானம், காஞ்சனா, தெய்வத்திருமகள், எங்கேயும் எப்போதும், சிங்கம்புலி, இளைஞன், விருதகிரி, லத்திகா. (இதில் சில படங்கள் 100 நாட்கள் ஓட்டப்பட்டதும் கவனிக்கத்தக்கது.)
தேசிய விருதுகள்:-
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 2011ம் ஆண்டில் ஏராளமான தேசிய விருதுகளை தமிழ் சினிமா அள்ளி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 14 ‌தேசிய விருதுகளை தமிழ் சினமா அள்ளி வந்தது. குறிப்பாக ஃபைவ் ஸ்டார் பிலிம்ஸ் தயாரித்த ஆடுகளம் படத்திற்கு 6 தேசிய விருதும், வெற்றிமாறனுக்கு சிறந்த இயக்குநருக்கான விருதும் அடங்கும். தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு 2 தேசிய விருதுகளும், மைனா படத்திற்காக தம்பி ராமையாவுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. சிறந்த நடிகர் தனுஷ், நடிகை சரண்யா, இயக்கநர் சீனு ராமசாமி, வெற்றி மாறன் ஆகியோருக்கு ஜனாதிபதி தேசிய விருது வழங்கிய அதே மேடையில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தருக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டில் கரங்களால் தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment