காங்கிரஸ் கட்சி உறுப்பினர் என். ஆர். ரங்கராஜன் (பட்டுக்கோட்டை) பஸ் கட்டண உயர்வு பற்றிப் பேசும்போது, 'ஷார்ட் ஜம்ப்' என்று சொல்லும் வகையில் பஸ் கட்டணத்தைச் சிறிது சிறிதாக உயர்த்தி இருக்கலாம் என்று சொல்ல, முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு, 'மத்திய அரசு அடிக்கடி 'ஷார்ட் ஜம்ப்' செய்து டீசல் விலையை உயர்த்தியதால் வேறுவழியில்லாமல் நாங்கள் 'லாங் ஜம்ப்' செய்ய வேண்டியதாகிவிட்டது' என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.
டீசல் விலை உயர்வு, பேருந்து உதிரி பாகங்கள் விலை உயர்வு, கடந்த பத்து ஆண்டுகளாக கட்டணம் உயர்த்தப்படாத நிலைமை எல்லாமும் பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது என்பது எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும்கூட புரிந்த விவகாரம்தான். இருப்பினும், பஸ் கட்டண உயர்வில் தமிழக மக்களைத் தற்போது பாதித்துக் கொண்டிருப்பது, 'ஷார்ட் ஜம்ப்'போ, 'லாங் ஜம்ப்'போ அல்ல; 'ராங் ஜம்ப்' என்பதை அரசின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டியது நமது கடமை.
தமிழ்நாட்டில் சாதாரண பேருந்துகளுக்கு உயர்த்தப்பட்டுள்ள கட்டணம் கிலோமீட்டருக்கு 42 காசுகள் (பழைய கட்டணம் 28 காசுகள்). செமி டீலக்ஸ் பேருந்துகளுக்கு 56 காசுகள், சூப்பர் டீலக்ஸ் பேருந்துகளுக்கு 60 காசுகள், அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளுக்கு 70 காசுகள். பிரச்னை இந்தக் கட்டண உயர்வல்ல. அரசுப் போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள்.
சாதாரண பேருந்துகளுக்கு கட்டணம் குறைவாக நிர்ணயிக்கப்படுவதற்கு முதல் காரணம், அடித்தட்டு மக்களும் நடுத்தர மக்களும் இதைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பதும், மக்களுக்கு பஸ் கட்டணம் ஒரு அன்றாட மனச்சுமையாக மாறிவிடக்கூடாது என்பதாலும்தான். ஆனால், போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகளுக்கு அதிமுக அரசின் மீது என்ன கோபமோ தெரியவில்லை, இந்த அடிப்படை நோக்கத்துக்கு எதிராகவே செயல்படுகின்றனர். சாதாரண பேருந்துகளை மிகக் குறைவாகவும், எக்ஸ்பிரஸ் பேருந்துகளை அதிக எண்ணிக்கையிலும் இயக்குகின்றனர். இந்த 'ராங் ஜம்ப்'தான் மக்களைப் பெரிதும் பாதித்துக் கொண்டிருக்கிறது. இதை அமைச்சர் தெரிந்து வைத்திருக்கிறாரா என்பதுதான் நமது சந்தேகம்.
தமிழக சட்டப்பேரவையில் ஒரு கேள்விக்குப் பதில் அளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர், 'அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 19,000-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் 9,389 பேருந்துகள் சாதாரண கட்டணத்தில் இயக்கப்படுகின்றன' என்று கூறியுள்ளார். அவருக்குத் தரப்பட்டிருக்கும் புள்ளிவிவரப்படி பார்த்தாலுமே கூட 50 விழுக்காட்டுக்கும் குறைவான பேருந்துகள்தான் சாதாரண கட்டணத்தில் இயக்கப்படுகின்றன. இதைவிடவும் மிகக் குறைவான எண்ணிக்கையில்தான் சாதாரண கட்டணப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்பதுதான் யதார்த்த உண்மை.
சாதாரணப் பேருந்தில் ரூ.30 கட்டணம் என்றால், எக்ஸ்பிரஸ் பேருந்தில் ரூ.39 அல்லது ரூ.40 ஆக இருக்கின்றது. சாதாரண பேருந்துகளுக்கும் எக்ஸ்பிரஸ் பேருந்துகளுக்கும் வண்ண மாறுபாடுகள் இல்லை என்பதால், எல்லாப் பேருந்துகளையும் - டவுன் பஸ்ஸைவிட கேவலமான நிலைமையில் இருந்தாலும் - நினைத்த மாத்திரத்தில் எக்ஸ்பிரஸ் என்று ஒட்டிவிட முடிகிறது. கட்டணத்தை உயர்த்திக்கொள்ள முடிகிறது. ஆனாலும் எல்லா நிறுத்தங்களிலும், சாதாரண கட்டணப் பேருந்து போல நின்று நின்றுதான் செல்கிறார்கள். இந்த உண்மை அமைச்சருக்குத் தெரியுமா?
தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளைக் காட்டிலும் தனியார் பேருந்துகளுக்காக பயணிகள் காத்திருந்து ஏறிச்செல்லும் அவல நிலை உருவாகிக்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் சுமார் 5,000 தனியார் பேருந்துகள் சாதாரணக் கட்டணத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் நல்ல இருக்கைகள், டிவியில் படம், இசை, படுவேகம், சிறிய ஊர்களிலும் பேருந்தை நிறுத்தி இறக்கிவிடுதல் என்று பலவற்றாலும் பயணிகளை ஏற்கெனவே ஈர்த்துக்கொண்டிருக்கின்றன. இப்போது இவற்றில் கட்டணமும் குறைவு என்பதால், சாதாரண நாள்களிலும்கூட தனியார் பேருந்துகள் நிரம்பி வழிகின்றன. அரசுப் பேருந்துகள் கூவி அழைத்தாலும் அதில் பயணிகள் ஏறத் தயங்குகின்றனர். இது போக்குவரத்து அமைச்சருக்குத் தெரியுமா?
பஸ் கட்டண உயர்வால் ஏற்பட்டுள்ள கெட்ட பெயரை நீக்கத் தமிழக அரசு விரும்புமேயானால், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இயக்கும் சாதாரண கட்டணப் பேருந்துகளின் எண்ணிக்கையை 75 விழுக்காடாக உயர்த்த வேண்டும். சாதாரண கட்டணப் பேருந்து, எக்ஸ்பிரஸ் கட்டணப் பேருந்து என்பதை வாகனத்தின் வண்ணத்தாலேயே நிரந்தரமாக வேறுபடுத்திக் காட்ட வேண்டும்.
அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளைக் குறைந்த கட்டணத்தில் இயக்குவதால் ஏற்படும் இழப்புகளை மக்கள் வரிப்பணத்திலிருந்து அரசு ஈடுகட்டினால் தவறே இல்லை. பொதுப் போக்குவரத்துத் துறை என்பதே மக்கள் நலனுக்காகவும், தனியார் வாகனங்கள் அதிகரிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும்தான் எல்லா நாடுகளிலும் செயல்படுகின்றன. ஆனால், போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாகச் சீர்கேடுகளுக்கும் தவறான செயல்பாடுகளுக்கும் மக்கள் வரிப்பணம் வீணாவதை எப்படி ஏற்றுக் கொள்வது?
தனியார் துறை வசதியான இருக்கைகளுடனான புதிய பஸ்களுடன் குறைந்த கட்டணத்தில் லாபகரமாக இயங்க முடியுமென்றால், அரசுப் போக்குவரத்து மட்டும் ஏன் காயலான் கடைச் சரக்குகளாகத் தோற்றமளிக்கும் பஸ்களை நஷ்டத்தில் இயக்கிக் கொண்டிருக்கிறது?
அரசும் தொழிற்சங்கத் தலைவர்களும் உட்கார்ந்து பேசி, பொதுப் போக்குவரத்துத் துறையை லாபகரமாக நடத்தாவிட்டாலும் மக்கள் விரும்பிப் பயன்படுத்தும் வகையில், நிர்வாகக் குறைபாடுகளைக் குறைத்து செயல்பட வைப்பதுதான் புத்திசாலித்தனம். அரசு இதைச் செய்யத் தவறினால், போக்குவரத்துக் கழகங்கள் வழக்கம் போல நஷ்டத்தில்தான் இயங்கும். கடைசியில் தனியார் மயம்தான் தீர்வு என்றாகிவிடுமே என்பதுதான் நமது கவலை!

No comments:
Post a Comment