டெசோவை [TESO- Tamil Eelam Supporters Organization] தன்னிச்சையாக இருக்கும் அங்கத்தினர் யாரையும் கேட்காமல் கருணாநிதி கலைத்த பொழுது, வீரமணியும், நெடுமாறன் அய்யாவும், விடுதலை சம்பந்தம் அவர்களும் கருணாநிதியை சந்தித்து ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு 'பிராபகரன் என்னை மதிக்கவில்லை அவருக்காக நான் எதையும் செய்ய முடியாது' என்று கூறி இருக்கிறார். வீரமணியும், நெடுமாறன் அய்யாவும் ஈழமக்கள் முக்கியமா? பிராபகரன் முக்கியமா? என்று கேட்டதற்கு இதை பற்றியெல்லாம் பேசவேண்டாம்
பிராபகரன் என்னை மதிக்கவில்லை நான் இயக்கங்கள் அனைவரையும் அழைத்த பொழுது வந்து என்னை சந்திக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்.
அதற்கு முன் நடந்த திமுக பொது குழு கூட்டத்தில் பாலஸ்தின விடுதலை ஆதரவாக தீர்மானம் இயற்றி இருந்தார்களாம், விடுதலை சம்பந்தம் கருணாநிதியின் பால்யகால நண்பர் அவர் உடனே “பாருங்கள் கலைஞர் நீங்கள் பாலஸ்தீன விடுதைலையை ஆதரித்து தீர்மானம் இயற்றி இருக்கிறீர்கள் ஆனால் இன்று வரை அந்த திமிர் பிடித்த யாசர் அராபத் உங்களை வந்து சந்திக்கவில்லை, என்ன திமிர் அவருக்கு” என்று சொல்லியிருக்கிறார்.
உடனே கலைஞர் சத்தம் போட, சம்பந்தம் அவர்களும் விடாமல் நான் இதை விடமாட்டேன் யாசர் அராபத்தை கண்டிப்பாக இதற்காக கேள்வி கேட்பேன் என்று விடாமல் வாதிட்டு இருக்கிறார்.
வீரமணியும் நெடுமாறான் அய்யாவும் பிரச்சனை பெரிதாகிவிடக் கூடாது சம்பந்தம் அவர்களை வெளியில் அழைத்து வந்துவிட்டனராம்...... இப்பொழுது தெரியும் டெசோ என்பது எதற்காக... கருணாநிதியின் சுயநல அரசியலுக்கானது மட்டுமே..
No comments:
Post a Comment