Thursday, January 19, 2012

ஆன்லைன் ஆப்பு

செய்தி: ஊழ‌ல்வாதிக‌ளுக்கு காங்கிர‌ஸில் இட‌மில்லை ‍ ராகுல் காந்தி
க‌மென்ட்: அப்போ வாங்க‌ப்பா... காங்கிர‌ஸைக் க‌லைச்சுட‌லாம்!..
----------------------------------------

செய்தி: நேரு குடும்ப‌ச் சிலைக‌ளையும் துணியைப் போட்டு மூட‌ வேண்டிய‌துதானே? ‍ மாயாவ‌தி
க‌மென்ட்: நேரு டிரெஸ் போட்டிருக்கிறாரு, யானை போட்டிருக்கா?

----------------------------------------

செய்தி:அணைப் பிர‌ச்னைக்கு பேச்சுவார்த்தை மூல்ம் தீர்வு காண‌லாம் ‍ -அப்துல் க‌லாம்
க‌மென்ட்: இந்த‌ ம‌னுஷ‌ன் எந்த‌ நூற்றாண்டுல‌ப்பா இருக்கிறார்.. பொழைக்க‌த் தெரிய‌ல‌யே!

----------------------------------------

செய்தி: மீண்டும் ச‌த‌த்தை த‌வ‌ற‌விட்டார் ச‌ச்சின்
க‌மென்ட்: (ஐசிசியிட‌ம்) 'எக்ஸ்கியூஸ் மீ, என்கிட்ட‌ ரெண்டு 50 இருக்கு, அத‌ வ‌ச்சிக்கிட்டு ஒரேயொரு 100 த‌ர‌ முடியுமா?'
----------------------------------------
செய்தி: ஆட்ட‌த்தின் இடையே ந‌டுவிர‌லை உய‌ர்த்திய‌ கோஹ்லிக்கு அப‌ராத‌ம்
க‌மென்ட்: ப‌ய‌லுக்கு வ‌ந்த‌ அவ‌ச‌ர‌த்துல் எந்த‌ விர‌லைக் காட்ட‌ணும்னு தெரியாமக் காட்டிட்டான் !! அர்ஜென்ட்!
--------------------------

No comments:

Post a Comment