Tuesday, April 24, 2012

ஆசியாவிலேயே பெரிய சோலார் பவர் ஸ்டேஷன்!!!

மின்சார பற்றாக்குறைக்கு என்ன செய்யலாம் என்று எல்லா மாநில அரசுகளும் ரூம் போட்டு யோசித்து வருகின்றன. குஜராத்தில் அவற்றுக்கு முன்னோடியாக ஆசியாவிலேயே பெரிய ‘சோலர் பவர் ஸ்டேஷன்’ அமைத்துள்ளார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. மோடியிடம் அரசியல் விஷயங்களில் ஆலோசனை கேட்கும் தமிழக முதல்வர், சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கவும் பேசினால் நன்றாக
இருக்கும்.

சூரிய ஒளி மின்சார உற்பத்தி அதிகரித்தால்... டீசல், நிலக்கரி... போன்ற பொருட்களுக்கு தேவையே இருக்காது. அதனால், அரசுக்கு பெரிய அளவில் வரி வருவாய் இழப்பு ஏற்படும். கூடவே டீசல், நிலக்கரி... இறக்குமதி மூலம் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு கிடைத்து வரும் கமிசனும் கட் ஆகிவிடும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். அதனால்தான், இந்த விஷயத்தில் அடக்கி வாசிக்கின்றன மத்திய, மாநில அரசுகள்.

No comments:

Post a Comment