நக்கீரன் ஆபீஸ் மீது அ.தி.மு.க.,வினர் தாக்குதல்
முதல்வர் ஜெ., குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டமைக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் நக்கீரன் இதழை தீ வைத்து அ.தி.மு.க.,வினர் கொளுத்தினர் . சென்னையில் உள்ள நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.க., தொண்டர்கள் கல் மற்றும் உருட்டுக்கட்டையால் வீசி அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இதனையடுத்து அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.
நக்கீரன் இதழில் சசிகலாவுடனான பிரச்னையில் ஜெ., இப்போது எவ்வாறு நடந்து கொள்கிறார், அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று அட்டைப்படத்தில் ஜெ., சசிகலா படத்துடன் செய்தி வெளியானது. இதில் கடுமையான வார்த்தைகள் உபயோகித்ததாக அ.தி.மு.க,வினர் இன்று ஆவேசமுற்றனர். மாநிலம் முழுவதும் மதுரை, ஈரோடு, கரூர், நாமக்கல், அரியலூர், ராசிபுரம், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி, வால்பாறை, திருநெல்வேலி, உள்ளிட்ட பகுதிகளில் இந்த கட்சியின் எம்.எல்.ஏ., மற்றும் கவுன்சிலர்கள் இந்த பத்திரிகையை தீ வைத்து எரித்தனர். சில கடைகளில் அ.தி.மு.க,வினர் புகுந்து புத்தகங்களை அள்ளி சென்றனர்.
பத்திரிக்கை சுதந்திரம் என்கிற பெயரில் பல தரமற்ற பத்திரிக்கைகள் இது போன்ற விஷமத்தனமான கருத்துக்கள், மற்றும் தரம் கெட்ட வார்த்தைகளை உபயோகித்து வருகின்றன. சட்டபூர்வமான நடவடிக்கை என்றால் இது போன்ற பத்திரிக்கைகளை நிரந்தரமாக தடை செய்தால்தான் அது உண்மையான ஜனநாயாகமாக திகழும். ஒரு சில பத்திரிக்கைகளை இப்படி நிரந்தரமாக தடை செய்தால்தான் மற்ற பத்திரிக்கைகளுக்கு ஒரு பாடமாக இருக்கும். இது போன்ற விஷயங்களில் பத்திரிக்கைக்கு பட்சாதபமோ,அனுதாபமோ காட்ட கூடாது.
இந்த நக்கீரன் கோபால் தான் எலெக்ஷன் ரிசல்ட் DMK 160 இடமும் ADMK வெறும் 40 இடம் மட்டும் வரும்முன்னு எழுதுன முட்டாள் பய திருந்தமாட்டான்.
பத்திரிகை சுதந்திரம் அராஜகம் கொண்டு ஒடுக்கப்படுவது கண்டிக்க தக்கதுதான். ஆனால் நக்கீரன் பத்திரிகை கீழ்த்தரமான செய்திகளையும் பொய்களையும் நம்பி பிழைப்பு நடத்துவதும் கண்டிக்க வேண்டியது, இதற்கு கருணாநிதி கண்டனம் செய்திருப்பது நகைப்புக்குரியது.
No comments:
Post a Comment